எஸெல் குழும கடன் மோசடியும் - திவால் மற்றும் கடன் தீர்வு சட்டமும்

செந்தளம் செய்திப்பிரிவு

எஸெல் குழும கடன் மோசடியும் -  திவால் மற்றும் கடன் தீர்வு சட்டமும்

ஆகஸ்ட் 26, 2026 அன்று மத்திய பாஜக அரசு வழக்கம்போல்  பெரு நிறுவனங்களில் ஒன்றான எஸெல் குழுமத்தின் (Essel Group / Zee) நிறுவனர் சுபாஷ் சந்திராவுக்கு  "ஹேர்கட்"  என்ற பேரில் ரூ. 22,000 கோடிக்கும் அதிகமான கடனை தள்ளுபடி செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கொடிகள் கடன் பெற்றுக்கொண்டு திவாலானதாக்க கணக்கு காட்டி, பன்னாட்டு, உள்நாட்டுப் பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர் திவால் வழக்குகளில் வங்கிகள் சந்திக்கும் கடன்கள் தள்ளுபடி ("ஹேர்கட்") செய்ய   கார்ப்பரேட்டுக்கே உரிய தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை (NCLT - National Company Law Tribunal) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயம் ஆகஸ்ட் 26, 2026-ல் வெறும் ரூ. 6.25 கோடியை மட்டும் பெற்றுக்கொண்டு 99.97% கடன் ரூ. 22,000 கோடிக்கும் அதிகமான கடனை தள்ளுபடி வழங்கப்பட்டதை குறித்த விவாதங்கள் தற்போது நாடெங்கும் சட்ட மற்றும் பொருளாதாரத் தளத்தில் தீவிரமடைந்துள்ளன.

 சுபாஷ் சந்திரா மற்றும் நிதித்துறையின் விளக்கம்: 

சுபாஷ் சந்திரா தரப்பில், இந்த ₹22,000 கோடி என்பது தான் தனிப்பட்ட முறையில் வாங்கிய கடன் அல்ல என்றும், தனது எஸெல்/ஜீ குழும நிறுவனங்கள் வாங்கிய கடன்களுக்காக தான் அளித்த "தனிநபர் உத்தரவாதம்" (Personal Guarantee) மட்டுமே என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. அவ்வாறே நிதித்துறை வட்டாரங்களின்படி, இது வங்கிகள் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ததாக அர்த்தமல்ல. கடன் வாங்கிய அசல் நிறுவனங்கள் (Corporate Borrowers) மற்றும் அவற்றின் சொத்துக்கள் மீது வங்கிகள் தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடனை வசூலிக்க முடியும். இந்த தீர்ப்பு சுபாஷ் சந்திராவின் தனிநபர் உத்தரவாதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று "முழு பூசணிகாயை சோற்றில் மறைக்கும்" விதமான இந்த பாசிச பாஜகவின் கார்ப்பரேட் ஆட்சி முறைக்கு  ஏவலாக செயல்படும் தீர்ப்பாயத்தின் விளக்கம் ஆகும் ?!..

இந்த உத்தரவுக்கு எச்டிஎஃப்சி (HDFC) வங்கி, எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance) போன்ற முக்கிய கடன் கொடுத்த நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (NCLAT) முறையீடுகளைத் தாக்கல் செய்து,  NCLT-யின் ஐந்து பேர் அமர்வு  செப்டம்பர் 1, 2026 அன்று  இந்த ₹6.25 கோடி தீர்வுத் திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சுபாஷ் சந்திரா தனது சொத்துக்களை விற்கவோ அல்லது கைமாற்றவோ கூடாது என்றும் தடை விதித்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளது. உண்மையில் இந்த முதலாளித்துவ ஆட்சி அமைப்பில் இந்த மாதிரியான "தீர்வுத் திட்டத்திற்கு இடைக்காலத் தடை" என்ற தீர்ப்புகளின் லட்சணத்தை கடந்த பனிரெண்டு ஆண்டு கால பாசிச - பாஜக வின் ஆட்சியை பார்த்தலே தெரியும்.  

மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு,  நாடாளுமன்றத்தில்  அளித்த அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2014-15 முதல் 2023-24 வரையிலான பத்தாண்டு காலத்தில் மட்டும் இந்திய வணிக வங்கிகள் சுமார் 12 இலட்சம் கோடிக்கும் அதிகமான ரூபாய் வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன.  இதில் பெரும்பகுதி மோடியின் கூட்டாளியான அம்பாணிக்கும், அதானிக்கும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  (Haircut) கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதாக்கும்.

கடன் கொடுத்தவர்கள் முடிவு (Committee of Creditors):

கார்ப்பரேட் நலனுக்கான ஆட்சி, ஏன் கார்ப்பரேட் ஆட்சி என்றே தெளிவுபடுத்தும் இந்த "திவால் சட்டம்" இச்சட்டத்தின் படி, ஒரு நிறுவனம் திவாலாகிவிட்டால், அந்த நிறுவனத்தை முழுமையாக மூடினால் சொத்து மதிப்பு பூஜ்ஜியமாகிவிடும் என்பதால், கடன் அளித்த வங்கிகளின் கூட்டமைப்பு (Banks Consortium) சேர்ந்து தீர்மானித்து, குறைந்தபட்சம் கிடைக்கும் தொகையைப் பெற்றுக்கொண்டு மீதமுள்ள தொகையை 'Haircut' ஆக எழுதிக் கொள்கின்றன. அதாவது கார்ப்பரேட்கள் ஆட்சி செய்வும் முதலாளித்துவ ஆட்சிமுறை என்பது மூலதனம் ஆட்சி செய்யும் கட்டமைப்பு.  ஒரு முதலாளி தனது ஒரு நிறுவனத்தை  திவால் ஆக்கி, அந்த மூலதனத்தை கொண்டு வேறு நிறுவனம் தொடங்கினாலும் இந்த ஆட்சியால்/ திவால் சட்டத்தால் அவனுடைய முழு சொத்து விவரத்தையும் அல்லது  திவாலான மூலதனம்  வேறு நிறுவனத்திற்கு  கை மாறியதா என்பதையோ அல்லது அவனுடைய மற்ற நிறுவனத்தின் - ஏன் அவன் சொத்தையோகூட பறிமுதல் செய்ய முடியாது என்பதே எதார்த்தமான உண்மை.  

NCLT நடைமுறைகளில் Hircut / Writup :

LIC போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் உழைக்கும் மக்களின் வியர்வையில் உருவாக்கப்படும் மூலதனம் ஒருசில பெருமுதலாளிகளுக்கு  RBI மற்றும் NCLT போன்ற அரசு முதலாளித்துவ அதிகார அமைப்பு மூலம்  தரை வார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் NCLT மூலம் முடிக்கப்பட்ட பல வழக்குகளில் வங்கிகள் சராசரியாக 30% முதல் 70% வரை அல்லது சில தனிப்பட்ட வழக்குகளில் மிக அதிகமாகவும் (அதாவது 70% முதல் 90%-க்கும் அதிகமான 'writup' எனப்படும் நஷ்டத்தை) ஏற்றுக்கொண்டுள்ளன.

செந்தளம் செய்திப்பிரிவு