கேரளாவை ரியல் எஸ்டேட் சந்தைக்காக அகல திறந்துவிட்டுள்ள சிபிஎம் அரசு
விஜயன் (தமிழில்)
கொச்சி, திருவனந்தபுரம் போன்று கேரளாவில் உள்ள இரண்டாம் கட்ட பெருநகரங்களில் வர்த்தக தலங்களுக்கான கிராக்கி அதிகரித்துவ வருவதாக கூறப்படுகிறது; அம்மாநிலத்தில், கடன் வசதியுடன் வீடுகளை வாங்க விரும்பும் புதிய வர்க்கம் வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
கேரள மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்காற்று ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யப்படும் நில வணிக, மனை வணிகத்திற்கான திட்டப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பற்றி கேரள மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்காற்று ஆணையத்தின்(K-RERA) தலைவர் பி.எச். குரியன் கூறிவதாவது, ஓர் ஆண்டிற்கு நில வணிகம், மனை வணிக அதிகமாக நடக்கும் பெருநகரங்களில் முதன்மையான நகரங்களாக கொச்சியும், திருவனந்தபுரமும் இருந்து வருவதாக கருத்துத் தெரிவித்துள்ளார். வங்கிகளில் கடன் வசதி பெறுவதற்கு வாய்ப்பிருக்கும் முதலீட்டாளர்கள் உள்ளூர் அளவில் வேகமாக அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
கேரள மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்காற்று ஆணையம் வெளியிட்ட ஆண்டறிக்கையில்(2023) பெருநகரமயமாக்கல் பாய்ச்சல் வேகத்தில் நடந்து வருவதையே எடுத்துக் காட்டுகின்றன. 2022ல், பதிவு செய்யப்பட்ட நில வணிக, மனை வணிகத்திற்கான திட்டப் பணிகள் 159 என்றால், 2023ல் இந்த எண்ணிக்கை 211 என்றளவிற்கு அதிகரித்துள்ளது. இவற்றில் 90 சதவீத பணிகள் முழுமையடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில்லாதளவிற்கு, சென்றாண்டில் மட்டும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைப்பதற்கான திட்டப் பணிகளை 122 நிறுவனங்கள் துவங்கப் போவதாக பதிவு செய்துள்ளன. மொத்தமாக 7,362 அடுக்குமாடி வீடுகள்(flats) கட்டப்படுவதாக கூறியுள்ளனர். நகர்ப்புறமாக மாளிகை போன்று அமைக்கப்படும் தனிவீடுகள்(Villas) கட்டும் திட்டப் பணிகளை 56 நிறுவனங்கள் துவங்கியுள்ளதாக பதிவு செய்துள்ளன. மொத்தமாக, 1,181 வில்லாக்கள் கட்டப்படும் என பதிவு செய்துள்ளன. மனையிடங்களை(Plots) விற்பதற்காக 21 நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்துள்ளன. அதன்படி, 1,623 பிளாட்டுகள் விற்பதற்கு பதிவுகள் நடந்துள்ளன. வணிக வளாகங்களுடன் அமைக்கப்படும் குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டப் பணிகளை 12 நிறுவனங்கள் துவங்கியிருப்பதாக பதிவு செய்துள்ளன என்று கேரள ரியல் எஸ்டேட் ஒழுங்காற்று ஆணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் வணிகம் எர்ணாகுளம் மாவட்டத்தில்தான் அதிகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தமாக, 78 நிறுவனங்கள் 2,781 குடியிருப்புகள்/பிளாட்டுகள்/வில்லாக்கள் அமைப்பதற்கு புதிதாக பதிவு செய்துள்ளன. இதேபோல, திருவனந்தபுரத்தில் 51 நிறுவனங்கள், 2,701 குடியிருப்புகள்/பிளாட்டுகள்/வில்லாக்கள் அமைப்பதற்கு களமிறங்கியுள்ளன. 2023-ம் ஆண்டில், வயநாடு, காசர்கோடு பகுதியில் மட்டும் மனை வணிகம், நில வணிகத்திற்கான திட்டப் பணிகள் எதுவும் எந்த நிறுவனத்தாலும் புதிதாக பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
K-RERA வழங்கியத் தகவல்படி, சென்றாண்டில் 15,14,746.37 சதுர மீட்டர் அளவிற்கான நிலத்தில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதில், வணிக பயன்பாட்டிற்காக மட்டும் 17,103.61 சதுர மீட்டர் அளவிற்கான நிலத்தில் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்திற்கு பிறகு ரியல் எஸ்டேட் சந்தை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறதென்று நாட்டிலுள்ள 21 மாநிலங்கள் மற்றும் 220 மாநகரங்களைச் சேர்ந்த ரியல் எட்டேட் முதலாளிகள் சங்கத்தின் கூட்டமைப்பு(Credai) தெரிவித்துள்ளது.
அவ்வகையில், ரியல் எஸ்டேட் சந்தை மீண்டெழுந்து வருகிறது என்று Credai அமைப்பின் கேரள பிரிவு செயலாளர் எட்வர்ட் ஜார்ஜ் கூறியுள்ளார். ரியல் எஸ்டேட் சந்தையில் அதிக நம்பகத்தன்மையையும், ஒளிவுமறைவின்மையும் பெருமளவு அதிகரிக்கச் செய்த கேரள அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகளை பாராட்டி பேசியுள்ளார். அந்தந்த மாநிலங்களிலுள்ள ரியல் எஸ்டேட் ஓழுங்குமுறை ஆணையத்துடன் சேர்ந்து, ரியல் எஷ்டேட் சந்தையின் வளர்ச்சிக்கு உகந்த கொள்கை திட்டங்களை வகுப்பது போன்ற பணிகளிலும் Credai ஈடுபட்டு வருகிறது.
ரியல் எஸ்டேட் சந்தையின் வளர்ச்சிக்கு பெரிதாக பங்களிக்காத, தரம் குறைந்த முதலீட்டாளர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. முன்பு போல் அல்லாமல், கேரள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (K-RERA) நிறுவப்பட்தன் மூலம் நிபந்தனைகள் கடினமாக்கப்பட்டுள்ளதால், தீவிரமான ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் மட்டுமே சந்தையில் இயங்க முடியும் நிலை உருவாகியுள்ளது என்று ஜார்ஜ் எட்வர்டு கூறியுள்ளார். மட்டுமல்லாது, பன்னாட்டு நிறுவனங்களும், இரண்டாம் நிலை பெருநகரங்களில் வணிக தலங்களை நாடுவதில் ஆர்வம் காட்டி வருவதால் நிச்சயமாக, ரியல் எஸ்டேட் சந்தை பிரகாசமாக இருக்கிறதென்று எட்வர்டு ஜார்ஜ் கூறுயுள்ளார்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை : https://www.thehindu.com/news/national/kerala/real-estate-market-in-kerala-witness-to-great-buoyancy/article67751813.ece