அதானி பிரச்சனை ‘ஜனநாயக மறுமலர்ச்சிக்கு வழிகோலும்’: சோரஸ்

கௌதம் அதானியின் தண்டனைக்குரிய பங்குச் சந்தை மோசடிகள் அவரின் வணிக சாம்ராஜ்ஜியத்தை சுற்றி கொந்தளிப்பான சூழலை உருவாகியுள்ளதோடு, முதலீடுகளுக்கான இந்தியா மீதான நம்பிக்கைக்கும் வேட்டு வைத்துள்ளது. அது நாட்டின் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வழியாக அமையும் என்று பில்லியனர் - முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ் கூறுகிறார்.

அதானி பிரச்சனை ‘ஜனநாயக மறுமலர்ச்சிக்கு வழிகோலும்’: சோரஸ்

அமெரிக்க குறுகிய கால விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் அதானி குழுமத்தின் மீதான தாக்குதலினால் ஏற்பட்ட வீழ்ச்சி, இந்தியாவின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது. நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைப்பு முறை மீதும் அதானியுடனான பிரதமர் மோடியின் உறவைப்  பற்றியும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

"மோடி இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கிறார், ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பாராளுமன்றமும் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்" என்று சோரோஸ் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக ஒரு உரையில் கூறினார். “இது இந்தியாவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் மீதான மோடியின் பிடியை கணிசமாக பலவீனப்படுத்தும். அவசியமான அமைப்பு சீர்திருத்தங்களுக்கு வழிகோலும். நான் கூறுவது சாதாராணமாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.

சுமார் 8.5 பில்லியன் டாலர் நிகர மதிப்புள்ள ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் நிறுவனர் சொரெஸ், ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஊக்குவிக்கும் குழுக்களுக்கும் தனிநபர்களுக்கும் மானியங்களை வழங்குகிறார்.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "அறைகளில் அமர்ந்து கொண்டு மக்களை தவறாக கையாள்பவர்கள், மக்களின் ஆணைக்கிணங்க அரசியல் செய்பவர்களைப் பற்றி பிரசங்கிப்பது முரண்பாடானது" என்றும் "இந்தியாவின் ஜனநாயகத்திற்கு வெளியில் இருந்து சான்றிதழ்கள் தேவையில்லை." என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி பிற்பகுதியில் வந்த அதானி குழுமத்தின் மோசடி பற்றிய அறிக்கையானது, அதன் சந்தை மதிப்பில் 120 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்குகளை ஒழித்துவிட்டது. மேலும் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசையில் உலகின் இரண்டாவது பணக்காரராக இருந்தவர் சரிந்தார்.

இந்த நெருக்கடி அதானியுடனான மோடியின் உறவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களின் நெருங்கிய உறவால் உண்டான அதானியின் வானுயர் வளர்ச்சி பற்றிய வாதங்களையும் இந்திய எதிர்கட்சிகள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இது மோடியின் அரசியல் பயணத்தை பற்றியும் அவரின் பிரதமர் பதவி குறித்த கேள்விகளிலும் பிரதிபலிக்கிறது. மோடி இந்த பிரச்சினையை குறித்து இன்னும் பேசவில்லை. சமீபத்திய கவனம் அதானியின் கடன் மீதும் விழுந்துள்ளது. 

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://timesofindia.indiatimes.com/india/soros-sparks-row-by-saying-adani-case-may-open-door-to-democratic-revival/articleshow/98028877.cms?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=TOIIndiaNews&fbclid=IwAR2UWFdD-1k2QEnGgb-omgIgjRV0GnXNpISVdBRdG6UplMSUrUfBMWk4-pE