நடைமுறைப் பற்றி

மாவோ

நடைமுறைப் பற்றி

விலை : ரூ.40

நூலாசிரியர்: மாவோ

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 40 

நூல் குறிப்பு:

அனைத்திற்கும் மேலாக மனிதனுடைய பொருளுற்பத்திக்கான நடவடிக்கையே மிகவும் அடிப்படையான நடைமுறைச் செயல், அதுதான் அவனுடைய பிறநடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் செயல் என்று மார்க்சியவாதிகள் கருதுகிறார்கள். மனிதனின் அறிவு என்பது அவனது பொருளுற்பத்திக்கான செயலையே முதன்மையாகச் சார்ந்திருக்கிறது. அதன் மூலமாகவே அவன் இயற்கையின் புதுமைத் தோற்றத்தையும், தன்மைகளையும், விதிமுறைகளையும் படிப்படியாக அறிந்து கொள்கிறான். மேலும் தனக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவையும், நடைமுறையில் புரிந்து கொள்ள முடிகிறது. தனியுடைமை இல்லாத சமுதாயத்தில் ஒவ்வொரு நபரும் சமுதாயத்தின் ஒரு உறுப்பினர் என்ற முறையில் பிற உறுப்பினர்களுடன் பொதுவான முயற்சியில் ஒன்றிணைந்து, அவர்களுடன் திட்டவட்டமான உற்பத்தி உறவுகளைக் கொண்டு, மனிதனின் பொருட் தேவைகளை நிறைவு செய்வதற்கான உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். வர்க்க வேறுபாடுகள் இருந்த எல்லா சமுதாயங்களிலும், சமுதாயத்தின்  வெவ்வேறு வர்க்கங்களின் உறுப்பினர்களும் பல்வேறு  வகையில், திட்டவட்டமான உற்பத்தி உறவுகளைக் கொண்டு, அவர்களுடைய வாழ்வுக்கான பொருட் தேவைகளை நிறைவு செய்வதற்கு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். மனித அறிவு வளருவதற்கு முதன்மையான ஊற்று மூலம் இதுவேதான்.

தொடர்புக்கு: +91 96003 49295