அரசு ஊழியர்களையும், தொழிலாளர்களையும் “அன்றாட காய்ச்சிகளாக்கும்” மத்திய வருமான வரி பட்ஜெட் !….
செந்தளம் செய்திப்பிரிவு
2004 இல் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை பரித்த மத்திய - மாநில அரசுகள் படிப்படியாக மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் சேமிப்பையும் குறைக்கும் அல்லது சேமிப்பை ஒழிக்கும் விதமாக கடந்த பல ஆண்டுகளாக மத்திய ஒன்றிய பாசிச அரசு (பட்ஜெட்) திட்டம் வகுத்து வருகிறது. அதாவது கார்ப்பரேட்டுக்கு வரி சலுகையும் சாதாரண மக்களுக்கு GST, கச்சா - எண்ணெயின் மேல் சுங்கவரி போன்ற வரிகளையும் வரலாறு காணாத வகையில் சுமத்தியும் உயர்த்தியும் வருகிறது. தனிநபர் ஆண்டு வருமான உச்சவரம்பு சொற்ப அளவே உயர்த்தி; உச்சவரம்பிற்கான சேமிப்பு அல்லது “சேமிப்பை ஊக்குவிப்பதற்கான” வருமான வரி விலக்கு செய்யப்பட்ட சலுகை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரி உச்சவரம்பு மற்றும் வருமான வரி செலுத்தும் விகிதம் இரண்டு முறைகளைக் கொண்டுள்ளது. (1) ஒன்று சேமிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதற்கான வரி விலக்கு மற்றும் வருமான வரி செலுத்தும் விகிதம். மற்றொன்று (2)சேமிப்பை தவிர்த்து அல்லது கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மொத்த ஆண்டு வருவாயில் வரிவிலக்கு!
அரசு ஊழியர்களே, தொழிலாளர்களே சற்றே உற்று நோக்கினால் மத்திய அரசின் திட்டம் என்ன என்று புரியும். அதாவது மக்களை மட்டுமல்ல, அனைத்து தரப்பு தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களையும் “அன்றாட காச்சிகளாக்கும்” கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைக்கும் திட்டம் என்பது புரியும்!. கடந்த 2020-21 ஆம் ஆண்டுத்தான் முதல் முறையாக தனி நபர் சேமிப்பை ஒழிக்கும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது இதுவே கார்போரேட்டிற்கு சேவைசெய்யும் பாசிச - பாஜக வின் சாதனையாகும் !
ஆம், 2019-20 ஆண்டுகளில் RBI -ன் சேமிப்பாக இருந்த அவசர கால நிதியை எடுத்து சுமார் 1.5 லட்சம் கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது நாம் அறிவோம்!.. அது மட்டும் இல்லை கடந்து இரண்டு மூன்று ஆண்டுகளில் சுமார் 11.2 லட்சம் கோடிகளை கார்ப்பரேட் முதலைகள் வாங்கிய கடன்களை “ரைட் அப்” என்ற "நயவஞ்சகமான வார்த்தையின்" மூலம் தள்ளுபடி செய்துள்ளதையும் அறிவோம் !..
மேலே உள்ள தகவலின்படி, வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் மாற்றத்தை நீங்கள் காணலாம், இது ₹ 50,000 ஆக இருந்து ₹2,50,000 ஆக மாற்றப்பட்டுள்ளது (5 மடங்காக மாற்றம்) என்று பிதற்றிக்கொண்டாலும், குறிப்பாக பாசிச பாஜக ஆட்சிக்காலம் 2014 முதல் 2023 வரையான தனி நபருக்கான வருமான வரி உச்சவரம்பு கிடைமட்ட கோடுதான் உள்ளது, உயர்த்தியது சொற்ப அளவே (Surcharge உயர்வு உட்பட), அதுவும் சேமிப்பை ஒழித்து காட்டவே இந்த உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசி உயர்வு, விவசாய பொருட்கள் உற்பத்திக்கான இடுப்பொருட்களின் விலை உயர்வு சுமார் 10 மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (என்பது வேறு துறை தற்போது அதை பின்னர் விவாதிப்போம்)
குறிப்பாக 2021- 22 ஆம் நிதி ஆண்டு மற்றும் 2022-23 ஆம் நிதி ஆண்டின் மாத வருமானம் பெரும் தனிநபர் வருமான உச்சவரம்பை கவனித்தால் நன்கு புரியும். அதாவது சேமிப்பு பணம் ரூ.1.5 லட்சமும் வீட்டுக் கடனுக்கான வட்டி மட்டும் இரண்டு லட்சம் என்றும் மற்றும் CPS திட்டத்தில் உள்ளவர்களுக்கு தனியாக ஒரு 50ஆயிரம் ரூபாய் சேமிப்பு (CPS ஊக்குவிப்பு!..) என்ற வகையில் எடுத்துக்கொண்டு வருமான விலக்கு வழங்கப்பட்டது. இதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் இன்று அதாவது ஆண்டு வருமான உச்சவரம்பு ஏழு லட்சம் (including Standard deductation 7.5 lakh) என்பது சேமிப்பு செய்யாதவர்களுக்கு என்று உயர்த்தப்பட்டது. அது மட்டுமல்ல ஏழு லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை 5% வரிசெலுத்தினால் போதும் என்பது, சேமிப்பு ஒழிக்கும் வகையில் இந்த ஆண்டு (2022-23) வருமான வரிக்கான திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் TV மற்றும் ரேடியோ விளம்பரத்தில் ஒரு விளம்பரத்தை அடிக்கடி கேட்பதை நினைவு கூறுகிறேன். "ஆர்பிஐ சொல்கிறது தனி நபரின் சேமிப்பு வீட்டையும் நாட்டையும் காக்கும்" என்று. ஆனால், மத்திய அரசு அந்த நிலைப்பாட்டை மாற்றி தற்போது சேமிப்பிற்கான வருமான விலக்கை குறைத்து, அதாவது சேமிப்பு செய்தவர்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை குறைத்தும், சேமிப்பே செய்யாதவர்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை அதிகரித்தும் சேமிப்பை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய ஒன்றிய அரசு பட்ஜெட்டில் திட்டம் வைத்துள்ளது.
Tax Slabs for AY 2022-23 (AY 2023-24)
Tax Slabs for AY 2022-23 (AY 2023-24)
மேற்கண்ட அட்டவணையிலிருந்து ஒரு சராசரி சாதாரண சம்பளம் (middle Class) ரூ.12- லட்சம் வரை ஆண்டு வருமானம் பெரும் ஒருவரின் 2023-24 நிதியாண்டில் தனி நபருக்கான வருமான வரி செலுத்தும் இரு கணக்கீட்டு முறையை கவனிக்கவும்:
முதல் முறையில் அதாவது, சேமிப்புடன் ( ரூ. 1.5 லட்சம் + ரூ. 50,000 (CPS) + ரூ. 50,000/- (பொது கழிவு) செலுத்தவேண்டிய வரி சுமார் = ரூ.95,000 /- (including education cess - இது கார்ப்பரேட்களுக்கும் ( மிக குறைவு ))
ஆனால் இரண்டாவது முறையில், சேமிப்பே இல்லாதவர் செலுத்தவேண்டிய வரி சுமார் = ரூ.90,000 /- மட்டுமே.
உண்மையிலும், சேமிப்பு செய்பவர்களை விட, சேமிப்பு செய்யாதவர்களே குறைவாக வருமான வரி செலுத்துகிறார்கள் எனில், இந்த மத்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன?.. அப்போ RBI சொல்லும் சேமிப்பு என்ன ஆகும்?.. இங்குதான் ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் யோசிக்க வேண்டிய விசயம்!.
ஆம், தோழர்களே!.. ஒரு நாட்டில் சேமிப்பே இல்லை எனில் அந்த நாட்டின் நாளைய நிலை என்னவாகும்?.. ஒருபுறம் தனிநபர்களுக்கான வாழ்வாதார ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு மறுபுறம் சேமிப்பும் தேவையில்லை (அப்படியே சேமித்தாலும் வங்கி திவாலாகும் போது சேமிப்பு வழங்கப்படாது) எனில், தொழிலாளி வர்க்கமும் "அன்றாட காய்ச்சிகளானால்" நாளைய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்!
இதன் உண்மையான நோக்கம் என்னவெனில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகையும் அதனால் ஏற்படும் சுமைகளை மக்கள் தலையில் வரிகள் மூலம் சுமத்தும் வகையில் இந்த மத்திய அரசு செயல்பட்டு வருகிறது..
சுயசார்பு கொள்கை பேசும் இந்த பாஜக அரசு, மறுபுறம் தனியார் மயம், தாராள மயம் என்று அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் படிப்படியாக தனியார் மயமாகிக் கொண்டே வருகிறது!..
ஆம், படிப்படியாக அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கிவிட்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என்று அனைவரையும் அவுட்சோர்ஸ் (out_source) என்று சொல்லப்படும் தனியார் நிறுவனம் மூலம் குறைந்த சம்பளத்தில் வேளையில் அமர்த்தி “வேலை செய்து தரப்படும் இயந்திரங்கள்“ ஆக்கப்படுவார்கள் ஆசிரியர், அரசு ஊழியர்கள், தொழிலார்கள். இறுதியாக, கார்ப்பரேட்டுக்கு சேவைசெய்யவும் தனது பாசிச ஆட்சியை கட்டிக் காக்கும் நோக்கில் போலீஸ் ராணுவம், மட்டுமே வைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும்!.. ஏன் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது கூட ஓய்வூதிய முறை இல்லாத நான்காண்டுகள் ஒப்பந்த முறையில் இராணுவத்திற்கு நியமனம் செய்யப்படுகிறது!
அதுமட்டும் அல்லாமல், ஹிட்லர் யூதர்களை எதிரியாய் நிறுத்தியது போன்று, நாட்டின் நெருக்கடிக்கு காரணம் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் இறுதியாக தாழ்த்தப்பட்டோர் என இன அழிப்புக்கு RSS போன்று தனது பாசிச ஆட்சிக்கு அடியாள் படைகள் மட்டுமே நீடிக்கும் நிலை ஏற்பட கூடும்!
ஆம், புதிய கல்விக் கொள்கையில் (Blended course) கலப்பு பாட திட்டம் என்று சொல்லப்படுகின்ற அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுடன் உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து இணையதளம் வழியாகவும் (ONLINE/OFFLINE) கல்வி கற்பிக்கக் கூடிய பாடத்திட்டம் பதிவு செய்யப்பட்டு, ஓர் ஆசிரியர் அனைவருக்கும் மற்றும் பலமுறை கற்பிக்கும் ஒரு “அவுட்சோர்ஸ் முறையாக” கல்வியையும் மாற்ற முயற்சித்து வருகின்றார்கள்!
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக சொல்லும் திராவிட மாடல் அரசும் இதை செயல்படுத்தி வருகிறது குலக்கல்வி முறைக்கு மாற்றாக இல்லம் தேடி கல்வி முறை என்று பெயரை மட்டும் "மாற்றி வைத்து" அதையே செயல்படுத்தி வருகிறது!..
எடுத்துக்காட்டு: B.Sc. (Blended course) சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு (திராவிட மாடல், இது மோடி ஆட்சியின் அதே புதிய கல்விக்கொள்கை என்பதை அறிவோம்)
அடுத்த தலைமுறைக்கான "சிறு சேமிப்பு", "வீட்டு கடன்" போன்றவைக்கு வரி சலுகையும், ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் என்று, படிப்படியாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து கார்ப்பரேட்டுக்கு தாரை வார்த்து கொடுக்கும் இந்த முதலாளித்து வர்க்கம் என்றுமே பாட்டாளி வர்க்கத்தை பற்றி சிந்திக்கவே சிந்திக்காது!. இதைத்தான் அன்றே காரல் மார்க்ஸ், "அரசு என்பது ஒரு வர்க்கத்தின் ஒடுக்கம் கருவி" என்று வரையறுத்தார் !.. ஆம், கம்யூனிசம் தோற்றுவிட்டது இனி எப்போதுமே முதலாளித்துவம் தான் என்று "ஒய்யாரமாய் கொக்கரிக்கும்" முதலாளித்துவ வர்க்கமும் அதற்கான ஆட்சியும் எப்போதும் தனது நெருக்கடியின் சுமைகளை எல்லாம் மக்கள் தலையிலேயே சுமத்துகின்றது !.. அரசு உழியர்கள், தொழிலாளர்கள் தனது அரைக்குறை உரிமைகளையும் சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்வதற்கும், பாட்டாளி வர்க்க தத்துவமான, மனித குலத்தின் வளர்ச்சிக்கான, பொருளியல் (அறிவியல்) இயக்கவியலின் அடிப்படையிலான, "கம்யூனிச கோட்பாட்டின்" ஒரு விரலின் நுனியையாவது பற்றி கொண்டே ஆக வேண்டும்!.. இல்லையெனில், முதலாளித்துவ புதைக் குழியில் சிக்குண்டேதான் சாக வேண்டும்! ஆம், முதலாளித்துவம் தன் பொருளாதார நெருக்கடிகளை பாசிசத்தின் கோர முகமாக சாதி, மத மோதல் என்று பல விதங்களில் வெளிப்படுத்தவே செய்யும்!. இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும் பாட்டாளி வர்க்க புரட்சி மட்டுமே அனைவருக்குமான ஆட்சியாக இருக்க முடியும். ஆகவே ஒன்றிணைந்து போராடுவோம்!.. புரட்சி செய்வோம் !!.. புது உலகம் படைப்போம் வாருங்கள் !!!.
- செந்தளம் செய்திப் பிரிவு