மோடி ஆட்சியின் ஊழல் - 7.5 லட்சம் கோடி ரூபாய் - சிஏஜி யின் அறிக்கை
CCEA தலைவர் மோடியின் கீழ் நடந்த முறைகேடு! ஆம் ஆத்மி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி! -பேரலை
மத்திய அரசின்து மீது சிஏஜி அறிக்கையை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகள் அடுக்கும் ஊழல் புகார்
பாரத்மாலா ஊழல்:
34,800 கிமீ சாலை அமைக்க ரூ.5,35,000 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 26,316 கிமீ சாலை அமைக்க ரூ.8,46,588 கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் படி ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 15.37 கோடி செலவு ஆகும். ஆனால் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி ஆகும் செலவு 32.17 கோடி அதாவது முறைகேடாக இந்தத் திட்டத்தின் நிதி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு இருப்பதாக ஊழல் புகார்.
துவாரகா நெடுஞ்சாலை ஊழல்:
1 கிமீ சாலை அமைக்க ரூ. 18 கோடி ஆகும் என முடிவு எடுக்கப்பட்ட நிலையில் தற்போது 1 கி.மீ ரூ.250 கோடி என அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 14 மடங்கு அதிகம். இது அப்பட்டமான ஊழல் என எதிர்க்கட்சிகள் புகார்.
அயோத்தியா மேம்பாடு திட்ட ஊழல்:
ஒப்பந்ததாரர்களுக்கு பணி கொடுக்கப்படும் பொழுது குறிப்பிட்ட அளவு உத்தரவாத தொகையை செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான அளவிற்கு இந்த உத்தரவாத தொகை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பாக ரூபாய் 62.17 கோடி எடுத்த ஒரு ஒப்பந்ததாரர் உத்தரவாத தொகையாக 3.11 கோடி செலுத்த வேண்டிய நிலையில் வெறும் 1.86 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார் ஆனால் அவருக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடி ஊழல்:
சிஏஜி அறிக்கையின் படி உத்தேசமாக 5 சுங்கச்சாவடிகளில் ஆய்வு செய்ததில் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. 132 கோடி அதிக தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாகவோ எட்டு வழி சாலையாகவோ தரம் உயர்த்தப்படும் போது கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணத்தில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதி, ஆனால் அதை மீறி அதிக தொகை வசூல் செய்யப்பட்டதாகப் புகார். தமிழ்நாட்டில் பரனூர் சுங்கச்சாவடி மையத்தில் மட்டும் கட்டணம் குறைக்காமல் இருந்ததால் 28 கோடி ரூபாய் வரை கூடுதலாக பொது மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப் பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கூட கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆயுஷ்மான் பாரத் ஊழல்:
7.5 லட்சம் மருத்துவ காப்பீடு அட்டைகள் ஒரே செல்போன் எண்ணைக் கொண்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சிஎஜி அறிக்கை. இறந்துவிட்ட 88,670 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை பார்த்ததாக காப்பீடு பெறப் பட்டிருப்பதாகவும், 2,14,923 காப்பீடுகள் சிகிச்சை பெற்றவர்கள் இறந்ததற்குப் பிறகு அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டிருப்பதாகவும் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார்.
இந்த திட்டங்களுக்கு நிதி அனுமதி அளிக்கும் CCEA அமைப்பின் தலைவர் பிரதமர் மோடி தான். அதனால், மோடிக்கு இந்த ஊழல்களில் நேரடி தொடர்பு இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம்.
- பேரலை
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு