நீட் (NEET) தேர்வு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தன்னிச்சயான வெடித்த இளைஞர்கள் போராட்டம் !
செந்தளம் செய்திப்பிரிவு
நீட் (NEET-UG) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு முழுப் பொறுப்பேற்று, பாசிச மோடி அரசின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்திய 'நாடாளுமன்ற முற்றுகை' போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் திரண்டதால் டெல்லி மாநகரமே ஸ்தம்பித்து நிற்கும் அளவிற்குப் பிரம்மாண்ட நாடாளுமன்ற நோக்கிய பேரணி துவங்கியது.
இந்த எழுச்சிப் போராட்டத்தைக் கண்டு அஞ்சிய மோடி - அமித் ஷா அரசு, தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி ஒடுக்க நினைக்கிறது. அரசின் இந்த அடக்குமுறையைத் தாண்டி, போராட்டம் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் பரவி வருவதோடு, "கல்வியமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்!" என்ற முழக்கங்கள் டெல்லி எங்கும் எதிரொலித்து வருகின்றன.
இப்போராட்ட களத்தில் ஒரு இளைஞனர் போலீஸ் தடியடிக்கு சற்றும் அஞ்சாமல் *அடிங்க சார், அடிங்க சார்!..* என்று சத்தமிட்டதை கண்கொண்டு போலீஸ் கூட்டமே செய்வதாரியாது திகைத்து நின்றதை காணலாம்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, சமூக ஊடகங்களில் பிரபலமான இளைஞர் அமைப்பான 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் (SFI, AISA) இணைந்து 'சஞசத் சலோ' (நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம்) பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கான அனுமதியையும் அவர்கள் டெல்லி போலீசாரிடம் கோரியிருந்தனர். ஆனால், இந்த அமைதி வழியிலான போராட்டத்தை ஒடுக்க அரசு போலீசாரைப் பயன்படுத்தியதால் மோதல் வெடித்தது.
ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்ற வீதி நோக்கி முன்னேற முயன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களை டெல்லி போலீசார் பல அடுக்குத் தடுப்புகளை (Barricades) அமைத்துத் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில், கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி (Lathi-charge) நடத்தியதோடு, கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.
பாதுகாப்பு வளையத்தில் டெல்லி:போராட்டம் காரணமாக டெல்லி முழுவதும் பாரதீய நகர சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காகப் போராட்டக் களத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்களின் சில நுழைவாயில்கள் மூடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் சோனம் வாங்சுக்
நீட் முறைகேடுகளுக்கு எதிராக ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் கடந்த ஜூன் 28 முதல் தொடர்ந்து 20 நாட்களாகக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நிலை மிகவும் நலிவடைந்தார். இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி போலீசாரால் அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது CJP அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
அமித் ஷா அவசர ஆலோசனை
டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்துச் சூழ்நிலை குறித்துச் சுமார் மூன்றரை மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் போராட்டக் குழுவின் (CJP) பிரதிநிதிகள் நேற்று மாலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து, தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட 3 முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இந்தக் கோரிக்கைகள் குறித்துப் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
எனினும், தவறு செய்தவர்கள் மீது ஏற்கனவே கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், தர்மேந்திர பிரதான் பதவி விலக வாய்ப்பில்லை என்றே மோடி - அமித் ஷா தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. நாடாளுமன்றத்திலும், பீகார் உள்ளிட்ட மாநிலச் சட்டப்பேரவைகளிலும் நீட் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டன. கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை தங்களுடைய அறவழிப் போராட்டம் நாடு தழுவிய அளவில் தொடரும் என்று மாணவர் அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
பாசிச மோடி ஆட்சியில் NEET ஊழலை எதிர்த்த இம் மாபெரும் போராட்டமானது, அதாவது 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) இளைஞர் மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் (SFI, AISA) இணைந்து செயல்படுவதால், இப்போராட்டம் மும்பை பகுதிகளிலும் பற்றி பரவ துவங்கிவிட்டது. இதனால் மோடி அரசு பீதியடைந்துள்ளது. இப்போராட்டங்களை அடக்கும் நோக்கத்துடன் இன்று அவசர அமைச்சரவையை கூட்டுகிறது.
செந்தளம் செய்திப்பிரிவு