பெட்ரோல் குண்டுவீச்சுகளுக்கு பின்னணியில் சங்பரிவாரங்கள்

குமரன்

பெட்ரோல் குண்டுவீச்சுகளுக்கு பின்னணியில் சங்பரிவாரங்கள்

ஆர்எஸ்எஸ் முன்னாள் ஊழியரான  யாஷ்வந்த் ஷிண்டே சிபிஐ நீதிமன்றத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி  நான்டேட் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் விஸ்வ ஹிந்த் பரிஷத் அமைப்பின் உயர் பொறுப்பில் உள்ள மிலிடண்டட் பிராண்டேவுக்கு நேரடி தொடர்பு உள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். மிலிடண்ட் பிராணடே குண்டு வைப்பதற்கான பயிற்சியை புனே அருகிலுள்ள ஒரு இடத்தில் சுயம்சேவக்குகளுக்கு வழங்கியதாகவும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மராட்டிய தீவிரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை வரம்புக்குள் மிலிடண்ட் பிராண்டே மற்றும் பேராசிரியர் தேவ் ஆகியோர் இருந்ததாக "கர்கரேயைக் கொன்றது யார்?" நூலை எழுதிய முன்னாள் IGP முஷ்ரீப் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

யஷ்வந்த் ஷிண்டேயின் வாக்குமூலம் வெளிவந்த பிறகு தான் நான்டேட் குண்டுவெடிப்பு வழக்கை சிபிஐ முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும் உண்மை வெளிவந்திருக்கிறது. மேலும் நான்டேட் குண்டுவெடிப்பு வழக்கில் யஷ்வந்த் ஷிண்டேவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சிபிஐ நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறது.

சங்பரிவார அமைப்புகள் குண்டுவெடிப்புகளின் மூலம் அமைதி நிலையைக் குலைத்து பழியை முசுலீம்கள் மீது போடுவதை பற்றிய உண்மைத் தகவல்கள் பல்வேறு முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் மூலம் தற்போது தெரிய வருகிறது.

ஆனால் ஒன்றியத்தின் புலனாய்வு அமைப்புகள், நீதித்துறை , அதிகார வகுப்புகள் சங்பரிவார சார்பு ஊடகங்கள் ஒரு வலுவான எதிர் அரசியலை முசுலீம்களை நோக்கி கட்டமைத்து வைத்துள்ளன.

The Caravan போன்ற ஒரு சில ஊடகங்களே இதுபோன்ற உண்மையை வெளிக்கொணர்ந்து வருகின்றன. இந்த வரலாற்று பின்னணியில் இருந்து தமிழ்நாட்டில்  அண்மையில் நடந்திருக்கும் பெட்ரோல் குண்டுவீச்சு நிகழ்வுகளையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

- குமரன் 

(முகநூலிலிருந்து)

பதிவாளரின் முகநூல் பக்கத்திற்குச் செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்

குமரன் முகநூல் பக்கம்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு