கதிசக்தி - உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு IBRD கடன்

செந்தளம் செய்திப் பிரிவு

கதிசக்தி - உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு IBRD கடன்

ஏழு மாநிலங்களின் சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உலக வங்கி 250 மில்லியன் டாலர்களை கடனாக வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது. 

தமிழ்நாடு, ஒரிசா, ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, உ.பி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களுக்கு 18 வருட காலக்கெடுவுடன் இக்கடனை வழங்கப்போவதாக உலக வங்கியின் கிளையான சர்வதேசிய வளர்ச்சி மற்றும் மறுகட்டமைப்புக்கான வங்கி (IBRD) தெரிவித்துள்ளது. 

இக்கடனை பயன்படுத்தி ஏழு மாநிலங்கள் ஒன்றிணைந்து இந்திய சாலைகளில் நிகழும் அனைத்து விபத்துக்களையும் பதிவதற்கு ஒரு தேசம் தழுவிய தரவுத்தளம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் அதை அதிகமான தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தி செய்துமுடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

- செந்தளம் செய்திப் பிரிவு