கூட்ட நெரிசலில் 123 பேர் பலியான துயரம்

தீக்கதிர்

கூட்ட நெரிசலில் 123 பேர் பலியான துயரம்

ஹாத்ரஸ் கூட்ட நெரிச லில் 123 பேர் பலி யான துயர சம்ப வத்திற்குக் காரணமான அனைவர்  மீதும் கடும் நடவடிக்கை எடுக்க  வேண் டும்; போதிய பாதுகாப்பு  ஏற்பாடுகளைச் செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்ட ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசின் அதிகாரி களே இந்த உயிர்ப் பலிக்குப் பொறுப்பேற்க வேண்டும்  என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.கே. ஸ்ரீமதி, பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது:

பேரழிவுகரமான கூட்ட நெரிசல்

ஜூலை 2 அன்று உத்தரப்பிர தேசத்தின் ஹாத்ரசில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்கிற போலே பாபாவின் சத்சங்கத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான கூட்ட நெரிசலால் அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் (AIDWA) அதிர்ச்சியும் ஆத்தி ரமும் அடைந்துள்ளது. இந்த நெரி சலில் கிட்டத்தட்ட 123 பேர், பெரும்  பாலும் பெண்கள் உயிரிழந்துள்ள னர். காயமடைந்தவர்களின் எண் ணிக்கை தெரியவில்லை.

மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தத் தவ றிய யோகி அரசின் அலட்சியப் போக்கை இந்த சோக நிகழ்வு அப்  பட்டமாக நினைவூட்டுகிறது. போது மான ஏற்பாடுகளும், கூட்டத்தைக்  கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் இல்லாதது, இந்த தவிர்க்கக்கூடிய பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

நம்பிக்கையைச் சுரண்டும் பாபாக்கள்

தனிப்பட்ட ஆதாயத்திற்காக சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து துன்பத்திலுள்ள மக்களை ஈர்க்கும் ஆன்மீகத் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் பொறுப்பற்ற தன்மை மற்றும் அலட்சியப் போக்கின் பேரழிவுகர மான விளைவுதான் இந்த நெரிசல்.  சுயலாபத்திற்காக நம்பிக்கை சுரண்டப்படுவதை கண்டிக்கி றோம். மேலும், இந்த சத்சங்கத்தை  செய்தவர்கள் மீது அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தாலும், அதில் போலே பாபாவின் பெயர் இல்லை. 

முறையான மருத்துவ உட்கட்ட மைப்பு மற்றும் அவசரகால நட வடிக்கைகளுக்கான வழிமுறை கள் இல்லாததால் 123 பேர் இறந்  துள்ளனர். காலதாமதமான மருத்து வக் கவனிப்பு மற்றும் போதிய சுகா தார வசதிகள் இல்லாதது என்பது  அரசின் சுகாதார அக்கறையின்மை யின் வெளிப்படையான குற்றச்  சாட்டாகும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசலைத் தடுக்காமலும் அதிகாரிகள் அலட்சி யமாக நடந்துகொண்டது, குடிமக்க ளின் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும். 

அரசு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்

அரசு தனது தோல்விகளை ஒப்புக்கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் நடக்கா மல் இருக்க உறுதியான நடவ டிக்கைகளை எடுக்க இந்த சம்ப வம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்  ளது. தங்களது அலட்சியத்திற்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்  டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்க ளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த நெரிசலில் ஈடுபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது. இந்த துயரச் சம்ப வத்தில் உயிரிழந்தவர்களின் குடும்  பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தனிப்பட்ட ஆதாயத்திற்காக சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து துன்பத்திலுள்ள மக்களை ஈர்க்கும் ஆன்மீகத் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் பொறுப்பற்ற தன்மை மற்றும் அலட்சியப் போக்கின் பேரழிவுகரமான விளைவுதான் இந்த நெரிசல். சுயலாபத்திற்காக நம்பிக்கை சுரண்டப்படுவதை கண்டிக்கிறோம். மேலும், இந்த சத்சங்கத்தை செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

- தீக்கதிர்

https://theekkathir.in/News/india/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/123-people-lost-their-lives-in-the-stampede?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1bwpzSeQL79uOA3C61AbOB7P5M140o3M7O54aflqWsqeuxXslTYEs_VQA_aem_HhJxs58n9sFu8d0fdsKysA

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு