வர்த்தக போரில்.. சத்தமின்றி தோல்வி அடையும் அமெரிக்கா.. சீனாவிற்கு முதல் வெற்றி.. உறைந்து போன டிரம்ப்

ஒன் இந்தியா தமிழ்

வர்த்தக போரில்.. சத்தமின்றி தோல்வி அடையும் அமெரிக்கா.. சீனாவிற்கு முதல் வெற்றி.. உறைந்து போன டிரம்ப்

மின்னணு உபகரணங்களுக்கு அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனங்கள் இதனால் நிம்மதி அடைந்துள்ளன. இதன் மூலம் பரஸ்பர கட்டண போரில் சீனா வென்றுள்ளது. அதாவது சீனாவிடம் அடிபணிய வேண்டிய கட்டத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டு உள்ளது.

சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி எவ்வளவு வரி விதிக்கின்றன?

சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார்.

தற்போது நிலவரப்படி அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் 34% வரிக்குப் பதிலடியாக சீன ஏற்றுமதிகளுக்கு 104% வரியை அமெரிக்கா அறிவித்தது. ​ அமெரிக்கா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு 10% முதல் 50% வரையிலான வரிகளை விதிக்கிறது. சீனப் பொருட்களுக்கு 34% + 104% வரி விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 10, 2025 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 34% சீனா வரியை விதிக்கிறது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர கட்டணங்களிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டு உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளை நம்பியிருக்கும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அனைத்து கணினிகள், மடிக்கணினிகள், டிஸ்க் டிரைவ்கள் மற்றும் தானியங்கி எந்திரங்கள், ஏஐ பயன்பாடுகளுக்கு பயன்படும் சிப்கள், 8471 குறியீடு கீழ் வரும் தொழில்நுட்ப பொருட்கள் உட்பட 20 தயாரிப்பு பொருட்களுக்கான பரஸ்பர வரிகள் நீக்கப்பட்டு உள்ளன. குறைக்கடத்தி சாதனங்கள், உபகரணங்கள், சீப்புகள் மற்றும் பிளாட் பேனல் டிஸ்க்குகள் ஆகியவை மீதான வரிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பரஸ்பர கட்டண போரில் சீனா வென்றுள்ளது.

சீனா - அமெரிக்கா இடையே வரிப்போரில் யார் வெற்றி பெறுவார்கள்?

சீனாவை விட அமெரிக்காதான் சீனாவை அதிகம் நம்பி இருக்கிறது. சீனா அமெரிக்காவை நம்பி இல்லை. அமெரிக்கா சீனாவின் பொருட்கள் இன்றி இயங்க முடியாது. சீனாவின் உற்பத்தி அந்த அளவிற்கு அதிகம் உள்ளது. இதனால் சீனாவின் பொருட்கள் இன்றி அமெரிக்கா கடுமையாக பாதிக்கும். அதோடு சீனா அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வர்த்தக போரின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அமெரிக்காவிலிருந்து சீனா எவ்வளவு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்கிறது?

2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் $524.7 பில்லியனாக மதிப்பிடப்பட்டது, அதே சமயம் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கான இறக்குமதியானது $163.6 பில்லியன் ஆகும். ​அதேபோல் 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா $524.7 பில்லியன் மதிப்பிலான பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து $163.6 பில்லியன் டாலர்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது. ​

இந்தியா எப்படி பயன் அடையும்?

வர்த்தகப் போரின் மூலம் அமெரிக்காவில் உள்ள சீனாவின் மார்க்கெட்டை இந்தியா நிரப்பும். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அமெரிக்க சந்தையில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக மின்சார இயந்திரங்கள், வாகன பாகங்கள், மொபைல் போன்கள், மருந்துகள், இரசாயனங்கள், ஆடைகள் மற்றும் துணிகள் போன்ற துறைகளில் இந்தியா சீனாவின் இடத்தை நிரப்பி முடியும்.

பாரம்பரியமாக சீனாவில் இருந்து பெறப்படும் ஜெனரிக் மருந்துகள், உபகரணங்களை இனி இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளை இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், அமெரிக்க இறக்குமதியில் அதிக பங்கைப் பெற்றுள்ள வியட்நாம் போன்ற பிற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​வர்த்தகப் போரினால் இந்தியாவின் பலன் குறைவாகவே இருக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவிற்கான முக்கிய சீன ஏற்றுமதிகள்:

மின்சார இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்

கணினிகள் உட்பட இயந்திரங்கள்

மெத்தைகள், படுக்கை மற்றும் விளக்குகள்

பொம்மைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள்

பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள்

அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள்:

விமானம் மற்றும் விண்கலம்

மின்சார இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்

கணினிகள் உட்பட இயந்திரங்கள்

எண்ணெய் விதைகள் மற்றும் பழங்கள், சோயாபீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள்

ரயில் அல்லது டிராம் தவிர மற்ற அனைத்து விதமான வாகனங்கள்

தீவிரம் அடையும் இரண்டு நாட்டு வர்த்தக போர்

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. இது உலகளாவிய அளவில் வர்த்தகத்தை மிக மோசமாக்கி உள்ளது. அமெரிக்கா விதித்த வரிக்கு பதிலடியாக சீனா, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப், சீனாவிற்கு ஒருநாள் கெடு விதித்து இருந்தார். அதற்குள் சீனா தனது கூடுதல் வரிவதிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்து இருந்தார். இதையடுத்து கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. சீனாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு 50 கனிமங்களை முக்கியமானதாக வகைப்படுத்துகிறது. அதாவது அரியவகை கனிமங்கள் என்று வகைப்படுத்துகிறது. கோபால்ட், லித்தியம், மாங்கனீசு மற்றும் நிக்கல் ஆகியவை ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் செம்பு சோலார் பேனல்கள் மற்றும் மின் இணைப்புகளிலும் இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது, PV பேனல்களில் சிலிக்கான் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் கிராஃபைட் பயன்படுத்தப்படுகிறது. ஆர்சனிக், காலியம் மற்றும் டெல்லூரியம் ஆகியவை சூரிய மின்கலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

- ஒன் இந்தியா தமிழ்

https://tamil.oneindia.com/news/new-york/usa-and-donald-trump-are-slowly-losing-the-trade-reciprocal-war-against-china-slowly-695229.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு