இஸ்ரேலுக்கு ரூ.888 கோடி மதிப்பிலான பீரங்கி குண்டுகள் அமெரிக்கா விற்பனை

தின மணி

இஸ்ரேலுக்கு ரூ.888 கோடி மதிப்பிலான பீரங்கி குண்டுகள் அமெரிக்கா விற்பனை

காஸா மீது தீவிர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு சுமார் 106.5 மில்லியன் டாலர்கள் (ரூ.888 கோடி மதிப்பிலான பீரங்கி குண்டுகளை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 7-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியும் எல்லைத் தாண்டியும் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் 1200 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஹமாஸ் படையிளருக்கு எதிராகப் போர் தொடுத்த இஸ்ரேல் காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

முதலில் வடக்கு காஸாவில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், தற்போது தெற்கு காஸாவிலும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

வடக்கு காஸாவில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்தப் பகுதிகளைச் சிதைத்துள்ளபோதிலும், அங்கு இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையினர் வலுவான முறையில் போரிட்டு பதிலடி அளித்து வருகின்றனர்.

ஹமாஸை ஒழிக்க அமெரிக்கா ஆதரவு:

காஸா மீதான இஸ்ரேலின் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா. பாது காப்பு கவுன்சிலில் ஐக்கிய அரபு அமீரகம் வரைவுத் தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்தில் அக். 7-ஆம் தேதி இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லை எனவும் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் தெரிவித்து, தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை அமெரிக்கா ரத்து செய்தது. இதன்மூலம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதாவு தெரிவித்துள்ளது.

மேலும், அவசரத் தேவையாக சுமார் 106.5 மில்லியன் டாலர்கள் (ரூ.888 கோடி) மதிப்பிலான பீரங்கி குண்டுகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா விற்பனை செய்ய, அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இலக்குக்கு வலுவாக ஆதரவு அளிப்பதாகவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில், காஸாயின் இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிஸ் நகருக்குள், அண்மையில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அங்கு கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுகள் வெடிக்கும் ஓசை கேட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மத்திய கிழக்கில் தொடரும் தாக்குதல்

உலகின்மத்தியகிழக்குப்பகுதியில் இஸ்ரேல்,ஈரான், லெபளான்உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தொடர்கிறது. இஸ்ரேலும் லெபனானும் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக எல்லைப் பகுதிகளில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல்மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளent.

இதேபோல ஈரான் ஆதரவுபெற்ற போராளி குழுக்கள், சிரியாவிலும் இராக்கிலும் அமெரிக்க படைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

மேலும், பேமனில் இருந்து வந்த 2 ஆளில்லா லிமானங்களை (ட்ரோன்) செங்கடலில் தமது போர்க் கப்பல்கள் சுட்டு வீழ்த்தியதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அந்தக் கடற்பகுதி வழியாக இஸ்ரேலின் கப்பல் போக்குவரத்தை நிறுத்த ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாக்கி ஹனெக்பி கூறுகையில், 'ஹிஸ்புல்லா, ஈரான் ஆதரவு போராளி குழுக்களின் மிரட்டலை சமாளிக்க இஸ்ரேலுடன் நட்பு பாராட்டி வரும் மேற்கத்திய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டலுக்கு எதிர்வினையாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நாடுகளுக்கு சிறிது அவகாசம் அளிக்கப்படும். ஒருவேளை மிரட்டல் நீடித்தால், இஸ்ரேல் நேரடியாக எதிர்வினையாற்றும்' என்று தெரிவித்தார்.

இதுவரை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் காஸாவில் 17,700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சுகம் தெரிவித்துள்ளது.

துன்புறுத்தல்

ஹமாஸ் படையினரை பிடிக்கும் நோக்கில், பொதுமக்களை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச் சென்று துன்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் உள்பட பலரைப் பிடித்துச் சென்று, அவர்கள் ஹமாஸ் படையினருடன் இருந்தார்களா என்று ராணுவத்தினர் விசாரிக்கின்றனர். இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டவர்களில் சிலர், பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையள உணவுத் தட்டுப்பாடு

காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதிய அளவு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை. அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் நிவாரணப் பொருள்களை வழங்குவது சாத்தியமற்றதாக உள்ளது. இதனால் அங்கு உணவு, குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

காஸாவில் பாதுகாப்பான இடமே இல்லை

ஐ.நா காஸாவில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல விரிவான அறிவுறுத்தல் களை வழங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தற்போது டி தெற்கு காஸா முனையில் உள்ள ராஃபா நகருக்கும், எகிப்து எல்லையையொட்டி பகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், காஸா  முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் காஸாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஹமஸிடம் 117 பிணைக் கைதிகள்

ஹமாஸிடம் மேலும் 117 பிணைக் கைதிகளும், அக்.7- ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட 20 பேரின் சடலங்களும் உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இஸ்ரேலில் உள்ள ஏராளமான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் நோக்கில், பிணைக் கைதிகள் மற்றும் சடலங்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் படையினர் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

- தின மணி

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு