இந்துத்துவத்தின் இறுதி வடிவம்

டி.என்.ஜா - தமிழில்: பாரதி

இந்துத்துவத்தின் இறுதி வடிவம்

விலை : ரூ.40

நூலாசிரியர்: டி.என்.ஜா - தமிழில்: பாரதி

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 48 

நூல் குறிப்பு:

இந்துத்துவ பாசிசம் குறித்து பெருமளவு விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தாலும், பெரும்பாலும் அவை பாசிசத்தின் மேற்கட்டுமானம் பற்றியே பேசுவதாக உள்ளன. அதன்  பொருளியல் அடித்தளம் பற்றிய விவாதம் நடைபெறுவதாக  சான்றுகள் இல்லை. இனி அது நோக்கிய நகர்வை நாம் செய்தாக வேண்டும். இல்லையெனில் சரியானதொரு பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்டி பாசிசத்தை வீழ்த்த இயலாது. இந்துத்துவ பாசிசத்தை வெறும் மதவாதமாக மட்டுமே பார்க்கும் போக்கு உள்ளதால் மதச்சார்பின்மை எனும் பேரில் காங்கிரசுக்கு முட்டு கொடுப்பதும் இதை வெறும் பார்ப்பன பாசிசமாக குறுக்குவதன் மூலம் பார்ப்பனர் அல்லாத பாசிஸ்டுகளுக்கு துணை போவது என்பதும் இந்துத்துவ பாசிசத்தை நிச்சயமாக பலப்படுத்தும். அது மட்டுமல்ல ஏகபோக நிதிமூலதன கும்பலின் ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தையும் பலவீனப்படுத்தும். ஏனெனில் இந்துத்துவப் பாசிச எதிர்ப்பும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதது ஆகும்.

தொடர்புக்கு: +91 96003 49295