அயோத்தி முதல் சம்பல் வரை!
தீக்கதிர்
உத்தரப்பிரதேசம் சம்பல் மாவட்டத் தில் சங் பரிவாரத்தினரின் மனுவை ஏற்று 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மசூதிக்குள் கோவிலுக்கான அடையா ளங்கள் உள்ளனவா என ஆய்வு செய்ய மாவட்ட நீதி மன்றம் அளித்த அனுமதியை தொடர்ந்து உருவான வன்முறையில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நவீன இந்தியாவில் மசூதி இடிப்பு என்பது 32 ஆண்டு களுக்கு முன்பு டிசம்பர் 6இல் பாபர் மசூதி இடிப்பு டன் தொடங்கியது. இதே டிசம்பர் 6 தான் அரசியல மைப்பு சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கர் அவர்க ளின் நினைவு தினம். இந்த தினத்தை திட்டமிட்டே மசூதி இடிப்புக்கு சங் பரிவாரத்தினர் தேர்வு செய்தனர். பாபர் மசூதி குறித்த உச்ச நீதிமன்றம் வழங்கிய 2019 தீர்ப்பு பல விவாதங்களை கிளப்பியது. பின்னர் 1991 வழி பாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்திய பாதகமான வழிகாட்டுதல் பல மசூதிகளை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஆபத்து மசூதிகளுக்கு மட்டுமல்ல; இந்திய மதச்சார்பின்மைக்கும் மத ஒற்றுமைக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் தான் எனில் மிகை அல்ல.
தீர்ப்பு கிடைத்தது! நியாயம் கிடைத்ததா?
பாபர் மசூதி- ராம ஜென்ம பூமி பிரச்சனை குறித்த தீர்ப்பு பல விவாதங்களை கிளப்பியது. சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தீர்ப்பு தரப்பட்டதா; அல்லது வேறு ஏதாவது காரணம் இருந்ததா எனும் விவாதங்கள் கிளம்பின. 1949ஆம் ஆண்டு ஒரு நாள் இரவில் பாபர் மசூதியில் திடீரென ராமர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளை அகற்ற வேண்டும் என அன்றைய பிரதமர் நேரு கோரினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஆதர வாளர் என கருதப்பட்ட உத்தரப் பிரதேசத்தின் அன் றைய முதல்வர் கோவிந்த் வல்லப பந்த் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி சிலைகளை அகற்ற மறுத்தார். இதன் விளைவாக அந்த மசூதி யில் தொழுகைகள் நிறுத்தப்பட்டன. இது கடுமை யான சட்ட மீறல் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பி டுகிறது. அதே போல 1992ஆம் ஆண்டு மசூதி இடிக்கப் பட்டதும் கடுமையான சட்ட மீறல் என்பதையும் தீர்ப்பு குறிப்பிடுகிறது. எனினும் இந்த சட்ட மீறல்களை நடத்தியவர்களிடமே பிரச்சனைக்குரிய நிலம் முழு வதுமே ஒப்படைக்கப்பட்டது. ஏன்? இந்த முடிவை நியாயப்படுத்தும் வகையில் ஏதாவது ஆழமான காரணி கள் உள்ளனவா என்பதை தீர்ப்பு விளக்கவில்லை.
இந்த தீர்ப்பை வழங்கிய அமர்வின் ஒரு உறுப்பி னர் சந்திரசூட். இவர் சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் இந்த தீர்ப்பு எழுதும் பொழுது பல சிந்தனை களினால் மிகவும் அலைக்கழிக்கப்பட்டதாகவும் இந்த தீர்ப்புக்கு வழிகாட்டும்படி கடவுளிடம் வேண்டினேன் எனவும் கூறினார். இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படை யில் மட்டுமல்ல; பல்வேறு காரணிகளும் பின்னால் இருந்தன என்பதுதான் பரவலான மதிப்பீடாக உள்ளது. எனவே இந்த தீர்ப்பு முழு நியாயத்தை வழங்க வில்லை என கருதப்பட்டது. எனினும் இந்த தீர்ப்பை பொதுவாக முஸ்லிம்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதற்கு பின்பாவது மத மோதல்கள் இருக்கக் கூடாது என நினைத்தனர். எனினும் இடது சாரிகள் உட்பட பலரும் பாபர் மசூதியுடன் இடிப்பு நிற்கப் போவது இல்லை என எச்சரித்தனர். அந்த எச்சரிக்கை இப்பொழுது உண்மை என்பது நிரூபண மாகி வருகிறது.
கோவில்களை அழித்த இந்து மன்னர்கள்
சங் பரிவாரத்தினர் மசூதிகளை தமது தாக்குதல்களின் இலக்காக ஆக்குவதற்கு முன்பு மக்களிடையே பல ஆண்டுகளாக சிறிது உண்மையும் பெருமளவு பொய்களையும் கொண்ட பிரச்சாரம் செய்தனர். மத்திய காலத்தில் ஏராளமான கோவில்களை முஸ்லிம் மன்னர்கள் அழித்தனர் எனவும் அவற்றை மீட்பது இந்துக்களின் கடமை எனவும் கட்டமைத்தனர். ஆனால் கோவில்களை இந்து மன்னர்களும் அழித்த னர் என்பதையும் பல இஸ்லாமிய மன்னர்கள் கோவில் களை பாதுகாத்தனர் என்பதையும் திட்டம் போட்டு மறைத்தனர். உதாரணத்துக்கு பத்தாவது நூற்றாண் டில் இராஷ்ட்ரகூட அரசனான மூன்றாவது இந்திரன் தனது பரம எதிரியான பிரதியாரா அரசனை தோற்க டித்த பொழுது களப்பிரியாவிலிருந்த அவரின் கோவிலை அழித்து அதனை பெருமையாக பதிவும் செய்தார். 11ஆம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆண்ட ஹர்ஷா எனும் மன்னன் கோவில்களை கொள்ளை அடிக்கவும் அழிக்கவும் தனியாக ஒரு அமைச்ச ரையே நியமித்தார். அவர் காலத்தில் குஜராத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சமணக் கோவில்கள் கொள்ளை அடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. கி.பி. 1460இல் ஒரிசா அரசன் கபிலேந்திரா தமிழகத்தின் மீது படையெடுத்த பொழுது காவிரி டெல்டா பகுதியில் இருந்த பல சைவ மற்றும் வைணவக் கோவில்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இவற்றை ஒரு போதும் சங் பரிவாரம் வெளிப்படுத்துவது கிடையாது.
வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்த முஸ்லிம் - இந்து மன்னர்கள்!
அதே போல கோவில்களை பாதுகாத்த முஸ்லிம் மன்னர்கள் குறித்தும் சங் பரிவாரம் பேசுவது இல்லை. துக்ளக் மன்னர் தனது ஆட்சியின் கீழ் உள்ள கோவில்களை பாதுகாத்தது மட்டுமல்ல; புதிய கோவில் கள் கட்டவும் அனுமதி அளித்தார். லோடி மன்னர்க ளுக்கு அவருடைய இஸ்லாமிய ஆலோசகர்கள் கோவில்களை இடிப்பது கூடாது என அறிவுறுத்தினர். அதனை மன்னர்களும் பின்பற்றினர். அக்பர் பேரரசர் காலத்தில் ஏராளமான கோவில்கள் கட்டப் பட்டன. அதற்கு அக்பர் அனுமதி அளித்தது மட்டு மல்ல உதவியும் செய்தார். 1590- 1735ஆம் ஆண்டுக ளுக்கிடையே பூரி ஜெகநாதர் கோவிலில் விழா நடக்கும் பொழுதெல்லாம் முகலாய மன்னர்கள் விழா விற்கு பாதுகாப்பு அளிப்பதை தமது கடமையாகக் கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தனது ஆட்சிக் காலத்தில் 153 கோவில்களை பராமரித்து வந்தார். சிருங்கேரி மடத்தை மராட்டிய இந்து மன்னர்கள் தாக்கிய பொழுது மடம் திப்புசுல்தானின் உதவி யையே நாடியது.
இப்படி மதஒற்றுமைக்கான ஏராளமான நிகழ்வுகள் இந்திய வரலாற்றில் உண்டு. ஆனால் சங்பரி வாரம் இவற்றை இருட்டடிப்புச் செய்துவிட்டு வரலாற்றின் ஒரு சில நிகழ்வுகளை மிகைப்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக சாதாரண இந்துக்களை தூண்டிவிட முயல்கிறது.
சமண/பவுத்த கோவில்களுக்கு என்ன ஆயிற்று?
கோவில்களாக இருந்த மசூதிகள் மீண்டும் கோவில்களாக மாற்றப்பட வேண்டும் எனில் கோ வில்களாக மாறிய பவுத்த சமண வழிபாட்டுதலங்களும் மீட்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தால் என்ன ஆகும்? தமிழ்நாட்டில் பல பவுத்த சமண கோவில்கள் சைவ வைணவ கோவில்களாக மாற் றப்பட்டன. கி.பி.640இல் காஞ்சிக்கு வந்த சீன யாத்ரிகர் யுவான்சுவாங் அங்கு நூறு புத்தர் கோவில்கள் இருந்தன என குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தர் கோவில் கள் பவுத்தத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சமணக் கோ வில்களாகவும் சமணத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சைவ அல்லது வைணவக் கோவில்களாகவும் மாற்றப் பட்டன. காஞ்சியில் உள்ள கச்சீஸ்வரர் கோவில்/காமாட்சி அம்மன் கோவில்/உலகநாதர் கோவில் போன்றவை முதலில் பவுத்த அல்லது சமண கோவில்களாக இருந்தன என தி.அ.அனந்தநாத நயினார் (திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைனசமய சித்தாந்தமும்) மற்றும் மயிலை சீனி.வேங்கடசாமி (பவுத்தமும் தமிழும் நூல்) ஆகிய அறிஞர்கள் குறிப் பிடுகின்றனர். மதுரையில் கூன்பாண்டியன் சமணத்தி லிருந்து சைவத்துக்கு மாறிய பொழுது ஏராளமான சமண கோவில்கள் தாக்குதல்களுக்கு உள்ளாயின.
1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம்
மத்திய காலத்தில் வழிபாட்டுத் தலங்கள் குறித்த பிரச்சனைகள் நவீன இந்தியாவில் தொடரக்கூடாது என்பதற்காகவே மதச்சார்பற்ற சக்திகளின் நிர்ப்பந் தம் காரணமாக நரசிம்மராவ் அரசாங்கம் “வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம்1991” ஐ இயற்றியது. இந்த சட்டத்தின் 4(1)ஆவது பிரிவு கீழ்க்கண்டவாறு கூறு கிறது:
“ஒரு வழிபாட்டுத்தலத்தின் தன்மை 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி என்னவாக இருந்ததோ அதே தன்மை தொடர்ந்து இருக்கும்.”
ஒரு வழிபாட்டுத்தலத்தின் தன்மை அதே மதத்தின் வேறு பிரிவுக்கோ அல்லது வேறு ஒரு மதத்தின் தன் மைக்கோ மாற்றக்கூடாது எனவும் இந்தச் சட்டம் சொல்கிறது. உதாரணத்துக்கு மசூதியாக இருந்தால் அது கோவிலாக மாற்றப்படக்கூடாது என்பது மட்டு மல்ல; ஒரு மசூதியின் தன்மை ஷியா பிரிவுக்கு சொந்த மாக இருந்தால் அது சன்னி பிரிவு மசூதியாக மாற்றப் படக்கூடாது எனவும் இந்த சட்டம் சொல்கிறது. இந்த சட்டத்திலிருந்து பாபர் மசூதி- ராம ஜென்ம கோவில் பிரச்சனைக்கு மட்டும் விதிவிலக்கு தரப்பட்டது. அந்த பிரச்சனைக்கு தீர்ப்பு தரப்பட்டதும் ராமர் கோவில் தொடக்க விழா ஆன்மீக விழாவாக இல்லாமல் அரசி யல் நிகழ்வாக நடத்தப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
உச்சநீதிமன்றத்தின் பாதகமான விளக்கம்
எனினும் இந்தச் சட்டம் பற்றிய உச்ச நீதி மன்றத்தின் ஒரு தீர்ப்பு பல விரும்பத்தகாத விளைவு களை உருவாக்கி வருகிறது. ஒரு வழிபாட்டுத்தலம் இருக்கும் இடத்தில் இன்னொரு வழிபாட்டுத் தலம் இருந்ததற்கான அடையாளங்கள் குறித்து ஆய்வு செய்ய 1991 சட்டம் தடை விதிக்கவில்லை என புதிய பாதகமான விளக்கத்தை அளித்த உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு பல மசூதிகள் குறித்து சட்டப் பிரச்ச னைகளை எழுப்பிட சங் பரிவாரத்துக்கு வாய்ப்பை உருவாக்கியது. இதன் அடிப்படையில் காசியில் உள்ள கியான்வாபி மசூதிக்கு அடித்தளத்தில் பூஜை செய்யும் உரிமையை சங் பரிவாரத்தினர் பெற்றனர். விரைவில் மேல் பகுதியில் மசூதிக்குள்ளும் பூஜை நடக்கும் என அறிவிக்கின்றனர்.
மதுராவில் உள்ள ஈத்கா மசூதியும் இந்த பிரச்சனையின் வட்டத்தில் சிக்கியுள்ளது. மேலும் தாஜ்மகால்/குதுப்மினார் சின்னங்களும் இவர்களின் இலக்கில் உள்ளன. தற்பொழுது ஆஜ்மீர் தர்கா வுக்குள்ளும் ஆய்வு நடத்த அனுமதி கோரப்பட்டுள் ளது. உத்தர்காசியில் உள்ள ஒரு மசூதியிலும் ஆய்வு நடத்த ஏதுவாக தீர்ப்பு பெற முயற்சிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாகவே 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சம்பல் மசூதியில் ஆய்வு நடத்த மாவட்ட நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டது. அதனை முஸ்லிம்கள் எதிர்த்த பொழுது உருவான வன்முறை யில் 4 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். இப்பொழுது இந்த ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள் ளது. இன்னும் ஏராளமான மசூதிகள்/தர்காக்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அவற்றை இடிப்போம் என சங் பரிவாரத்தினர் கொக்கரிக்கின் றனர். இதற்கு கீழ்மட்ட நீதிமன்றங்கள் வளைந்து கொடுக்கின்றன.
நவீன நாகரிக இந்திய சமூகத்தில் கடந்தகால முரண்பாடுகள் பிரதிபலிக்கக் கூடாது என்ற கார ணத்திற்காகவே 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத்தலங் கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பழங்கால முரண்பாடுகள் காரணமாக இந்திய சமூகம் பிளவுபடுவதை அனுமதிக்கக் கூடாது என்பதே பாபர் மசூதியின் இடிப்பு நாளான டிசம்பர் 6இல் நாம் எடுக்க வேண்டிய உறுதியாகும்.
- தீக்கதிர்
https://theekkathir.in/News/articles/india/destroyed-the-temples--hindu-kings
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு