உலகளாவிய சிக்கல்கள் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை பாதிக்கும்: பரேக்

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா

உலகளாவிய சிக்கல்கள் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை பாதிக்கும்: பரேக்

உலகளாவிய சிக்கல்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைக் குறைக்க வாய்ப்புள்ளது, ஆனால் பல பெரிய பொருளாதாரங்களை விட நாடு மிகவும் நெகிழ்ச்சியுடன் உள்ளது என்று ஹெச்டிஎஃப்சி (HDFC) தலைவர் தீபக் பரேக் சனிக்கிழமை தெரிவித்தார்.

அரசியல் ஸ்திரத்தன்மை, தடுப்பூசி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, உள்நாட்டு நுகர்வு அடிப்படையிலான பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் மற்றும் நிதித் துறைக்கான ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவற்றில்  இந்தியா போதுமான பினபுலத்தைக் கொண்டுள்ளது என்று SPJIMR மையத்தின் குழும வணிகம் மற்றும் தொழில்முனைவு (CFBE) நிகழ்வில் பரேக் கூறினார். 

"உலகளாவிய நெருக்கடிகளிலிருந்து இந்தியா விடுபடவில்லை, ஆனால் பல பெரிய பொருளாதாரங்களைக் காட்டிலும் மிகவும் உறுதியானது என்பதை நிரூபித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய சிக்கல்கள் காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறையும்" என்று அவர் கூறினார்.

"சமீபத்திய காலத்தில் புவிசார் அரசியல் புவிசார் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. வர்த்தகம், சேவைகள், தொழில்நுட்பம், மூலதனம் வெளியேறுதல் மற்றும் தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றில் கூட அதன் தாக்கங்கள் பரவலாக உள்ளன. 

"உலக விநியோகச் சங்கிலிகள், புவி வெப்பமடைதல், இணைய அச்சுறுத்தல்கள் போன்ற அழுத்தமான பொது பிரச்சினைகளைத் தீர்க்க உலகளாவிய ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படும் நேரத்தில் நாடுகளிடையே பெரும் அவநம்பிக்கை நிலவுகிறது" என்று அவர் கூறினார்.

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை: பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா