30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு- அமித்ஷா மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

விகடன் இணையதளம்

30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு- அமித்ஷா மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

"ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு மாறாக இந்த மசோதா அமைந்துள்ளது" - எதிர்க்கட்சிகள் விமர்சனம்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மக்களவையில் மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஆகஸ்ட் 21) தாக்கல் செய்கிறார்.

அதன்படி பதவி பறிப்பு மசோதாவை தற்போது அமித் ஷா தாக்கல் செய்திருக்கிறார். அதாவது 5 ஆண்டுகளுக்கு அதிகமாக தண்டனை கொண்ட வழக்குகளில் கைதாகி 30 நாள்கள் சிறையில் இருந்தால் பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும். இந்த சட்டம், ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும் வகையில், தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு மாறாக இந்த மசோதா அமைந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரும் குற்றவாளிகள் அல்ல, கைதானாலே பதவி பறிப்பு என்பது அரசியல் அமைப்பை, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகக்கும் செயல்" என கடும் விமர்சனங்களை தெரிவித்து வருக்கின்றனர்.

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், " இன்று இந்திய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 130வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். இந்திய குடிமக்களின் வாக்குரிமையை Special Intensive Revision (SIR) என்ற பெயரில் ஒடுக்குவதற்கான இன்னொரு வாய்ப்பாக இந்த மசோதா அமைந்திருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

(நந்தினி.ரா)

- விகடன் இணையதளம்

https://www.vikatan.com/government-and-politics/amit-shah-introduces-bill-to-dismiss-pm-cm-ministers-opposition-intensifies

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு