ஹிஜாப் தடை: ஒரே சட்டப்பிரிவு - இரு வேறு தீர்ப்பு

ஹிஜாப் கட்டுப்பாட்டின் துரதிர்ஷ்டவசமான சிதைவு என்னவென்றால், நாம் ஒரு பெண் குழந்தைக்கு கல்வியை மறுத்திருப்போம். ஒரு பெண் குழந்தை தனது பள்ளி வாசலை அடைவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே, இந்த வழக்கு, ஒரு பெண் குழந்தை தனது பள்ளியை அடைவதில் ஏற்கனவே எதிர்கொள்ளும் சவால்களின் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும். இந்த நீதிமன்றம் முன் வைக்கும் கேள்வி என்னவென்றால், ஒரு பெண் குழந்தை ஹிஜாப் அணிந்ததால் மட்டுமே அவளது கல்வியை மறுப்பதன் மூலம் அவள் வாழ்க்கையை மேம்படுத்துகிறோமா என்பதுதான்!

ஹிஜாப் தடை: ஒரே சட்டப்பிரிவு - இரு வேறு தீர்ப்பு

ஹிஜாப் தடை நீடிக்கிறது

(Operation Success and Patient Died)

 

கருநாடக உயர்நீதிமன்றம் பள்ளிகள் கல்லூரிகளில் இசுலாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பலர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இவ்வழக்கில் 13.10.2022ல் (நேற்று) உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அதில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இருவேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

 

இந்த இரண்டு நீதிபதிகள் பெஞ்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஹேமந்த் குப்தா வழங்கிய தீர்ப்பு:

 

முன்மொழிவை பிரச்சாரம் செய்வதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஹிஜாப் அணிவது ஒரு 'மத நடைமுறை' அல்லது 'அத்தியாவசியமான மத நடைமுறை' அல்லது இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு சமூக நடத்தையாக இருக்கலாம். முக்காடு அணிவது பற்றி மத நம்பிக்கையாளர்களின் விளக்கம் என்பது ஒரு தனிநபரின் நம்பிக்கை. அரசு நிதியில் இருந்து இயங்கும் மதச்சார்பற்ற பள்ளிக்கு மத நம்பிக்கையை கொண்டு செல்ல முடியாது. ஒரு நபருக்கு ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைக் கொண்ட அடையாளத்தை காண்பிக்கும் ஹிஜாப் அல்லது வேறு எந்த அடையாளத்தையும் அணிய எந்த பள்ளி அனுமதிக்கிறதோ அங்கு மாணவர்கள் தங்கள் நம்பிக்கையை எடுத்துச் செல்லலாம், அது திலகமாக கூட இருக்கலாம். ஆனால் அரசு வழிநடத்தும் அதன் அதிகார வரம்பிற்குள் பள்ளிகளுக்கு மத நம்பிக்கைகளின் வெளிப்படையான சின்னங்களை எடுத்துச் செல்ல முடியாது

 

அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது அரசின் கடமையாக உள்ளது என்ற வாதம் வைக்கப்படுகிறது. கல்வி பாடங்களுக்கு பாரபட்சமற்ற முறையில் சாதகமான சூழலை உருவாக்கும் பொறுப்பு இல்லை என்றே பொருள். ஒரு மத நம்பிக்கை உடைய மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிய தூண்டினால், மற்றவர்கள் தங்கள் நம்பிக்கைகளை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வதை தடை செய்ய முடியாமல் போகும். மாணவர்கள் கல்விக்கு அனுமதி கோரும் பள்ளியின் புனிதமான சூழலுக்கு அது உகந்ததாக இருக்காது. உண்மையில், சீருடை மாணவர்களிடையே 'சமத்துவம்' என்ற உணர்வை வளர்க்கிறது- ஒருமை உணர்வை வளர்க்கிறது, தனிப்பட்ட வேறுபாடுகளைக் குறைக்கிறது, மாணவர்கள் தங்கள் சமூக நிலையைப் பற்றி கவலைப்படாமல், கற்றலில் கவனம் செலுத்த உதவுகிறது, ஒழுக்கத்தை மேம்படுத்துகிறது, பள்ளியில் குறைவான மோதல்கள், பள்ளி மனப்பான்மையை ஊக்குவிக்கிறது. - சொந்தம், பெருமை, விசுவாசம் போன்ற உணர்வை பள்ளியின் மீது உருவாக்குகிறது, பெற்றோர்கள் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கிறது, கல்வி நிறுவனத்தின் முன் சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது, பலதரப்பட்ட சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது மற்றும் வகுப்புவாத அடையாளத்தின் நேர்மறையான உணர்வை ஊக்குவிக்கிறது மற்றும் செல்வம் மற்றும் வாழ்க்கைமுறை வேறுபாடுகள் வளர வழிவகுக்காது. வாழ்க்கையின் எதிர்கால நோக்கங்களை கற்றுக்கொள்வதற்கும் அடித்தளம் அமைப்பதற்கும் பள்ளி நேரம். மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்களை வளர்ப்பதற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பது பள்ளியின் பொறுப்பாகும்.

 

“மதச்சார்பின்மை அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் எனவே, ஒரு மத சமூகம் மதச் சின்னங்களை அணிய அனுமதித்தால் மதச்சார்பின்மைக்கு எதிரானதாக இருக்கும்” என்று கூறி கருநாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி மனுவை தள்ளுபடி செய்தார். 

 

மேலும் “கருத்து வேறுபாடு உள்ளது என்று அவரது உத்தரவில் 11 கேள்விகளை எழுப்பியுள்ளார்

 

1. கண்டாரு ராஜிவாரு சபரிமலை வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரத்தை அரசியலைமைப்பு பிரிவு 145(3)ன் படி பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டுமா?

 

2. பெண்கள் கல்வியை கற்பதற்கு 19, 21 மற்றும் 25 பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமைகளை கைவிட வேண்டி முன் நிபந்தனையாக மாநில அரசு கோர முடியுமா?

 

3. ஹிஜாப் இஸ்லாத்தில் இன்றியமையாத மத நடைமுறையா?

 

4. பிரிவு 25 இன் பாதுகாப்பைப் பெற ஹிஜாப் ஒரு அத்தியாவசிய மத நடைமுறை என்பதை நிறுவுவது அவசியமா?

 

5. ஹிஜாப் அணிவதற்கான உரிமையை 19(1)(a) இன் கீழ் கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகவும், பிரிவு 21 இன் கீழ் தனியுரிமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமையின் ஒரு பகுதியாகவும் கோர முடியுமா?

 

6. சட்டப்பிரிவு 19(2)ன் கீழ் நியாயமான கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பிப்ரவரி 5 அரசின் ஆணை நியாயப்படுத்தப்படுமா?

 

7. வேறு சில குழுக்கள் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தத் தொடங்கியதன் அடிப்படையில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்ய முடியுமா?  அத்தகைய கட்டுப்பாடு ஹெக்லர்ஸ் வீட்டோவுக்கு அடிபணிவதற்கு சமமா?

 

8. ஏற்கனவே சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் பெண்களின் கல்வியை பறிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் ஏதேனும் சட்டபூர்வமான அரசு நலன் உள்ளதா?

 

9. நியாயமான தங்குமிடத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட சீருடை ஆடையின் சில நிறங்களின் தலையில் முக்காடு அணிவதை அனுமதிக்க முடியுமா?

 

10. அனைத்து மாணவர்களுக்கும் சீருடை விதிக்கப்பட்டுள்ள வகுப்பறையில் மதம் சார்ந்த உடை அணிவதற்கு ஏதேனும் அடிப்படை உரிமை உள்ளதா?

 

11. அரசு மற்றும் கல்லூரி வாரியம் அல்லது குழு தடை செய்வதற்கு முன் அது குறித்து நீதிமன்றத்தின் ஆலோசனை பெறாமல் செய்தது சரிதான? ஒரு கல்வி நிறுவனத்தில் சீருடைக்கான பரிந்துரையை நியாயமற்ற தடைக்கு உட்படுத்த முடியுமா?”

 

என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு வழி காணுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

 

நீதிபதி சுதன்சு துலியா தனது தீர்ப்பில்:

 

"இந்த சுதந்திரம், சமத்துவத்துவம் மற்றும் சகோதரத்துவத்துவம் மூன்றையும் தனித்தனியாகக் கருதக்கூடாது. இவை மும்மூர்த்தியாய் ஒன்றிணைந்தே உள்ளது. அதன் பெருள் ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது என்பதே ஜனநாயகத்தை நோக்கத்தினை வீழ்த்துவதாகும். சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவத்தை சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது. சகோதரத்திலிருந்து சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பிரிக்க முடியாது. சமத்துவம் இல்லாமல், சுதந்திரம் சிலர் மீது பலரின் மேலாதிக்கத்தை உருவாக்கும். சுதந்திரம் இல்லாத சமத்துவம் தனிநபர்களின் முன்முயற்சியை கொன்றுவிடும். சகோதரத்துவ சுதந்திரம் மற்றும் சமத்துவம் இல்லாமல் என்பது இயல்பான ஒன்றாக மாற முடியாது” என்று அம்பேத்கர் அரசியலமைப்பு அவையின் விவாதத்தில் கூறியதை கோடிட்டு காண்பித்தார்.

 

சகோதரத்துவமே நமது அரசியலமைப்பின் மதிப்பாகும். எனவே நாம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும், மேலும் சில கற்றறிந்த ஆலோசகர்கள் மற்றவர்களின் நம்பிக்கை மற்றும் மத நடைமுறைகளுக்கு நியாயமான முறையில் இடமளிக்க வேண்டும் என்று வாதிடுவார்கள். நீதிபதி ஓ. சின்னப்பா ரெட்டி பிஜோ எம்மானுவேல் வழக்கில் செய்த முறையீட்டை நாம் நினைவில் கொள்ள வேண்டும். “நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையைக் கற்பிக்கிறது; நமது தத்துவம் சகிப்புத்தன்மையை போதிக்கிறது; நமது அரசியலமைப்புச் சட்டம் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கிறது; நாம் அதை நீர்த்துப்போகச் செய்ய வேண்டாம்.

 

அதோடு, நமது அரசியலமைப்பு திட்டத்தின் கீழ், ஹிஜாப் அணிவது வெறுமனே விருப்பமான விஷயமாக இருக்க வேண்டும். இது இன்றியமையாத மத நடைமுறையின் விஷயமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அது இன்னும் மனசாட்சி, நம்பிக்கை மற்றும் வெளிப்பாட்டின் விஷயம். அவள் ஹிஜாப் அணிய விரும்பினால், அவளது வகுப்பறைக்குள் கூட, அவளைத் தடுக்க முடியாது, அது அவளுடைய விருப்பப்படி அணிந்திருந்தால், அவளுடைய பழமைவாத குடும்பம் அவளைப் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரே வழியாக இருக்கலாம். சந்தர்ப்பங்களில், அவரது ஹிஜாப் கல்விக்கான டிக்கெட்டாகும்.

 

மேலும்,ஹிஜாப் கட்டுப்பாட்டின் துரதிர்ஷ்டவசமான சிதைவு என்னவென்றால், நாம் ஒரு பெண் குழந்தைக்கு கல்வியை மறுத்திருப்போம். ஒரு பெண் குழந்தை தனது பள்ளி வாசலை அடைவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே, இந்த வழக்கு, ஒரு பெண் குழந்தை தனது பள்ளியை அடைவதில் ஏற்கனவே எதிர்கொள்ளும் சவால்களின் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும். இந்த நீதிமன்றம் முன் வைக்கும் கேள்வி என்னவென்றால், ஒரு பெண் குழந்தை ஹிஜாப் அணிந்ததால் மட்டுமே அவளது கல்வியை மறுப்பதன் மூலம் அவள் வாழ்க்கையை மேம்படுத்துகிறோமா என்பதுதான்!

தொடர்புடையவை: ஹிஜாப் தடை: பகுதி-1 இசுலாமியப் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கும் இந்துத்துவப் பாசிசம்

ஹிஜாப் தடை: பகுதி-2 இசுலாமியப் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கும் இந்துத்துவப் பாசிசம்

நமது அரசியலமைப்பு ஒரு நீதியான சமுதாயத்தை காட்சிப்படுத்தியுள்ளது, அதனால்தான் குடிமக்களுக்கு முதல் அறம் பாதுகாப்பான  'நீதி' ஆகும். இது நமது முகப்புரையில் உறுதிபடுத்தியுள்ளவற்றில் முதன்மையானது. ரால்ஸ் என்பவர் தனது 'எ தியரி ஆஃப் ஜஸ்டிஸ்' இல் எழுதுகிறார்: "... நீதி என்பது சமூக நிறுவனங்களின் முதல் நற்பண்பு, உண்மை என்பது சிந்தனைகளின் அமைப்புமுறை..." "..ஆகவே ஒரு நீதியான சமூகத்தில் சமமான குடியுரிமைக்கான சுதந்திரங்கள் தீர்க்கப்பட்டவை, நீதியால் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் அரசியல் பேரம் அல்லது சமூக நலன்களின் கணக்கீடுகளுக்கு உட்பட்டது அல்ல.

 

பள்ளி நுழைவாயிலில் நுழையும் முன் பெண்களை ஹிஜாபை கழற்றச் சொல்வது முதலில் அவர்களின் தனியுரிமை மீதான படையெடுப்பு, பின்னர் அது அவர்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல், பின்னர் அது அவர்களுக்கு மதச்சார்பற்ற கல்வி மறுப்பு. இவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a), பிரிவு 21 மற்றும் பிரிவு 25(1) ஆகியவற்றை தெளிவாக மீறுகின்றன."  என்ற முற்போக்காகவே தீர்ப்பை வழங்கியுள்ளார்.

 

இதில் பிஜோ எம்மானுவேல் வழக்கை எடுத்துக்காட்டி அவ்வழக்கில் நீதிபதி ஓ.சின்னப்பா ரெட்டி அவர்கள் கொடுத்த தீர்ப்பைபோல் அணுக வேண்டும் என்று சுதான்சு துலியா கூறியிருந்தார். 1986ஆம் ஆண்டுகளில் நடைப் பெற்ற அந்த வழக்கினை பற்றி அறிவது இவ்வழக்கிற்கு மிகவும் முக்கியமானது.

 

பிஜோ எம்மானுவேல் எதிர் கேரள மாநிலம் என்ற வழக்கு

 

யெகோவாவின் சாட்சிகள் என்ற மதப்பிரிவினைச் சேர்ந்தவர்கள் அவர்களின் மதவழக்கப்படி அவர்களின் மத பாடலை தவிர வேறு எந்த தேசிய கீதத்தையும் பாமாட்டார்கள், எதிலும் ஈடுபாடு கொள்ளாதவர்கள். கேரளாவில் பிஜோ, பினு மோல், பிந்து எம்மானுவேல் ஆகிய மூன்று யெகோவாவின் சாட்சிகள் மதபிரிவைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியில் பயின்றுக் கொண்டிருந்தார்கள். அப்பள்ளியில் மொத்தம் 11 பேர் யெகோவா பிரிவைச் சேர்ந்தவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள். அந்த பள்ளி ஒரு இந்து அமைப்பினால் நடத்தப்படுகின்ற பள்ளியாகும். பள்ளி நிகழ்வில் தேசிய கீதம் பாடும் போது அம்மூன்று குழந்தைகளும் தேசியப் கீதத்தை பாடாமல் இருந்துள்ளனர். தேசிய கீதத்தை பாட மறுத்ததற்காகவே பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களின் பெற்றோர் கேரள உயர் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றார். அவ்வழக்கு விசாரிக்கப்பட்டபோது கல்வி அதிகாரியின் குழந்தைகளை வெளியேற்றிய உத்தரவை உறுதி செய்தார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தேசிய கீதத்தில் எந்த ஒரு மத உணர்விற்கும் எதிரான சொல்லோ கருத்தோ இல்லை. தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை அவமதிப்பது குற்றம். தேசிய கீதத்தை பாடுவது மதச்சுதந்திரத்திற்கு மாறானது என்னும் வாதம் ஏற்கத்தக்கதல்ல என்று தீர்ப்புக் கூறியிருந்தது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

ஆனால், உச்ச நீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 51-அ-வின் மற்றும் தேச அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971 படி குடிமக்கள் மீது தேசிய குறிக்கோள்கள், தேசிய நிறுவனங்கள், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தின் மீதான் தேச மதிப்பு இருந்தாலும், பள்ளியில் மற்ற மாணவர்களுடன் தேசிய கீதத்தை பாடாமலிருப்பது அவமதிப்புக்கு ஈடாகும் என்பது சரியல்ல. பிரிவு 25 சிறுப்பான்மை வகுப்பினர்களின் மதப்பற்றையும், இந்திய அரசியலமைப்பு சட்டதிற்குள் ணைப்பதே ஒரு உண்மையான ஜனநாயகத்தின் அடையாளமாகும். யெகோவாவின் சாட்சிகள் என்னும் பிரிவைச் சார்ந்தவர்களின் நடைமுறைகள் அபூர்வமாக தோன்றினாலும், அது நீதிமன்றத்திற்கு ஏற்கத்தக்கதல்லதாக தோன்றினாலும், அந்நடைமுறை அவசியமா நம்பிக்கையா என்பதே இங்குள்ள பிரச்சினையாகும். அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-இல் உள்ளக் கட்டுப்பாட்டிற்குட்பட்டு, குடிமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற மதத்தினைக் பற்றிக்கொள்ளலாம். எனவே உண்மையாக தம் மதப்பற்றிற்கு தடங்கலாய் விளங்கும் ‌போது அம்மாணவரை தேசிய கீதத்தைப் பாட வற்புறுத்துதல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19(1)(அ) மற்றும் 25(1)-க்கும் மாறானது. எனவே அம்மாணவர்களை கொடியை வணங்கவும் தேசிய கீதத்தை பாடவும் வற்புறுத்துதல், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு மாறானதாகும். ஆதலால் அம்மாணவர்களை அப்பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பிலும் குழந்தையின் கல்வி மற்ற காரணங்களுக்காக தடைப்படக் கூடாது என்பதையே கருத்தில் கொண்டு வழங்கப்பட்டது. 

 

இந்த தீர்ப்பைத்தான் ஹிஜாப் வழக்கிலும் சுதன்சு துலியா மேற்கோள் காட்டி அதே அடிப்படையில் ஹிஜாப் அணியும் பெண்களின் கல்வியும் பாதிக்கக் கூடாது என்று அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

 

ஹேமந் குப்தா வழக்கிய தீர்ப்பு மதச்சார்பின்மையை எல்லோரு பின்பற்ற வேண்டும் என்று சொன்னாலும், அதில் எழுப்பியுள்ள 11 கேள்விகளும் கல்வியையும், பெண்களின் சம உரிமையையும் பற்றிய கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. அதை விட அதில் சொல்லப்பட்டுள்ள விசயம் மதசார்பின்மை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற விதத்தில் கூறியிருப்பதுதான். அனுமதி கொடுக்கும், அல்லது மறுக்கும் தனியார் பள்ளிகளுக்கு இது பொருந்தாது என்றே இதற்கு பொருள்

 

இப்போது தீர்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் ஹிஜாப் அணியும் பெண்களின் உரிமைகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் முழு அமர்வு அமைத்து மீண்டும் விசாரித்து தீர்ப்புக் கொடுக்கும் வரை ஹிஜாப் தடை என்பது தொடரும்.

 

ஹிஜாப் தடையை அணுகுவது பற்றி வரலாற்று அனுபவம் நமக்கு காட்டுவது என்ன?

 

இங்கு தோழர் ஜே.வி.ஸ்டாலின் ஆப்கானிஸ்தான் தூதர் சுல்தான் அகமது கானுடன் உரையாடல் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. ஆப்கானின் கல்வி முன்னேற்றம் பற்றிய உரையாடல் அது. அதில் அகமத் கான் “ஆப்கன் மக்கள் மிக அடங்காதவர்கள். ஆப்கனிஸ்தானில் நிகழ்ந்த இரு புரட்சிகளின் போதும், பெண்கள் சதோரை கழற்றிய காரணத்தை வைத்து, பள்ளிகளை இலக்காக்கி தாக்கினர்,” என்று ஸ்டாலின் கூறும் போது “விரும்பினால், பெண்கள் சதோரை அணியலாம் என்றார், ஆனால, அவர், பள்ளியில் முல்லா இருக்கக் கூடாதென சொல்லவில்லை. முல்லாக்களில் முற்போக்கானவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் தருவது மத எதிர்ப்புக் கல்வி அல்ல.” என்றார். மேலும் “ஆப்கனிஸ்தானில் அதிக பள்ளிகள் தேவை, அவை கிராமப் பகுதிகளுக்கான ஆசிரியர்களை பயிற்றுவிக்க வேண்டும். ஆனால், கல்விக்கு எதிராக இல்லாத, முற்போக்கான முல்லாக்களை புறந்தள்ள வேண்டியதில்லை, அதற்கு எதிரானவர்களைத்தான் விமர்சித்திருக்க வேண்டும்.” என்று கூறினார். ஆப்கானின் முற்போக்கு ஜனநாயகவாதி என்று கூறும் அமானுல்லா பெண்கள் சதோர் (ஹிஜாப், பர்தா போன்று) அணிவதற்கு தடை விதித்தார். சதோரை கழற்றுங்கள் என்று ஆணையிட்டார். இதை ஆப்கான் தூதர் ஸ்டாலினிடம் “அமனுல்லா கான் அமானுல்லா கான் ஐரோப்பியா சென்று வந்த பின், அனைத்து மகளிரும் சடோரைக் கழற்றி எறிய வேண்டுமென்றார்”. அப்போது ஸ்டாலின் ”அப்படியானால், அமானுல்லாகான் அடிப்படையில் ஒரு முட்டாள். அவர் விஷயத்தை மேம்போக்காகக் அணுகியிருக்கிறார்.” என்று அவரின் நடவடிக்கையை விமர்சித்திருப்பார். 

- செந்தளம் செய்திப் பிரிவு