நிலக்கரிச் சுரங்கங்களை கபளீகரம் செய்த அதானி

தீக்கதிர்

நிலக்கரிச் சுரங்கங்களை கபளீகரம் செய்த அதானி

அதானியை காப்பாற்றவே கேவில் மைனிங்

கௌதம் அதானியின் 30 வருட நெருங்கிய நண்பர்தான் உத்கர்ஷ் ஷா (எகனாமிக் டைம்ஸ் - 2013). அதானி குழுமத்தில் எந்த மாதிரியான சிக்கல் எழுந்தாலும் அதனைத் தீர்க்கவே  உத்கர்ஷ் ஷா உள்ளார். இன்னும் சொல்லப் போனால் அதானியால் நிறைவு செய்ய முடியாத சுடோகு புதிர்களைத் தீர்ப்பதில் கூட உத்கர்ஷ் ஷா உதவுவார். அதானியைக் காப்பாற்றவே கேவில் மைனிங் மற்றும் அடிகார்ப் நிறுவனங்களை அவர் வைத்துள்ளார். இந்த 2 நிறுவனங்களும் என்ன தொழில் நடத்துகின்றன என்பதே வெளியுலகுக்கு தெரியாது. 

ஒவ்வொரு நாளும் ஒன்று : சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

அதானியின் மோசடி குறித்து ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளிவருவதை சுட்டிக்காட்டியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில்,”ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளிவரும் நிலையில், தற்போது நிலக்கரி சுரங்க கூட்டுச் சதியும் வெளியாகியுள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில்  மிக மிக மலிவாக தூக்கிப்போடும் விலையில் அதானியால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பாஜக - மோடி அரசு, தனது கூட்டாளிகளின் இத்தகைய மெகா மோசடிகள் மற்றும் கேடயக் கொள்ளைகள் பற்றிய ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டுக்குழு) விசாரணையைத் தடுத்து நிறுத்துவதற்காக நாடாளுமன்றத்தை தினமும் சீர்குலைக்கிறது”என சாடியுள்ளார்.
 

கூட்டுக் களவாணிக்காக விதிகளை மாற்றிய மோடி அரசு

புதுதில்லி, ஏப். 6- ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து பிரதமர் மோடியின்  கூட்டுக் களவாணியான அதானியின் மோசடிகள் குறித்து நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்பொழுது நிலக்கரிச் சுரங்க குத்தகை ஏலத்தில் மலிவான விலையில் அதானிக்கு 3 நிலக்கரிச் சுரங்கங்களை ஒன்றிய பாஜக அரசு தாரை வார்த்துள்ள விவகாரம் அடுத்த ஆய்வறிக்கை யாக (ஸ்க்ரோல் ஊடக நிறுவனம்) வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுரங்கத்திலும் கை வைத்த அதானி

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலக்கரி சுரங்கத் துறையில் குத்தகை மூலம்  100%  அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க அனுமதித்து ஒன்றிய மோடி அரசு அறிவித்தது. இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏல வர லாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே  நேரத்தில் 141 நிலக்கரி சுரங்கங்களை குத்தகை விற்பனைக்கு முன்வைத்தது ஒன்றிய அமைச்ச கம். இந்த ஏலத்திற்கு பெரிய அளவிற்கு போட்டி நிலவவில்லை.  141 சுரங்கங்களுக்கு வெறும் 59  நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. 36 சுரங்கங் களுக்கு 96 ஏலங்கள் (நிகழ்வு) மட்டுமே வைக்கப் பட்டன. இந்த விவகாரம் வணிகத் துறையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தேகத்திற்கு உரமூட்டும் வகையில் அதானி நிறுவனம் வாங்கிய வடமேற்கு மாதேரி (மகாராஷ்டிரா), புருங்கா (சத்தீஸ்கர்), தஹேகான் கோவாரி (மகாராஷ்டிரா) ஆகிய நிலக்கரி சுரங்கங்களின் ஏல முறை உள்ளது.  காரணம், அதானி குழுமம் ஏலத்தில் எடுத்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கு கேவில் மைனிங், பவர் மெக், கங்காராம்சக் மைனிங் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே அதானி குழு மத்திற்கு எதிராக போட்டியிட்டன. ஒன்றிய நிலக்கரி அமைச்சகத்தின் விதிகளின்படி வணிகச் சுரங்கத் திற்கான ஏலத்தில் குறைந்தது இரண்டு ஏலதாரர் கள் இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்; தனி யாக ஏலம் எடுத்திருந்தால் ஏலம் ரத்து செய்யப் படும்; எனவே, பெயரளவில் தனது நிறுவனத்து டன் தொடர்புடைய;  மற்றும் தனது நிறுவனத்தால் கடன் கொடுக்கப்பட்ட அல்லது முதலீடு செய்யப் பட்ட நிறுவனங்களை களமிறக்கி, ஏலத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்டது அதானி குழுமம்.

மலிவான விலையில் 3 சுரங்கங்களை வாங்கியது எப்படி?

புருங்கா (சத்தீஸ்கர்) :  புருங்கா சுரங்கத்தை, அதானியின் துணை நிறுவனமான “சிஜி நேச்சுரல் ரிசோர்சஸ்” பிரைவேட் லிமிடெட், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கட்டுமானப் பொறியியல் நிறுவனமான பவர் மெக் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட்க்கு எதிராக போட்டியிட்ட நிலையில், சிஜி நேச்சுரல் ரிசோர்சஸ் கைப்பற்றியது. முன்னதாக “பவர் மெக்” கடந்த ஆண்டுதான் அதானி குழு மத்திடம் இருந்து ரூ. 6,000 கோடிக்கும் அதிக மான ஆர்டர்களைப் பெற்றிருந்தது.

தஹேகோன் கோவாரி (மகாராஷ்டிரா) : அதானிக்கு சொந்தமான அம்புஜா சிமெண்ட்ஸ், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வணிக கூட்டு நிறுவனமான கங்காராம்சக் மைனிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பெயரளவுக்கு போட்டிபோடச் செய்து, தஹேகோன் கோவாரி சுரங்கத்தைக் கைப்பற்றியது. வடமேற்கு மாதேரி  (மகாராஷ்டிரா) : அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் துணை நிறுவன மான எம்எச் நேச்சுரல் ரிசோர்சஸ், வடமேற்கு மாதேரியை வாங்கியது. அதானி வாங்கிய 3  நிலக்கரி சுரங்கங்களும் வெறும் 5.5% வருவாய் பங்கினை மட்டுமே  தருவதாகக் குறிப்பிட்டு,  வாங்கப்பட்டுள்ளதுதான் சர்ச்சையின் முக்கிய கிளைமேக்ஸ் ஆகும்.

அதானிக்காக விதியை மாற்றிய மோடி அரசு

2021-ஆம் ஆண்டில் நிலக்கரி ஏலம் மந்தமாக இருப்பதாகக் கூறி ஏலத்திற்குத் தேவையான குறைந்தபட்ச தகுதி உள்ள ஏலதாரர்களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைத்தது ஒன்றிய அமைச்சகம். மூன்றுக்கும் குறைவான, தகுதி உள்ள ஏலதாரர்கள் இருந்தால் முதல் முயற்சியிலேயே ஏலம் ரத்து செய்யப்படும் என்ற நிபுணர் குழு பரிந்துரைகளை ஒன்றிய அரசு  கண்டுகொள்ளாமல் 2 நிறுவனங்களை மட்டும்  ஏலத்தில் இடம்பெறச் செய்யும் விதியை உருவாக்கி யது. இது கடும் எதிர்ப்புக்கும் உள்ளானது. ஒன்றிய மோடி அரசின் புதிய விதி அமலான பிறகு, அதானி நிறுவனங்கள் பங்கேற்கும் ஏலத்தில் மட்டும் 2 நிறுவனங்களில் கண்டிப்பாக ஒன்று அதானி நிறுவனமாக உள்ளது கவ னிக்கத்தக்கது. சமீபத்திய ஏலத்தில் 29 சுரங்கங் களில் வென்ற ஏலங்களில்  நிறுவனங்களால் பகிரப்படும் சராசரி வருவாய்ப்பங்கு 22.12%  ஆகும். ஆனால் அதானி குழும நிறுவனங்கள் வென்ற  மூன்று சுரங்கங்களில் சராசரி வருவாய் பங்கு  வெறும் 5.5% தான். இவ்வளவு மலிவான விலையை ஒப்புக் கொள்ளும்விதத்தில் அதானிக்காக ஏல விதியை மோடி அரசு மாற்றியது என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

அதானி - அடிகார்ப் - கேவில் மைனிங்
மலிவான விலையில் 3 சுரங்கங்களை வாங்கி யதே மிகப்பெரிய சர்ச்சையாக உள்ள நிலையில், அதைவிட மற்றொரு சர்ச்சையான விஷயம் அதானி மற்றும் குஜராத் அரசு நிறுவனங்கள் பங்கேற்கும் ஏலத்தில் களமிறங்கிய கேவில் மைனிங் நிறுவனத்தின் பின்புலம் ஆகும்.  குஜ ராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏப்ரல் 24, 2022 அன்று பதிவு செய்யப்பட்ட கேவில் மைனிங் நிறு வனம் வெறும் ரூ. 1லட்சம் மூலதனத்தில் உரு வாக்கப்பட்டது. இதில் 80% சதவிகிதம் அதானிக்கு நெருக்கமான உத்கர்ஷ் ஷாவிடமிருந்து பெறப்பட்ட தாக கணக்கு காட்டப்பட்டு, நாளடைவில் உத்கர்ஷ் ஷாவை இந்நிறுவனத்தின் உரிமையாளராக மாற்றியது. இந்நிறுவனத்தின் (2022) கார்ப்பரேட் கணக்கு தாக்கல்களின்படி, உத்கர்ஷ் ஷா அடி கார்ப் எனும் நிறுவனத்தில் 96 சதவீதப் பங்குகளை வைத்திருந்தார். கடந்த ஆண்டு இறப்பதற்கு முன் உத்கர்ஷ் ஷா, அடி - ஹெரிடேஜ் குழுமத்தின் தலைவராக இருந்தார். உத்கர்ஷ் ஷாவின் மர ணத்திற்குப் பிறகு அவரது மகன் ஆதர்ஷ் ஷா,  அடிகார்ப் மற்றும் கேவில் மைனிங் இரண்டிலும் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த இரண்டு நிறு வனங்களும் அகமதாபாத்தில் ஒரே முகவரியைப் பகிர்ந்து கொள்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அடிகார்ப் மற்றும் கேவில் மைனிங், ஒரே குடும்பத்திற்கு சொந்தமான சகோதர நிறுவனங்கள் போன்றது ஆகும். 

எங்கே போனது கடன்?

2019-2020ல், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உட்பட நான்கு அதானி குழும நிறுவனங்கள் அடிகார்ப் நிறுவனத்திற்கு ரூ.622  கோடி கடனாக வழங்கியதாக ஒரு கணக்கு பதிவு செய்யப்படுகிறது. பட்டியலிடப்பட்ட மற்றொரு அதானி குழும நிறுவனமான அதானி பவருக்கு  அதே நிதியாண்டில் ரூ.608.4 கோடி கடனை நீட்டிக்க அடிகார்ப் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி யது. அதானி நிறுவனத்திடம் இருந்து அடிகார்ப் நிறுவனம் ரூ.622 கோடி கடனைப் பெற்ற அதே ஆண்டில் ரூ.64 கோடிக்கு மேல் கிடைத்ததாக வருவாயில் ரூ.68.6 லட்சம் லாபம் ஈட்டியுள்ளதாக கணக்கு காட்டுகிறது. 2021-22 ஆண்டில் அடிகார்ப் வருவாய் ரூ. 14.3 கோடிக்கும் கீழே இறங்கியது. இப்படி நிகர வருவாய் மாறி மாறி வரும்  நிலையில், அடிகார்ப் எண்டர்பிரைசஸ் வாங்கிய கடன்களை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு சம்பாதிக்க சுமார் 900 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், இந்த கடன்கள் எதற்கு வழங்கப்பட்டன, எங்கே கைமாறியது என்ற கேள்வி களும் எழுந்துள்ளன.

15 ஆண்டு உறவு

கடந்த 2022-ஆம் ஆண்டு கிரெடிட் எட்ஜ் என்ற கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி வெளியிட்ட அறிக்கையில்,”அதானி குழுமமும் அடிகார்ப் நிறு வனமும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான உறவைக் கொண்டுள்ளன. உள்நாட்டு சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து அடிகார்ப் குழுமம் முக்கிய நிலக்கரி தேவையைப் பெற்றுக் கொண்டது. இருப்பினும், மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து  8 ஆண்டுகளாக அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி குளோபல் பிடிஇ லிமிடெட் (சிங்கப்பூர்) மற்றும் அதானி எஃப்இசட்இ (யுஏஇ) மூலம் அடிகார்ப் குழுமம் வெளி நாட்டுச் சந்தையில் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளது. மேலும் அதானி பவரில் உள்ள தணிக்கைக் குழுவின் தலைவர் அடிகார்ப் நிறுவனத்தை தணிக்கை செய்யும் நிறுவனத்தில் நிர்வாகப் பங்குதாரராக இருந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளது. 

சந்தை வெளிப்படைத்தன்மையை மறைக்கவே அடிகார்ப்

அதானி குழுமம் தனது குழும நிறுவனங் களுக்கு இடையே ரகசியமாக நிதி பரிமாற்றம் செய்ய அடிகார்ப்பை பயன்படுத்தி, சந்தை தொடர்பான வெளிப்படையான விபரங்கள் வெளி யாவதைத் தவிர்த்துள்ளது. இந்த வெளிப்படைத் தன்மை மறைப்பைத் தான் ஹிண்டன்பர்க் ஏற்கெனவே கூறியது. பங்குகளின் விலைகளை உயர்த்து வதற்காக பரிவர்த்தனைகள் மற்றும் உறவுகளை மறைப்பதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. 

- தொகுப்பு : எம்.சதீஸ்குமார்

https://theekkathir.in/News/states/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/adani-has-taken-over-the-coal-mines

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு