போட்டியாளர்களை சமாளிக்க நாணயத்தை ஆயுதமாக்கும் அமெரிக்கா

சத்ய நாராயணன்

போட்டியாளர்களை சமாளிக்க நாணயத்தை ஆயுதமாக்கும் அமெரிக்கா

தனது போட்டியாளர்களின் நிலைபெற்ற அச்சுறுத்தல் உள்ளது என நினைக்கும் அமெரிக்கா, தனது நாணயத்தை ஆயுதமாக்குகிறது 

உலக பொருளாதார  உற்பத்தியில் 20 சதத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, உலகளாவிய நாணயத்தில் பாதிக்கும் மேலானதை தனது இருப்பில் வைத்துள்ளது. இது 1944 பிரெட்டன் உட்ஸ் ஒப்பந்தத்தின் விளைவாகும். அந்த விளைவின் தன்மை பூதாகாராமாகி, டாலருக்கும், தங்கத்துக்குமான பிணைப்பு 1971ல் “நிக்சன் அதிர்ச்சி” என்றழைக்கப் பட்ட பொருளாதார நெருக்கடியில்  தகர்ந்தபோது,  அமெரிக்கா நாணய வினியோகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் முடிந்தது. 

டாலரின் “அதீத அதிர்ஷ்டம்” என  ஃப்ரெஞ்ச் நிதி அமைச்சர் வலேரி கிஸ்கார்ட் டியெஸ்டேன் சொன்னது போல, அது அமெரிக்காவை, வர்த்தக, பட்ஜெட் பற்றாக்குறைகளுக்கு, தனது நிதியைப் பயன்படுத்த  வழி வகுத்தது. 

அந்த நாடு, வர்த்தக சமன்பாட்டு நெருக்கடி நிலைகளில் (against balance-of-payments crises), தனது இறக்குமதிகளுக்கும், சேவைகளுக்கும் தனது சொந்த நாணயத்தில்  கடன் வாங்காமலிருக்க,  பாதுகாப்பளித்தது. அமெரிக்க நிதிய கொள்கைகள், வங்கி வட்டி வீதத்தை குறைப்பது போன்றவை டாலரின மதிப்பை, மற்ற நாணயங்களை  விட உயர்த்த  அடிகோலியது.  

ஆனால், டாலரின் உண்மையான சக்தி என்பது, அதன் தடை நடவடிக்கைகளுக்கான தொடர்பில்தான் இருக்கிறது. பன்னாட்டு அவசரகால பொருளாளாதார சட்டம், எதிரி பொருளாதாரத்துடனான வர்த்தக சட்டம், நாட்டுப்பற்றாளர் சட்டம் (Emergency Economic Powers Act, the Trading With the Enemy Act, and the Patriot Act) எனும் சட்ட நடவடிக்கைகள், அமெரிக்காவை டாலரின் செலாவணி என்பதை ஆயுதமாக்க உதவின.  இப்போது முன்மொழியப்பட்டுள்ள தேர்தல்களை நிறுவப் பட்ட எச்சரிக்கைகள் மூலம் பாதுகாக்கும் சட்டம் (Defending Elections From Threats by Establishing Redlines Act) அமெரிக்க பாதுகாப்பை கிரெம்ளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மீட்கும்  சட்டம் (Defending American Security From Kremlin Aggression Act) என்பவை அதை மேலும் ஆயுதமயமாக்குகிறது. இது ஸ்விஃப்ட் (Society for Worldwide Interbank Financial Telecommunication) அமைப்பின் மூலமாக தரவுகள் கிடைக்கும் வாய்ப்புகள் வந்தபின். அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவில், உலகளாவிய பொருளாதாரத்தில் அசுர பலம் பெற உதவியது.  தனிப்பட்டவர்கள், அமைப்புகள், ஆட்சியாளர்கள், ஏன் ஒரு நாட்டையே கூட தடை செய்ய இது உதவியது.  இரண்டாம் பட்ச  தடைகள், அந்நிய கார்பரேட்டுகளையும், நிதி நிறுவனங்களையும் தனியாரையும், தடை செய்யப் பட்ட அமைப்புகளுடன் வர்த்தகம் செய்வதை கட்டுப்படுத்தின. அமெரிக்க வங்கி வழியாகவோ, அமெரிக்க பணப் பட்டுவாடா அமைப்பின் மூலமாகவோ பரிமாறப் படும் எந்த ஒரு டாலர்  பணப் பட்டுவாடா செய்பவரையும், அமெரிக்க சொத்துக்களுக்கு எதிரான செயல்களை செய்ததாக குற்றம் சாட்டும் முகாந்திரத்தை அமெரிக்காவுக்கு அது அளித்தது. இந்த பலமே,  தடை செய்யப் பட்டோருடன் வர்த்தக உறவுகளைக் கொள்ளும் அந்நிய நாட்டினரை, தன் நாட்டின் எல்லையைக் கடந்து கூட கட்டுப் படுத்தும் சக்தியை அளித்தது. 

ஆக, வெறும் பயமுறுத்தலே கூட, நிதியங்களையும், வர்த்தக, நாணய வணிகங்களையும், தடுமாற வைத்து, அந்நியர்களது நடவடிக்கைகளுக்கு தீர்மானகரமானமுட்டுக்கட்டையாக அமையக் கூடும்.  இந்த அச்சுறுத்தல் நிஜமானது. வெறும் கற்பனை அல்ல. தடை செய்யப் பட்ட ஈரான், க்யூபா, சூடான் நாடுகளுடன் டாலர் வர்த்தககத்தில் ஈடுபட்டதாக கூறி,  ஃப்ரான்சின் பிஎன்பி பாரிபாஸ் வங்கி,  900 கோடி டாலரை அபராதமாக செலுத்த பணிக்கப் பட்டு, டாலர் வினியோகத்திலிருந்து ஒரு வருட தடையும்  செய்யப் பட்டது. ஹெச்பிஎஸ்சி ஹோல்டிங்ஸ், (ஹாங்காங்) ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி (யுகே), காமர்ஸ் பேங்க் ஏஜி (ஜெர்மனி) கிளியர்ஸ்ட்ரீம் பேங்கிங் எஸ்ஏ போன்ற வங்கிகள் பெரும் தொகையை அபராதமாக செலுத்தின. 

இரண்டாம்பட்ச  தடைகள், யுனைடெட் கோ (ரஷ்யா) நிறுவனத்தினர் , டாலர் கடன்களுக்கு  மாற்று  நிதி அளித்து, உலகளாவிய வணிகங்கள், பணப்பரிமாற்ற நிறுவனங்கள், ரஷ்ய நிறுவனத்துடன் வணிகம் செய்வதை நிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். தன் விற்பனையில் 14 சதத்தையே  அமெரிக்காவில் செய்த போதும், அமெரிக்க வங்கிகளை பயன் படுத்தாத போதும், மாஸ்கோ, ஹாங்காங்கில் மட்டுமே பதிவு செயதிருந்த போதும்., அதன் பத்திரங்களும், பங்குகளும் சரிந்தன. இஸட் டி இ கார்பொரேஷன் சீன மின்னணு நிறுவனம், வட கொரியாவுடனும், ஈரானுடனும் இருந்த வர்த்தகத் தடையால், அத்தியாவசியமான மூல பாகங்களை வாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப் பட்டது. இந்த நிறுவனங்கள் விஷயத்தில் அவை தங்கள் சொந்த நாட்டில் எந்த சட்டத்தையும்  மீறாத நிலையில், தடை நிகழ்வுகள் யுஎஸ் நாட்டிற்கும் கூட  வெளியேதான் நடந்தன. 

சீனாவும் ரஷ்யாவும்,  இன்னுமதிகமாக ஐரோப்பாவும் ஒரு மாற்று நாணய செலாவணி இருப்பை வேண்டுகின்றன.  பிரச்சினை என்னவெனில், டாலருக்கான மாற்றை அமைப்பது கடினம். 

முதலாவதாக, யூரோ, யென், யுவான் ரூபிள் என்பவை நடைமுறை மாற்றாக இருக்க முடியாது. ஜப்பானின் பொருளாதாரம் இரு பத்தாண்டுகளாக அழுகிய நிலையில்,  யூரோவின் நீண்ட கால உறுதித் தன்மைக்கு உத்தரவாதமில்லை. சீன, ரஷ்ய பொருளாதார, அரசியல் நிலைகள் நாணயங்களுக்கு போதுமான அளவு வெளிப்படைத் தன்மை அளிப்பதாக இல்லை.

இரண்டாவதாக, கட்டமைப்பில் மாறுதல் என்பது, கிலி ஏற்படுத்துவதாக இருக்கிறது. டாலரை அடிப்படையாகக் கொண்ட அநநிய செலாவணி வணிகங்கள், அடிப்படையிலேயே மாற்றி அமைக்கப் பட வேண்டும். வேரூன்றிய பண வணிகம், திடீரென்று கட்டமைக்க முடியாத மற்றொரு நாணயமாக மாறுவதை கற்பனை செய்ய இயலாது. 

மூன்றாவதாக,  பல நாடுகள், உலகளாவிய பன்னாட்டு நாணயத்தை,  தேசீய பன்னாட்டு பொருளாதாரக் கொள்கைகளுக்கு இடையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் காரணமாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றன. 

ராபர்ட் ட்ரிஃபின் எனும் பொருளாதார அறிஞர், உலகளாவிய அந்நிய செலாவணி இருப்பின்  ஊடகமாக இருக்க விரும்பும் நாணயத்தின் நாடு, அந்நிய செலாவணிக்கான தேவைகளை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். இது மாபெரும் வணிக பற்றாக்குறைகளை கையாள்வதாகவும், ஜெர்மனி, ஜப்பான், சீன நாடுகளின் ஊறிப்போன வணிகவியல் கொள்கைகளில் அடிப்படையிலேயே மாற்றத்தை கோருவதாகவும் இருக்கிறது,

இதன் பொருள், யுஎஸ் டாலரை தனது வணிக, பொருளாதார, பன்னாட்டு அரசியல் வளர்ச்சி நோக்கங்களுக்காக  டாலரை பயன்படுத்த இயலாமையை உருவாக்க வேண்டும். அதுவும் பன்னாட்டு சட்டங்களை, நிறுவனங்களை சாராமல் தனியாக நின்று, எதிர்பாரா  குளறுபடியான ராணுவ நடவடிக்கைகள்  அவசியமாகிவிடாத படி உருவாக்க வேண்டும். ரிச்சர்ட் நிக்சனின் நிதிய செயலாளார் ஜான் கொன்னொலி 1971ல்  சொன்னது போல “டாலர் எங்கள் நாணயம். ஆனால் உங்கள் தலைவலி.”

- சத்யஜித் தாஸ்

(ஒரு முன்னாள் பேங்கர். அவரது சமீபத்திய நூல்கள்:, “A Banquet of Consequences” "Extreme Money" மற்றும் "Traders, Guns & Money.")

தி எகனாமிக் டைம்ஸ் செப் 07  2018 கட்டுரையின் எளிதாக்கப்பட்ட மொழிபெயர்ப்பு

மொழி பெயர்ப்பு - சத்ய நாராயணன்

(முகநூலிலிருந்து)

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு