ஏகாதிபத்திய சீனாவின் இஸ்ரேலிய ஆதரவு நிலைபாட்டை பாரீர்!!

மாலைமலர்

ஏகாதிபத்திய சீனாவின் இஸ்ரேலிய ஆதரவு நிலைபாட்டை பாரீர்!!

"இது மாற்றமா? தடுமாற்றமா?" இஸ்ரேல்-ஹமாஸ் போரில் சீன நிலைப்பாடு

போர் நிறுத்தம் குறித்து பேச முன் வருவதாக அறிவித்தது

இறையாண்மையை காக்கும் உரிமை ஓவ்வொரு நாட்டிற்கும் உள்ளது என தெரிவித்தார்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேலை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஆதரிக்கின்றன. பாலஸ்தீன பொதுமக்களுக்காக ஹமாஸ் போராடுவதாக கூறி ஈரான், கத்தார், ஜோர்டான், ஏமன் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.

இப்பிரச்சனையில் நீண்ட நாட்களாக எந்த கருத்தும் கூறாமலிருந்து வந்தது சீனா. பிறகு கடந்த வாரம் "உடனடி போர் நிறுத்தம் தேவை" என வலியுறுத்தியது. மேலும், எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகளுடன் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து பேச முன் வருவதாகவும் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினரை குறித்து கண்டனமோ, ஆதரவோ அதன் அறிக்கையில் இடம் பெறவில்லை.

தங்களை ஆதரிக்காத சீனாவின் நிலைப்பாட்டை இஸ்ரேல் விமர்சித்தது. சீனா சரியான முடிவை எடுக்கும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்து வந்தது.

இதற்கிடையே, நாளை மறுநாள், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வேங் யி (Wang Yi), 3 நாள் நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவிருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நலிவடைந்ததால், சீனாவிற்கு பெருமளவு வர்த்தக இழப்பு ஏற்பட்டது. அது மட்டுமின்றி தற்போது அதிநவீன தொழில்நுட்ப துறையில் சீனாவின் வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்து வருவதால், சீனா, அமெரிக்காவுடன் சுமூக உறவுக்கு முயன்று வருகிறது.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் யி, "சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு ஒவ்வொரு நாடும் தன் சுயபாதுகாப்பிற்காகவும் இறையாண்மையை காக்கவும் எந்த நடவடிக்கை எடுக்கவும் முழு உரிமை உள்ளது" என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹனிடம் (Eli Cohen) தான் தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.

சீனாவின் ஆரம்ப நிலைப்பாட்டுடன் தற்போதைய இந்த கருத்தை ஒப்பிடும் அரசியல் விமர்சகர்கள், இது பெருமளவு இஸ்ரேல் ஆதரவு நிலையென்றும், இதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

https://www.maalaimalar.com/news/world/puzzling-chinese-stand-ahead-of-foreign-minister-visiting-us-677731

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு