வறுமை குறைப்பு? மோடி அரசின் பித்தலாட்டம்!

தீக்கதிர்

வறுமை குறைப்பு? மோடி அரசின் பித்தலாட்டம்!

ஆழ்ந்த இலக்கிய விமர்சகரும் கட்டுரையாளருமான சாமுவேல் ஜான்சன் இப்படி கூறுகிறார்:

“வறுமை மனிதனுடைய மகிழ்ச்சியின் மிகப்பெரும் எதிரி. நிச்சயமாக இது சுதந்திரத்தை அழிக்கிறது. நல்லொழுக்கங்களை கடைபிடிக்க முடியா மல் செய்கிறது. மேலும் பல நல்ல அம்சங்களை கடி னமாக்குகிறது”.

வாழ்வாதாரத்தை உருவாக்கும் வளங்களின் பற்றாக்குறை வறுமையை குறைப்பதற்கான செயல்பா டுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது.வாழ்வாதாரம் என்பதையும் கடந்து வறுமை என்பதற்கு இன்று பல விளக்கங்களும் உள்ளன.

வறுமையை கணக்கிடுவது எப்படி?

நல்வாழ்வு திறன், செயல்பாடுகள் குறித்து புதுமையான, பரந்த, வளமான கண்ணோட்டத்தை கொண்டிருந்தார் டாக்டர் அமர்த்தியா சென். அத்த கைய நல்வாழ்வை அடைய முடியும் என்றால் அதுவே சாதனையாகும். உதாரணத்திற்கு ஆரோக்கிய வாழ்விற்கு ஆடம்பரங்கள் தேவையில்லை. ஏனெனில் உடல் பருமன் ஏற்பட்டால் நோய்கள் வந்து சேரும். ஆரோக்கியம் என்பதை ஊட்டச்சத்து நிறைந்த உணவாலும் உடற்பயிற்சியாலும் அடையலாம். ஒவ்வொரு திறனும் அதனதன் அளவில் தனித்தனி யாக முக்கியப் பங்காற்றுகிறது. இந்த காரணத்தால் இவற்றின் ஒருங்கிணைப்பை நல் வாழ்வின் குறியீடாக கருதுவதை அவர் எதிர்த்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஐநா வளர்ச்சித் திட்டம்(UNDP) உடல் நலம்,கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை ஒன்றிணைத்து வளர்ச்சியின் ஒட்டுமொத்த அளவை கட்டமைத்திடும் வழியை பின்பற்றுகிறது. இந்த முறையை பின்பற்றி நிதி ஆயோக் மற்றும் ஜ.நா. வளர்ச்சித்திட்டம் பல பரிமாண வறுமைக் குறியீடு குறித்த ஆய்வு ஒன்றை வெளி யிட்டது. இதன் அடிப்படையில் ‘ஆசியா - பசிபிக் மனித வளர்ச்சிக்கான புதிய திசைகள்’ என்ற முன்னேற்ற பகுப்பாய்வினை நவம்பர் 7 அன்று வெளியிட்டது.

மனித வளர்ச்சியை மதிப்பீடு செய்வதில் அதே குறைபாடுகள் இதிலும் பிரதிபலிக்கின்றன. அதாவது குறியீடுகளை ஒருங்கிணைத்து வறுமையை அளவீடு செய்யும் முறை. மேலும் எவ்வாறு அதன் செயல்முறை சிதைக்கப்பட்டுள்ளது என்பதையும் இனி பார்க்கலாம்:

மோடியின்” சாதனை”

2015 -16 மற்றும் 2019- 21 ஆண்டுகளுக்கு இடைப் பட்ட காலத்தில் இந்தியாவின் தேசிய அளவிலான பல  பரிமாண வறுமைக் குறியீடு 24.86 சதவீதத்திலிருந்து 14.96 சதவீதமாக குறைந்துள்ளது என அரசு கூறுவது வியப்பளிக்கிறது.இந்த 9.89% குறைவு, இந்த கால கட்டத்தில் சுமார் 13.5 கோடி மக்களை வறுமையில் இருந்து வெளியேறினார்கள்  என்பதை குறிப்ப தாகும். பல பரிமாண வறுமையில் வாழும் மக்களின் சராசரி பற்றாக்குறையை அளவிடும் பொழுது வறுமையின் தீவிரம் 47.14 இல் இருந்து 44.39% ஆக குறைந்துள்ளதாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உண்மை நிலை என்ன?

பல பரிமாண  வறுமைக் குறியீடு குறைந்துள்ள அரசின் கூற்றை அப்படியே எடுத்துக் கொள்ள முடி யாது. இவை அனைத்துமே தவறாக வழிநடத்தும் தகவல்கள். முதலாவதாக, இந்த குறியீடு தேசிய குடும்ப சுகாதார ஆய்வு(NFHS) 4 மற்றும் 5 ஐ அடிப்படையாகக் கொண்டது. இதனை எப்படி கணக்கிட்டார்கள் என்பதற்கு போதிய விவரங்கள் இல்லை. திறந்த வெளி மலம் கழித்தல் பற்றிய ஒரு மதிப்பீடு அது  முழுமையாக ஒழிக்கப்பட்டதாக மிகைப்படுத்தி கூறப்பட்ட அதிகாரப்பூர்வ கூற்றுக்கு முரணாக இருந்ததால்  இந்த ஆய்வுக்கு (NFHS 5)  தடை விதிக்கப்பட்டது. இதற்கு தலைமை தாங்கிய பிரபல மக்கள் தொகை நிபுணர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நம்பகத்தன்மை இல்லாத தாகக் கூறப்பட்ட கணக்கெடுப்பு தடுக்கப்பட்டாலும் நிதி ஆயோக்கும் ஐ.நா.வளர்ச்சித் திட்டமும் அதையே அடிப்படையாக எடுத்துக் கொண்டு அதை  சாதனை என அரசு கூறுவதை எப்படி நாம் ஏற்க முடியும்? நியாய மாக பார்த்தால்NFHS 4&5 ன் ஆய்வுகள் தேசிய முன்மாதிரி ஆய்வின் 75வது சுற்று, வீட்டு நுகர்வுச் செலவினத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வறுமை குறித்த உண்மையான நிலவரம் அந்த சுற்றில் அம்பலமானதால் இந்த முறையையும் மோடி அரசு கைவிட்டது.

கோவிட் தாக்கத்தின் பின்புலத்தில்!

2020 21 கோவிட் 19 தொற்றுநோயால் ஏற்பட்ட அழிவுகள் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. லட்சக்கணக்கானவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். திடீரென அமலாக்கப்பட்ட பொது முடக்கத்தால்  சொந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தடுப்பூசி தட்டுப்பாடுகளாலும் மருத்துவ வசதிகள் பற்றாக்குறையாலும் உயிரிழந்தனர். உண்மையில் இந்த தொற்றுநோய் ஒரு பெரிய பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீள முடியாமல் திணறி வருகிறது. 2015-16ல்8% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)  2019-20 ல் 3.78% ஆகவும் 2020-21 இல் (மைனஸ்)-6.60% ஆகவும் சரிந்தது. பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியது. அதோடு மட்டுமல்லாமல் கல்வி,சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு வலைகளின் பராமரிப்பு மற்றும் விரிவாக்கத்திற்கு ஆதாரமாக விளங்கிய பொது நிதி  ஈடு செய்ய முடியாத அளவிற்கு சுருங்கிப் போனது.

இதர காரணிகள்

மாநில தனிநபர் வருமானம், மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு,நகர்ப்புற மக்களின் பங்கு, சுகாதார மற்றும் கல்விச் செலவுகள் மற்றும் கவ னிக்கப்படாத மாநில விளைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய காரணிகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு காரணங்களுடனும் பல பரிமாண வறுமைக் குறியீட்டின் நெகிழ்ச்சித் தன்மை யோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மாநில தனி நபர் வரு மானம் குறைவாக இருப்பதால் வறுமை குறைப்பும் தடைபடும் நிலை ஏற்படும். எனவே வருமானம் குறைந்ததால் வறுமையின் குறியீடும் அதிகரிக்கும். இதில் முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த வரிசையில் இருப்பது நகர்ப்புற வாழ்விடம். இதில் 1 சதவீதம் அதிகரித்தால் 0.90 சதவீதம் வறுமைக் குறியீடும் உயரும். கிராமப்புற- நகர்ப்புற இடம் பெயர்வு  மனித வாழ்க்கை நிலைமைகளுடன் தொடர்புடையது என்பதால் ஆச்சரியப்படுவதற்கு இதில் ஒன்று மில்லை. இருப்பினும் கோவிட் தாக்கத்தால் நிகழ்ந்த  புலம் பெயர்வு மீதான நேரடி விளைவை ஏற்படுத்த வில்லை என்பதை இவ்வாறு விளக்கலாம். உடல் நல பாதுகாப்பு மற்றும் கல்விச் செலவு இரண்டும் குறைந்த வறுமைக் குறியீட்டுடன் தொடர்புடையவை. கல்விச் செலவில் ஒரு சதவீதம் அதிகரிப்பு  வறுமை குறியீட்டை குறைக்கும். உடல் நலப் பாதுகாப்பு செலவை ஒப்பிடும்போது இது நெகிழ்ச்சி தன்மையுடையது.மாநில அளவிலான மதிப்பீடுகள் சரிவை குறிக்கிறது. இதனால் வறுமைக் குறியீடும் அதிகரிக்கும்.

கோவிட் 19 ஐ எதிர்த்து போராட மாநில அளவி லான சுகாதார செலவுகள் அதிகரித்த போதிலும் அது தேவையான அளவைவிட மிகவும் குறை வாகவே இருந்தது.

மொத்த மாநில அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களில்  குற்றவியல் வழக்குகள் உள்ளோரின் பங்கு 20% தாண்டினால் வறுமை குறியீடு அதிகமாகும். ஏனென்றால் சட்டப்பேரவையில் குற்ற பின்னணி உடைய உறுப்பினர்கள் மற்றும் ஊழலில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக பாது காப்பு வலைகள் மற்றும் பகுதி மேம்பாட்டு திட்டங்க ளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பறித்து விடுகின்றனர் .அத்தகைய குற்றப் பின்னணி உறுப்பினர்களின் பங்கு 2004 மக்களவை தேர்தலில் தேர்வு செய்யப் பட்டவர்களில் 24 சதவீதம் இருந்தது. 2009இல் 30 % 2014இல் 34% ஆகும் 2019 இல் 43% ஆகவும் உயர்ந்து கொண்டே செல்வது கவலை அளிக்கிறது.

2015- 2021 க்கும் இடையிலான ஆறு ஆண்டுகளில் வறுமை குறைப்பு என்பது அதிகாரப்பூர்வமாக அர சாங்கத்தால் வெளியிடப்படுவதை காட்டிலும் மிகவும் குறைவு என்பதுதான் உண்மை. அதாவது 9.89 சதவீதம் அல்ல,4.7  சதவீதம் மட்டுமே வறுமை குறைந்துள் ளது. எங்களுடைய மதிப்பீடுகளின் படி கணக்கி டப்பட்டால் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வறுமை 7புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. 

வெற்று மிகைப்படுத்தலே!

பாஜக அரசு, பல பரிமாண வறுமை குறியீட்டு முறையின் அடிப்படையில் வறுமையை வென்றுள் ளோம் எனக் கூறுவது வெற்று  மிகைப்படுத்தலே ஆகும். அதே நேரத்தில் வறுமையைக் குறைத்திட அது உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்ற உண்மையையும்  மறைக்கப் பார்க்கிறது.

ராதிகா அகர்வால், தில்லி பல்கலைக்கழகம்   

வாணி எஸ்.குல்கர்னி மற்றும் 

ராகவ் கைகா பென்சில்வேனியா பல்கலைக்கழகம். 

தி இந்து 7/12/23. 

தமிழாக்கம் : கடலூர் சுகுமாரன்

- தீக்கதிர்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு