ரஷ்யா-வின் மாஸ்டர் பிளான்.. கடுப்பான அமெரிக்க, ஐரோப்பா.. இனி தங்கம் தான் எல்லாம்..!

குட் ரிட்டர்ன்ஸ் தமிழ்

ரஷ்யா-வின் மாஸ்டர் பிளான்.. கடுப்பான அமெரிக்க, ஐரோப்பா.. இனி தங்கம் தான் எல்லாம்..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யாவின் அனைத்துத் தரப்பு வர்த்தகத்தையும் முடக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்துத் தடை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு நிதி பரிமாற்றம் பெரும் தலைவலியாக மாறி வருகிறது.

இதைச் சமாளிக்க ரஷ்ய அரசு ஏற்கனவே தனது உள்நாட்டு நாணயங்கள் உடன் வர்த்தகம் செய்ய முடிவு செய்து அதற்காக இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வங்கிகள் உடன் பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா உடனான வர்த்தகத்தை மேலும் எளிதாக்கும் வகையில் கிரிப்டோகரன்சி, தங்கம் இணைத்து புதிய நிதி பரிமாற்ற முறையை உருவாக்க முடிவு செய்துள்ளது ரஷ்யா. இது மேற்கத்திய நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக மாறக்கூடும்.

ரஷ்யா - உக்ரைன் போர்


ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்ய பொருளாதாரம், நிதிநிலை, வர்த்தகம் ஆகிய அனைத்தையும் முடக்கி ரஷ்யாவை மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் இயங்கி வருகிறது.

கிராஸ் பார்டர் செட்டில்மென்ட்

இதை ஒவ்வொரு மட்டத்திலும் சரி செய்து வரும் ரஷ்யா, தொடர்ந்து சர்வதேச சந்தையில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக ரஷ்யா தனது நட்பு நாடுகள் உடன் இணைந்து கிராஸ் பார்டர் நிதி செட்டில்மென்ட்களை ஸ்டேபிள்காயின் மூலம் கிளயர் செய்யும் ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது.

 

டாலர், யூரோ

மேற்கத்திய நாடுகளின் தடை மூலம் ரஷ்யா டாலர், யூரோ போன்ற சர்வதேச நாணயங்கள் வாயிலாக வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் ரஷ்யா தங்கத்தை அடிப்படை சொத்தாக வைத்து ஸ்டேபிள்காயின் என்படும் ஸ்டேபிள் கிரிப்டோகரன்சி மூலம் வர்த்தகம் செய்ய ஈரான் மற்றும் பிற நட்பு நாடுகள் உடன் வர்த்தகம் செய்யும் முயற்சியைக் கையில் எடுத்துள்ளது ரஷ்யா.

Zerodha நிகில் காமத்

இந்தச் செய்தி வெளியான நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தகச் சேவை நிறுவனமான Zerodha நிறுவனர் நிகில் காமத் தனது டிவிட்டரில் ஈரான் - ரஷ்யா இணைந்து தங்கத்தை அடிப்படை சொத்தாக வைத்து புதிய stablecoin-ஐ வெளியிட உள்ளது.

முதல் நாள், முதல் நிகழ்வு

இது மட்டும் சரியாக நடந்துவிட்டால் உலகளவில் புதிய பொருளாதாரத்தின் முதல் நாள், முதல் நிகழ்வாக இருக்கும். ஏன் இந்தச் செய்தி சர்வதேச அளவில் பரவவில்லை எனப் பதிவிட்டு உள்ளார்.

Stablecoin என்றால் என்ன


Stablecoin என்பது பிற கிரிப்டோகரன்சி போல் அல்லாமல் ஒரு சொத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. உதாரணமாகப் பிட்காயின் மதிப்பு அதன் டிமாண்ட், சப்ளை அடிப்படையில் தான் உயர்கிறது, இதற்கென அடிப்படை விலையோ மதிப்போ இல்லை.

நிலையான மதிப்பு

ஆனால் Stablecoin என்பது ஒரு பொருள் அல்லது சொத்து மதிப்பின் அடிப்படையில் நிலையான மதிப்பு கொண்ட ஸ்டேபிள்காயின் உருவாக்கப்பட்டுக் கிரிப்டோ சந்தையில் பணப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும். தற்போது சந்தையில் டாலர் மதிப்பில் இயங்கும் USD Tether, USD coin ஆகிய ஸ்டேபிள்காயின் வர்த்தகம் செய்யப்படுகிறது.

தங்கம் இருப்பு

இந்த நிலையில் உலகம் முழுவதும் வரைமுறைப்படுத்தப்பட்ட, சர்வதேச விலை, அனைத்து நாடுகளிலும் தங்கம் இருப்பு இருக்கும் போது தங்கம் அடிப்படையிலான StableCoin உருவாக்குவது cross-border settlement-ல் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் செய்யும்.

ஈரான்

இந்தப் பேமெண்ட்-க்கான clearing platforms-ஐயும், தங்கம் அடிப்படையிலான Stablecoin-களை ரஷ்யா முதல்கட்டமாக ஈரான் மற்றும் இதர நட்பு நாடுகள் உடன் இணைந்து உருவாக்கி வருவதாக ரஷ்யாவின் துணை நிதி அமைச்சர் அலெக்ஸி மொய்சியேவ் தெரிவித்துள்ளார்.

tamil.goodreturns.in /news/russia-iran-creating-stablecoin-backed-by-gold-zerodha-nikhil-kamath-says-great-move-033383.html

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு