ஆர்.எஸ்.எஸ்.- சங்பரிவார கும்பலே உண்மையான பயங்கரவாதிகள்
கலி பூங்குன்றன்
வன்முறைத் தீவிரவாதிகள் யார்?
திடுக்கிடும் தகவல்கள்!
குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாதம் என்ற உடனேயே நமக்கு நினைவில் வருவது தாடிவைத்த குல்லாய் அணிந்த நபர்கள்தான், அதாவது இஸ்லாமியர்கள். பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவியுள்ள அனைத்து வெகுஜன தொடர்பு, திரைப்படம் உள்ளிட்ட அனைத்துமே தீவிரவாதிகள் என்றாலே இஸ் லாமியர்கள் என்ற ஒரு பார்வையை உருவாக்கிவிட்டது, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான தீவிரவாத அமைப்பு எது என்பதை கீழே உள்ள புள்ளிவிபரங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்
1. ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2006
2. மக்கா மசூதி குண்டுவெடிப்பு அய்தராபாத் 2006
3. சம்ஜோதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு 2006
4. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2006
5. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2007
6. மோண்டசா மசூதி குண்டுவெடிப்பு குஜராத் 2007
7. நான்தேட் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006
8. பர்மானி குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006
9. ஜல்னா குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2008
10. பூனே குண்டுவெடிப்பு 2008
11. கான்பூர் குண்டுவெடிப்பு 2004
12. கன்னூர் குண்டுவெடிப்பு 2007
13. பன்வேல் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2007
14. தானே குண்டுவெடிப்பு 2007
15. வாஷி நவிமும்பை குண்டுவெடிப்பு 2009
16. கோவா குண்டுவெடிப்பு 2010
இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளின் பெயர்:-
1. சுனில் ஜோஷி - மத்தியப்பிரதேச ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் 1990 - 2003 வரை பதவி வகித்தவர்.
2. சந்தீப் டாங்கே கஷ்யப பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் ஷாஜபூர் மத்தியப்பிரதேசம் 2005 - 2007
3. தேவேந்திர குப்தா ஜார்கண்ட் ஜமாதாடா - ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பிரச்சார் பிரமுக்.
4. லோகேஷ் சர்மா - ஆர்.எஸ்.எஸ். கார்யவாகக் தேவ்கட் மத்தியப்பிரதேசம்.
5. சந்திரகாந்த லாவே - ஜில்லா பிரமுக் ஷாஹாபூர் மத்திய பிரதேசம். 6. சாமியார் அசிமானந்தா- மிகவும் மூத்த ஆர்.எஸ். எஸ்.தலைவர்களுள் ஒருவர்.
7. ராஜேந்திர சமுந்தர் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர ஊடகச்செயற்பாட்டாளராக இருந்தவர். பிரச்சார் பிரமுக் மகாராட்டிரா.
8. முகேஷ் வாசனி - குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர், கோத்ரா மாவட்ட ஆர்.எஸ்.எஸ் - கார்யகர்த்தா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர் நிரபராதி என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.
9. ராம் காலசங்காரா - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
10. கமல் சவுகான் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
11. சாமியாரினி பிரஞ்யா சிங் - ஆர்.எஸ்.எஸ் கார்ய கர்த்தா அபினவ் பாரத் அமைப்பின் இரண்டாம் மட்டத் தலைவர்
12. ராஜேந்திர சவுதிரி - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
13. ராம்பாலக் தாஸ் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
14. லக்சுமந்தாஸ் தன்சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
15. ராம் மனோகர் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
16. குமார் சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
17. தேஜ்ராம் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
18. சந்தீப் உபாத்தியாய்
19. சரன் உபாத்தியாய் சகோதரர்கள் - இருவருமே ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தாக்கள்
20. ராகுல் பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
21. உமேஷ் தேஷ்பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்ய கர்த்தா
22. சஞ்சய் சவுதிரி -அபினவ்பாரத்
23. ஹிமான்சு பான்சே - அபினவ்பாரத்
24. ராம்தாஸ் முல்கே -அபினவ்பாரத்
25. நரேஷ் ராஜாகேடாவர் -சனாதன் சான்ஸ்தா
26. யோகேஷ் வித்துல்கள் -சனாதன் சான்ஸ்தா
27. மாருதி பாங்கே -சனாதன் சான்ஸ்தா
28. துப்தேவர் குருராஜ்- சனாதன் சான்ஸ்தா
29. மிலிந்து எகாவோட் -சனாதன் சான்ஸ்தா
30. மாலேகவுடா பாட்டில் -சனாதன் சான்ஸ்தா
31. கோவா தேவாயலத்தில் குண்டுவைக்கச்சென்ற போது தவறுதலாக குண்டுவெடித்து நிகழ்விடத்திலேயே உடல் சிதறி மரணமடைந்தார்.
32. யோகேஷ் நாயக் -சனாதன் சான்ஸ்தா
33. விஜய் தோல்கர் -சனாதன் சான்ஸ்தா
34. வினாயக் பாட்டில்- சனாதன் சான்ஸ்தா
35. பிரசாத் ஜுவேகர் -சனாதன் சான்ஸ்தா
36. சாரங்க் குல்கர்னி, தனஞ்சய் அப்டேகர், திலிப் மாங்கோகர், ஜெய்பிரகாஷ் அன்னா, ருத்ரா பாட்டில் பிரசாத் அஷ்டேகர் சனாதன் சான்ஸ்தாவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையவர்கள்.
37. ராஜேஷ் கட்கரி -சனாதன் சான்ஸ்தா
38. விக்ரம் பாவே
இவர்கள் அனைவர் மீதும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு பிணை வழங்கப் பட்டு சுதந்திரமாக வலம் வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் இதர இந்துத்துவ அமைப்பினரின் வன்முறை வெறியாட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை
1980 மோர்தாபாத் கலவரம் 400 பேர் மரணம்
1983 நெல்லிலே அஸ்ஸாம் கலவரம் 10000 படுகொலை
1987 ஹாசின்புரா வன்முறை 100பேர் படுகொலை
1989 பாகல்பூர் வன்முறை 1000 பேர் படுகொலை
1992 மும்பை கலவரம் 3000 பேர் படுகொலை
2002 குஜராத் கலவரம் 5000 பேர் படுகொலை
2013 முசாபர் நகர் வன்முறை 180 பேர் படுகொலை
1980 முதல் இன்றுவரை பாஜக- ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ அமைப் பினர் இஸ்லாமியர்களை திட்டமிட்டு படு கொலை செய்த பட்டியல் மேலே உள்ளது. மேலும் மாட்டுக்காக பல இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர், பல பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன.
நாட்டில் 15 இடங்களில் குண்டுவைத்து அந்த பழிகளை இஸ்லாமியர்கள் மீது போட்டு அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்தனர், மேலும் போலியான என்கவுன்ட்டர் அதுவும் இஸ்லாமியர்களை மட்டும் என்கவுன்ட்டர் செய்தனர்.
ஆனால் பல குண்டுவெடிப்புகளில் சந்தேகத்தின் பெயரில் பிடித்துச்சென்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இன் றளவும் விசாரணைக்கைதிகள் என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் வாடுகின்றனர். இது குறித்து உச்சநீதிமன்றமே மாநில அரசுகளையும் மத்திய அரசையும் கண்டித்துள்ளது. அய்தராபாத் குண்டுவெடிப்பிற்குப் பிறகு விசாரணை என்ற பெயரில் சிறையி லடைக்கப்பட்ட பல இஸ்லாமிய இளைஞர்கள் 8 முதல் 10 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் முதல் தீவிரவாத செயல் காந்தியைக் கொன்றதாகும். அதைச்செய்தது இந்துமகாசபையைச்சேர்ந்த நாதுராம் கோட்சே. ஆனால் அவரை தேசபக்தராக மாற்றும் நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது.
- கலி பூங்குன்றன்
(வாட்சப் உலா)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு