எப்ஸ்டைன் விவகாரத்தில் சோம்ஸ்கி பெயர்

இரா. முருகவேள்

எப்ஸ்டைன் விவகாரத்தில் சோம்ஸ்கி பெயர்

இந்த எப்ஸ்டைன் விவகாரத்தில் சோம்ஸ்கி பெயர் அடிபடுவதுதான் எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மற்றவர்கள் பெயர்கள் எல்லாம் அடிபடாமல் இருந்தால்தான் வியப்பு.

சோம்ஸ்கி பீடஃபைல் அல்ல. வெறுமனே எப்ஸ்டைன் உடன் தொடர் கொண்டிருந்தார். எப்ஸ்டைன் க்கு பல முகங்கள் உண்டு. அவன் பாலியல் புரோக்கர் மட்டுமல்ல என்று ஒரு பார்வை முன் வைக்கப் படுகிறது.

சோம்ஸ்கி அவனிடம் பண விவகாரத்தில் தொடர்பு கொண்டு இருக்கிறார். பல ஆண்டுகளாக அவனுடன் தொடர்பு கொண்டு இருந்திருக்கிறார். அவன் சிறைக்கு போய்விட்டு வந்தால் அவன் க்ளீன் ஸ்லேட் ஆகிவிட்டார் என்று சொல்லி இருக்கிறார், அவனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக சோம்ஸ்கி ஒரு போதும் பேசியதில்லை  என்று கவிதா முரளிதரன், விஜய் பிரசாத் ஆகியோர் சொல்கிறார்கள். 

எப்ஸ்டைன் ஒருவிதத்தில் மொசாத் உளவாளி தான். சோம்ஸ்கி எழுதிய Fateful Triangle என்ற நூல்தான் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் மிகச் சரியாக அம்பலப் படுத்தும் நூல். சோம்ஸ்கி கடைசிவரை இஸ்ரேல் குறித்த தனது எதிர்மறை கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. 

ஆனால் சோம்ஸ்கி போன்ற மிகவும் மதிக்கப் படும் அறிவார்ந்த நபர்களை அதிகார வர்க்கம் பல வழிகளைப் பயன்படுத்தி அணுகுகிறது. அவர்கள் எவ்வளவு சரியாக, நேர்மையாக இருந்தாலும் ஏதோ ஒருவிதத்தில் அவர்களுடன் உறவைப் பேணுவது என்றாவது ஒருநாள் பலன் அளிக்கும் நம்புகிறார்கள் போலிருக்கிறது.

அறிவுஜீவிகள் பங்குபெறும் விருந்துகள், கருத்தரங்குகள், எழுதும் இதழ்கள், தொலைக் காட்சி பேட்டிகள் மற்றும் பல்வேறு செயல்பாடுகளில் ஆளும் வர்க்கம் ஏதோ ஒருவிதத்தில்  ஊடுருவுகிறது. 

கட்சி இல்லாத அறிவு ஜீவிகள் இயங்குவதில் உள்ள சிக்கல் இதுதான். சில போது தெரிந்தும் பல நேரங்களில் தெரியாமலும் இது நடக்கிறது.  அறிவுஜீவிகள் தனிநபர்களாக அதிகார அமைப்பின் பல பகுதிகளுக்கு முற்றிலும் வெளியே இயங்குவது சாத்தியமில்லை. இவருக்கு ngo தொடர்பு இருக்கிறது, அவருக்கு இருக்கிறது போன்ற குற்றச் சாட்டுகள் இங்கிருந்துதான் வருகின்றன.

அரசு அமைப்புக்கு வெளியே இயங்கும் அமைப்புகள் உதவி கொண்டுதான் அறிவுஜீவிகள் இந்த நெருக்கடியை கடக்க முடியும். அதிகார அமைப்புக்கு எதிரான கட்சிகள் அறிவுஜீவிகள் இயங்குவதற்கான தளத்தை உருவாக்கித் தருமளவுக்கு பலம் பொருந்தியதாக மாறாமல், அறிவுஜீவிகளை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு flexible ஆகாமல் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

இரா. முருகவேள்

https://www.facebook.com/story.php?story_fbid=10215800101191544&id=1714910257&post_id=1714910257_10215800101191544&rdid=lAct2S7UKdX35qUV

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு