ட்ரம்பின் 500 சதவீத வரி மிரட்டல் ஒரு பக்கம்... இந்தியாவிற்கு மற்றொரு பின்னடைவு அம்பலம்

லங்கா ஸ்ரீ நியூஸ்

ட்ரம்பின் 500 சதவீத வரி மிரட்டல் ஒரு பக்கம்... இந்தியாவிற்கு மற்றொரு பின்னடைவு அம்பலம்

இந்தியா மீதான வரிகளை 500 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, உலகளாவிய மற்றும் உள்நாட்டு வணிக வட்டாரங்கள் பரபரப்பாகிவிட்டன.

மற்றொரு பின்னடைவு

ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தையை நேரடியாகப் பாதித்துள்ளது. கடந்த ஐந்து வர்த்தக அமர்வுகளில், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 2000 புள்ளிகள் சரிந்துள்ளது, அதே நேரத்தில் நிஃப்டியும் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளது.

மறுபுறம், எந்த விதமான அழுத்தத்திற்கும் அடிபணியாது என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, உலகளாவிய சந்தைகளை இந்திய அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேசிய நலன்களில் எந்த சமரசமும் இருக்காது என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சகம் வெளிப்படையாகக் கூறியுள்ளது.

இதற்கிடையில், பொருளாதார முன்னணியில் மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஜனவரி 2 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 9.81 பில்லியன் டொலர் சரிவடைந்து 686.80 பில்லியன் டொலராக உள்ளது.

ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு, அந்நிய செலாவணி கையிருப்பு 3.29 மில்லியன் டொலர் அதிகரித்து, 696.61 பில்லியன் டொலர்களாக இருந்தது. சமீபத்திய உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் சந்தை அழுத்தம் உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் பாதித்துள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த சரிவுக்கு மிகப்பெரிய காரணம் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் (FCA) குறைந்ததே ஆகும், இது 7.62 பில்லியன் டொலர் குறைந்து 551.99 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.

டொலர் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட இந்த சொத்துக்கள், அந்நிய செலாவணி இருப்புகளில் மிகப்பெரிய பகுதியை உருவாக்குகின்றன, மேலும் யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்கா அல்லாத நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தையும் உள்ளடக்கியது.

ட்ரம்பின் 500 சதவீத வரி மிரட்டல் ஒரு பக்கம்... இந்தியாவிற்கு மற்றொரு பின்னடைவு அம்பலம் | Another Setback For India Economy

இந்த காலகட்டத்தில், நாட்டின் தங்க இருப்புக்களின் மதிப்பு 2.06 பில்லியன் டொலர் குறைந்து 111.26 பில்லியன் டொலராக சரிவடைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கூடுதலாக, சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவின் இருப்பு நிலையும் 105 மில்லியன் டொலர்கள் குறைந்து 4.77 பில்லியன் டொலராக உள்ளது.

லங்கா ஸ்ரீ நியூஸ்

https://news.lankasri.com/article/another-setback-for-india-economy-1768029695

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு