எங்கெல்சின் எழுத்துக்கள் - சிறிய அறிமுகம் : அ.கா. ஈஸ்வரன்
(ஆகஸ்ட் -5 - எங்கெல்ஸ் நினைவுநாள் - இணைய வழிக் கூட்டத்தில் ஆற்றிய உரை)

எங்கெல்ஸ் மறைந்து 130 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் அவரை நினைவுகூறும் வகையில் நாம் கூடியிருக்கிறோம். எங்கெல்ஸ் இன்றும் நமக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதாலேயே நாம் இன்று அவர் பெயரால் செந்தளம் சார்பாக கூடியிருக்கிறோம்.
இன்றைய இணைய வழி கூட்டத்துக்கு, செந்தளம் கொடுத்தத் தலைப்பு எங்கெல்ஸ்: மார்க்சின் மறுபெயர். மிகமிக பொருத்தமானத் தலைப்பை கொடுத்திருக்கிறார்கள். மார்க்சைப் பற்றி பேசினால் எங்கெல்சை சேர்த்துக் பேசாமல் இருக்க முடியாது, அதே போல எங்கெல்சைப் பற்றி பேசினால் மார்க்சை சேர்த்துப் பேசாமல் இருக்க முடியாது.அதனால் இன்றைய கூட்டத்துக்கு தலைப்பு எங்கெல்ஸ்: மார்க்சின் மறு பெயர் என்று கொடுக்கப்பட்டது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.எங்கெல்ஸ்: மார்க்சின் மறு பெயர் என்று கூறுவது போல மார்க்ஸ்: எங்கெல்சின் மறு பெயர் என்றும் கூறலாம். இரண்டு பேர்களுக்கு இடையே உள்ள தோழமை அப்படிப்பட்டது. இதுவரை அப்படிப்பட்ட இணைபிரியா தோழர்களை இன்றுவரை நாம் காண முடியவில்லை.
மார்க்சியம் என்கிற சித்தாந்ததாத்தைப் படைத்ததில் மார்க்சுக்கு முதன்மையான பங்களிப்பு இருக்கிறது என்றாலும் அதில் எங்கெல்சின் பங்களிப்பும் கலந்திருக்கிறது என்பதே உண்மை ஆகும்.
மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் படைப்புகளில் இருந்தே நாம் மார்க்சியத்தை அறிந்து கொள்கிறோம். அப்படி இருக்க மார்க்சியம் என்ற பெயரில் மட்டுமே நாம் இந்த சித்தாந்தத்தை அழைப்பது ஏன் என்கிற கேள்விக்கு எங்கெல்சே பதிலளித்திருக்கிறார்.
"... இந்தக்கோட்பாட்டில்என்னுடையபங்கைப்பற்றிமீண்டும்மீண்டும்பேசப்பட்டுவருகிறது. எனவேஇந்தவிஷயத்தைமுடிவுக்குக்கொண்டுவரநான்இங்கேசிலவிவரங்களைச்சொல்லாமலிருக்கமுடியாது. மார்க்சுடன்எனக்கிருந்தநாற்பதுஆண்டுகாலஒத்துழைப்பின்போதும், அதற்குமுன்னரும், இந்தக்கோட்பாட்டுக்கானஅடித்தளத்தைஉருவாக்குவதிலும், மேலும்குறிப்பாக, அக்கோட்பாட்டைவிரித்துரைப்பதிலும்சற்றேசுதந்திரமானபங்குஎனக்கிருந்ததுஎன்பதைநான்மறுக்கமுடியாது. ஆனால்அதன்முதன்மையானஅடிப்படைக்கோட்பாடுகளில், சிறப்பாகப்பொருளாதாரம்மற்றும்வரலாற்றுத்துறைகளில்மிகப்பெரும்பகுதியும், மேலும்அனைத்துக்கும்மேலாக, அவற்றின்முடிவான, துல்லியமானவரையறுப்பும்மார்க்சின்பங்களிப்பாகும்.
ஒருசிலதனிச்சிறப்பானதுறைகளில்என்னுடையபணியைத்தவிர்த்து, என்னுடையபங்களிப்பினைத்தாராளமாகமார்க்ஸ்என்உதவியின்றியேசெய்திருக்கமுடியும். ஆனால்மார்க்ஸ்செய்துமுடித்ததைநான்ஒருபோதும்சாதித்திருக்கமுடியாது. எங்களுள்மற்றஎல்லோரைக்காட்டிலும்மார்க்ஸ்உயர்ந்துநின்றார், தொலைநோக்குடன்பார்த்தார், பரந்தவிரைவானபார்வையைக்கொண்டிருந்தார். மார்க்ஸ்ஒருமேதையாக (Genius) விளங்கினார். மற்றவர்களாகியநாங்கள், அதிகமாகச்சொல்லிக்கொள்வதென்றால்,சிறந்ததிறமைசாலிகளாக (best talented) இருந்தோம். அவர்மட்டும்இல்லையென்றால், இந்தக்கோட்பாடுஇன்றுஉள்ளதுபோல்இந்தஅளவுக்குவளர்ச்சிபெற்றிருக்காது. எனவே, இக்கோட்பாடுஅவருடையபெயரைத்தாங்கிநிற்பதுபொருத்தமே."
(லுத்விக் ஃபாயர்பாக்கும்செவ்வியல்ஜெர்மன்தத்துவஞானத்தின்முடிவும்)
அதுமட்டும் அல்லாது அவர்களிடையே வேலைப் பிரிவினை இருந்தது. இது பற்றி எங்கெல்ஸ் கூறுவதைப் பார்ப்போம்.
“மார்க்சுக்கும் எனக்கும் இடையில் செய்யப்பட்டிருந்த வேலைப் பிரிவினையின் விளைவாக, தன்னுடைய மாபெரும் அடிப்படையான நூலை எழுதுவதற்கு மார்க்சுக்கு நேரம் இருக்க வேண்டும் என்பதனால், பத்திரிகைகளில் நம்முடைய கருத்துக்களை வெளியிடுகின்ற- ஆகவே குறிப்பாக எதிரணியின் கருத்துகளை மறுக்கின்ற- பொறுப்பு எனக்குத் தரப்பட்டது”
(குடியிருப்புப் பிரச்சினை)
இங்கே எங்கெல்ஸ் மாபெரும் அடிப்படையான நூல் என்று குறிப்பிடுவது மூலதனம் நூல் ஆகும். மூலதனம் நூலை முடிப்பதற்கு நேரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எங்கெல்சுக்கும் மார்க்சுக்கும் இடையே வேலைப் பிரிவினை வகுக்கப்பட்டது. அதனால் தான் மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான நூல்களை எங்கெல்சால் எழுதப்பட்டதாகக் காணப்படுகிறது.
இன்று நான் பேசுவதற்கு எடுத்துக் கொண்டத் தலைப்பு, எங்கெல்சின் எழுத்துக்கள்.அதாவது எங்கெல்சின் முதன்மையான எழுத்துக்கள். எங்கெல்ஸ் எழுதிய சிறு கட்டுரை முதற் கொண்டு அவரது கடிதங்கள்கூட மிகவும் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி இருக்க அவரது படைப்புகளில் எதை முதன்மையானது என்று தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் வரவே செய்யும். இங்கே முதல்நிலையில் படிக்க வேண்டிய எழுத்துக்களையே முதன்மையான படைப்பாகக் கொள்ளப் படுகிறது. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என்று எங்கெல்சின் படைப்புகள் முழுவதையும் படிக்க வேண்டியதே ஆகும். இன்று நாம் எங்கெல்சின் முதல் நிலையில் அறிய வேண்டிய எழுத்துக்களை அறிமுகமாகப் பார்க்கலாம்.
முதலில் இடம் பெறுவது, 1843ஆம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய, அரசியல்பொருளாதாரம்குறித்தவிமர்சனத்தின்சுருக்கங்கள் (Outlines of a Critique of Political Economy)
மார்க்சுக்கு முன்பாக எங்கெல்ஸ் அரசியல் பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்தியதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கட்டுரையை மார்க்ஸ், தாம் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் வெளியிட்டார். கண்டிப்பாக மார்க்ஸ் அரசியல் பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்துவதற்கு இந்த எங்கெல்சின் கட்டுரை உதவியது என்பது உண்மை ஆகும்.
எங்கெல்ஸ் 1845ஆம் ஆண்டு எழுதிய இங்கிலாந்தில்தொழிலாளிவர்க்கத்தின்நிலைமை. இந்த நூலில் மார்க்சின் துணையின்றி எங்கெல்ஸ் மார்க்சியக் கருத்துக்களை எழுதத் தொடங்கி உள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.
தொழில்துறைபாட்டாளிவர்க்கம், தொழிலாளர்இயக்கங்கள், விவசாயப்பாட்டாளிவர்க்கம், பாட்டாளிவர்க்கத்தைநோக்கியமுதலாளித்துவத்தின்அணுகுமுறை போன்ற தலைப்புகளில் எங்கெல்ஸ் இந்த நூலை எழுதியுள்ளார்.
இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்கிற இந்த நூலில் எங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கத்தின் தனித்துவமான புரட்சிகர போக்கையும், தொழிலாளர் இயக்கத்தையும், தொழிற்சங்கத்தைப் பற்றியும் சிறப்பாக எழுதியுள்ளார். இந்த நூலில் எங்கெல்ஸ் இங்கிலாந்தில் உள்ள தொழிலாளர் பக்கம் நின்று முதலாளிகளிகளுக்கு எதிராக பேசுவதை பார்க்க முடிகிறது.
இந்த நூல் முதிர்ச்சி பெற்ற மார்க்சிய நூல் அல்ல, இருந்தாலும் இன்றும் அனைத்துத் தோழர்களும் படிக்க வேண்டிய நூல் ஆகும். ஆனால் இதுவரை இந்த நூல் தமிழில் மொழியாக்கம் செய்யவில்லை என்பது வருந்தக்கூடிய செய்தியாக இருக்கிறது.
எங்கெல்ஸ் 1845 ஆம் ஆண்டு எழுதியதுஜெர்மன் சித்தாந்தம், இந்த நூல் மார்க்சுடன் சேர்ந்த எழுதினார். இதே ஆண்டு மார்க்சும் எங்கெல்சும் புனிதக் குடும்பம் என்கிற நூலை எழுதினார்கள். அதில் சில கட்டுரையினை மார்க்சும் சில கட்டுரையினை எங்கெல்சும் தனித்தனியாக எழுதினார்கள், ஆனால் ஜெர்மன் சித்தாந்தம் என்கிற நூலை இரண்டு பேரும் இணைந்தே எழுதியுள்ளனர். மார்க்சியத் தத்துவத்தைப் படைக்கின்ற தொடக்க பணியினை இந்த நூலில் காணலாம். தத்துவம் படைக்கின்ற முதல் நூலிலேயே மார்க்ஸ் எங்கெல்சுடன் இணைந்தே காணப்படுகிறார்.
ஜெர்மன் சித்தாந்தம் என்கிற நூல் தமிழில் முழுமையாக வெளிவரவில்லை, இருந்தாலும் அதன் பகுதிகள் தேர்வு நூல்கள் பன்னிரண்டில் முதல் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
மார்க்சின் தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்த நூல் பயன்படக்கூடியதாக இருக்கிறது. இந்த நூல் மார்க்ஸ் காலத்தில் முயற்சி செய்தும் அச்சடிக்கப்படவில்லை. லெனின் காலத்துக்குப் பிறகே இந்த நூல் அச்சுக்கு வந்துள்ளது. இன்று நம் கையில் தமிழில் சிறு பகுதிதான் இருக்கிறது என்றாலும் அது முக்கியமானப் பகுதியாகும்.
இந்த நூலில் தனிநபரின் உணர்வுநிலை எவ்வாறு தோன்றுகிறது என்பது பற்றி சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. வாழ்நிலைதான் ஒருவரின் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது. அதனை இந்த நூல் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பார்ப்போம்.
ஒருவரது சிந்தனை எப்படிப்பட்டது என்பதை, அவர் ஈடுபட்டுள்ள பொருள் உற்பத்தியைப் பொருத்துள்ளது என்கிறது இந்த நூல்.
மார்க்சுக்கு முன்புவரை கம்யூனிசம் ஒரு கற்பனை சிந்தனையாக இருந்தது, மார்க்சும் எங்கெல்சும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றின் மூலம் அதனை விஞ்ஞானம் ஆக்கினர். கற்பனாவாத கம்யூனிசத்தை மறுத்து கம்யூனிசத்தை ஒரு வரலாற்று தொடர் நிகழ்வாக விளக்கினர் மார்க்சும் எங்கெல்சும்.
இது பற்றி இந்த நூல், கம்யூனிசம் என்பது ஒரு குறிக்கோள்வகைப்பட்டதான, கற்பனாவாதமாக இல்லாமல், இன்றுள்ள சமூகத்தையும் சமூக உற்பத்தி முறையையும் வீழ்த்துகிற ஒர் உண்மையான இயக்கமாக கம்யூனிசம் செயல்படுவதைக் குறிப்பிடுகிறது. ஆமாம் கம்யூனிசம் என்பது ஒரு கற்பனைக் கோட்பாடு கிடையாது, அது ஒர் இயக்கமாகும்.
1847ஆம் ஆண்டில் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்கிற பெயரில் ஒரு கேள்வி பதில் வடிவத்தில் ஒன்றை எங்கெல்ஸ் எழுதினார். இதனை எங்கெல்ஸ் தனியாக எழுதியுள்ளார். இந்த கேள்விபதில் பகுதியினை, மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.
இந்தக் கேள்வி பதில் பகுதி சிறியதாக இருந்தாலும் மிகவும் முக்கியமான எழுத்தாக இருக்கிறது. கேள்வி பதில் வடிவில் கம்யூனிசத்தை எளிமையாக எங்கெல்ஸ் இதில் விளக்கியுள்ளார். முதல் கேள்வி கம்யூனிசம் என்றார் என்ன? இதற்கு பதிலாக எங்கெல்ஸ் கூறுகிறார், கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைமைகளைப் பற்றிய போதனை ஆகும்.
இந்த பதில் சூத்திரம் போல் சுருக்கமாக இருந்தாலும் மிகவும் தெளிவாக நமக்குப் புரிய வைத்துள்ளது. பாட்டாளிகளின் விடுதலைக்கான இன்றைய சூழ்நிலையினையும் அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டிய பணியினையும் இந்த பதில் உள்ளடக்கி இருக்கிறது.
இதில் காணும் கேள்வியினைப் பார்த்தாலேயே இந்த எங்கெல்சின் எழுத்து எந்த வகையில் தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. சில கேள்விகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
(1) கம்யூனிசம்என்றால்என்ன?
(2) பாட்டாளிவர்க்கம்என்றால்என்ன?
(3) பாட்டாளிகள்என்பவர்கள்எப்போதுமேஇருந்திருக்கவில்லையா?
(4) பாட்டாளிவர்க்கம்எப்படிஉதித்தது?
(5) பாட்டாளிகளின்உழைப்புமுதலாளிகளுக்குவிற்கப்படுவதுஎந்தநிலைமைகளின்கீழ்நடைபெறுகிறது?
(6) தொழில்புரட்சிக்குமுன்னால்நிலவியதொழிலாளிவர்க்கங்கள்எவை?
(7) பாட்டாளிகள்அடிமைகளிடமிருந்துஎந்தவகையில்வேறுபடுகின்றனர்?
(8) பாட்டாளிகள்பண்ணைஅடிமைகளிடமிருந்துஎந்தவகையில்வேறுபடுகின்றனர்?
(9) பாட்டாளிகள்கைவினைப்பணியாளரிடமிருந்துஎந்தவகையில்வேறுபடுகின்றனர்?
(10) பாட்டாளிகள்பட்டறைத்தொழிலாளர்களிடமிருந்துஎந்தவகையில்வேறுபடுகின்றனர்?
இது போன்று கேள்விகள் தொடர்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு பதில்களை நான்றாகப் புரிந்து கொண்டால், அத்தகையப் புரிதல் கம்யூனிசத்தை அறிவியல் வழியில் அறிந்து கொள்வதற்கு பயனுள்ளதாத இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் புரிந்து கொள்வதற்கும் இந்த எங்கெல்சின் கேள்வி பதில் பகுதி மிகுந்தப் பயனளிக்கும்.
-1848ஆம் ஆண்டு மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்கிற ஆவணம் இன்றுவரை சிறந்த உலக ஆவணமாகத் திகழ்கிறது. ஒரு ஆவணம் என்ன சாதிக்கும் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டாகவும் இந்த ஆவணம் இருக்கிறது.
இந்த அறிக்கைக்கு மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்தும் எங்கெல்ஸ் தனியாகவும் நிறைய முன்னுரையை எழுதியுள்ளனர் அனைத்து முன்னுரைகளும் அறிக்கையைப் புரிந்து கொள்வதற்கும் அதுவும் இன்று நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழிகாட்டியாக இருக்கிறது.
1872ஆம் ஆண்டில் மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து எழுதிய முகவுரையில், "கடந்தஇருபத்தைந்துஆண்டுகளில்நிலைமைகள்எவ்வளவுதான்மாறியிருந்தபோதிலும், இந்தஅறிக்கையில்வகுத்துரைக்கப்பட்டுள்ளபொதுக்கோட்பாடுகள்ஒட்டுமொத்தத்தில்என்றும்போல்இன்றும்சரியானவையேஆகும். ஆங்காங்கேசிலவிவரங்களைச்செம்மைப்படுத்தலாம். இந்தக்கோட்பாடுகளின்நடைமுறைப்பயன்பாடுஎன்பது, இந்தஅறிக்கையேகுறிப்பிடுவதுபோல, எல்லாஇடங்களிலும்எல்லாக்காலத்திலும், அந்தந்தக்காலகட்டத்தில்நிலவக்கூடியவரலாற்றுநிலைமைகளைச்சார்ந்ததாகவேஇருக்கும்." என்று கூறியுள்ளனர்.
சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஆவணமாக இருந்தாலும் இந்த ஆவணத்தின் பொதுக் கோட்பாடுகள் இன்றும் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது.
மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு எங்கெல்ஸ் அறிக்கைக்கு எழுதிய முன்னுரையில், "அறிக்கையினூடேஇழையோடிநிற்கும்அடிப்படையானகருத்து – ஒவ்வொருவரலாற்றுக்காலகட்டத்தின்பொருளாதாரஉற்பத்தியும், அதிலிருந்துதவிர்க்கமுடியாதபடிஎழுகின்றசமூகக்கட்டமைப்பும், அந்தந்தக்காலகட்டத்தின்அரசியல், அறிவுத்துறைஆகியவற்றின்வரலாற்றுக்கானஅடித்தளமாகஅமைகின்றன. ஆகவே, (புராதனநிலப்பொதுவுடைமைஅமைப்புசிதைந்துபோனகாலம்தொட்டே) அனைத்துவரலாறும்வர்க்கப்போராட்டங்களின்வரலாறாகவேஇருந்துவருகிறது." என்று எழுதியுள்ளார். இந்த இடத்தில் ஒரு குறிப்பை எங்கெல்ஸ் தருகிறார்.
“நாங்கள்இருவரும் 1845-க்குச்சிலஆண்டுகள்முன்பிருந்தேஇந்தவரையறுப்பைநோக்கிப்படிப்படியாகநெருங்கிவந்துகொண்டிருந்தோம். நான்சுயேச்சையாகஎந்தஅளவுக்குஇந்தவரையறுப்பைநோக்கிமுன்னேறிஇருந்தேன்என்பதை, ‘இங்கிலாந்தில்தொழிலாளிவர்க்கத்தின்நிலைமை’ (Conditions of the Working Class in England) என்னும்என்னுடையநூல்மூலம்நன்குஅறியலாம். ஆனால், 1845-ஆம்ஆண்டுவசந்தகாலத்தில்புருசெல்ஸ்நகரில்மார்க்ஸைநான்மீண்டும்சந்தித்தபோது, அவர்இந்தவரையறுப்பைத்தயாராகவகுத்துவைத்திருந்தார். நான்இங்குஎடுத்துரைத்துள்ளதுபோன்றஅதேஅளவுதெளிவானசொற்களில்என்முன்னேஎடுத்துவைத்தார்.”
ஒரு வகையில் மார்க்சுக்கு முன்பாகவே மார்க்சியத்தை எங்கெல்ஸ் படைக்கத் தொடங்கிவிட்டார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகறிது, ஆனால் மார்க்சியத்தை துல்லியமாக வரையறுத்தது மார்க்ஸ் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
1, முதலாளிகளும்பாட்டாளிகளும்
2, பாட்டாளிகளும்கம்யூனிஸ்டுகளும்
3, சோஷலிசஇலக்கியமும்கம்யூனிசஇலக்கியமும்
4, தற்போதுள்ளபல்வேறுஎதிர்க்கட்சிகள்குறித்துக்கம்யூனிஸ்டுகளின்நிலைபாடு
இந்த நான்கு அத்தியாயங்களும் படிக்க வேண்டும் என்றாலும், முதல் இரண்டு அத்தியாயங்களைக் கண்டிப்பாக மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். அதுவும் இரண்டாவது அத்தியாயமான பாட்டாளிகளும்கம்யூனிஸ்டுகளும் மிகமிக முக்கியமானது ஆகும். நேரம் கிடைக்கம் போதெல்லாம் இந்த இரண்டாம் அதியாயத்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.
"ஒட்டுமொத்தப்பாட்டாளிகளுடன்கம்யூனிஸ்டுகள்கொண்டுள்ளஉறவுஎத்தகையது?
கம்யூனிஸ்டுகள்ஏனையதொழிலாளிவர்க்கக்கட்சிகளுக்குஎதிரானஒருதனிக்கட்சியாகஅமையவில்லை.
கம்யூனிஸ்டுகளுக்குஒட்டுமொத்தப்பாட்டாளிவர்க்கத்தின்நலன்களைத்தவிரவேறுதனிப்பட்டநலன்கள்கிடையாது.
பாட்டாளிவர்க்கஇயக்கத்தைவடிவமைக்கவும்வார்த்தெடுக்கவும்அவர்கள்தமதுசொந்தக்குறுங்குழுவாதக்கோட்பாடுகள்எவற்றையும்வகுத்துக்கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகளைஏனையதொழிலாளிவர்க்கக்கட்சிகளிடமிருந்துவேறுபடுத்திக்காட்டுபவைபின்வருவனமட்டும்தாம்:
(1) வெவ்வேறுநாடுகளில்நடைபெறும்பாட்டாளிகளின்தேசியப்போராட்டங்களில், கம்யூனிஸ்டுகள்எந்தவொருதேசியஇனத்தையும்சாராமல், பாட்டாளிவர்க்கம்முழுமைக்கும்உரியபொதுவானநலன்களைச்சுட்டிக்காட்டி, முன்னணிக்குக்கொண்டுவருகின்றனர்.
(2) முதலாளித்துவவர்க்கத்துக்குஎதிரானதொழிலாளிவர்க்கப்போராட்டம்கடந்துசெல்லவேண்டியபல்வேறுவளர்ச்சிக்கட்டங்களிலும், எங்கும்எப்போதும்கம்யூனிஸ்டுகள்ஒட்டுமொத்தஇயக்கத்தின்நலன்களையேமுன்வைக்கின்றனர்.
எனவே, கம்யூனிஸ்டுகள்ஒருபுறம்நடைமுறைவழியில், ஒவ்வொருநாட்டிலுமுள்ளதொழிலாளிவர்க்கக்கட்சிகளில், மிகவும்முன்னேறிய, மிகவும்உறுதிவாய்ந்தபிரிவாக, மற்றவர்கள்அனைவரையும்முன்னோக்கிஉந்தித்தள்ளுகின்றபிரிவாகஉள்ளனர். மறுபுறம்கோட்பாட்டு வழியில், கம்யூனிஸ்டுகள்பாட்டாளிவர்க்கத்தின்பெருந்திரளினருக்குஇல்லாதஓர்அனுகூலத்தை, அதாவது, பாட்டாளிவர்க்கஇயக்கத்தின்திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில்ஏற்படும்பொதுவானவிளைவுகளையும்தெளிவாகப்புரிந்துகொள்ளும்அனுகூலத்தைப்பெற்றுள்ளனர்."
இங்கு கூறப்பட்டதின் இறுதியில் உள்ள பகுதி கம்யூனிஸ்டுகள் சாதாரணமானவர்களாக இருக்க முடியாது என்பது தெரிகிறது. தொழிலாளி வர்க்கத்தின் முன்னேறிய பகுதிக்கு வழிகாட்டியாகவும் அவர்களை வளர்த்தெடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய பாட்டாளி வர்க்க கட்சி எந்த திசைவழியில் செல்ல வேண்டும் இறுதியில் எட்ட வேண்டியதையும் அறிந்தவர்களாக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும்.
உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு அநீதியையும் கண்டு கோபமும் வெறுப்பும் கொள்பவன் தோழர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் கம்யூனிஸ்ட்டாக செயல்படுவதற்கு இது மட்டும் போதாது.
அறிக்கை குறிப்பிடுகிற வகையில் சிறந்த கம்யூனிஸ்ட்டாக செயல்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு கம்யூனிஸ்டும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றின் சாரத்தைத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
-1852ஆம் ஆண்டு ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் என்கிற நூலை எங்கெல்ஸ் எழுதினார். இந்த நூலில் எங்கெல்ஸ் 1848-1849ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் நடைபெற்ற புரட்சியைப் பற்றி ஆராய்கிறார். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போராட்டத்தின் செயல்தந்திரத்தை அதில் விரித்துரைக்கிறார், ஆயுதம் தாங்கிய புரட்சியைப் பற்றிய மார்க்சிய போதனைக்கு இந்த நூலில் எங்கெல்ஸ் அடிப்படைகளை உருவாக்கித் தந்துள்ளார்.
1872ஆம் ஆண்டு எங்கெல்ஸ் குடியிருப்புப் பிரச்சினை என்கிற நூலை எழுதினார். ஒரு பிரச்சினையை எவ்வாறு மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆராய்வது என்பதற்கு இந்த சிறு நூல் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
உழைப்பாளர்களின் குடியிருப்புப் பிரச்சினை எப்படி இருக்கிறது இதனை எவ்வாறு தீர்ப்பது, அதுமட்டுமல்லாது குடியிருப்புப் பிரச்சினையை குட்டி முதலாளித்துவ வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும் எவ்வாறு அணுகுகிறது, மார்க்சியம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கிறது.
சோஷலிசம் பல போக்குகளைக் கொண்டதாக இருக்கிறது, பிரபுத்துவ சோஷலிசம், குட்டி முதலாளித்துவ சோஷலிசம், முதலாளித்துவ சோஷலிசம், உழைப்பாளர்களின் சோஷலிசம்இதை விஞ்ஞான கம்யூனிசம் என்று அழைக்கிறோம். இந்த சோஷலிசங்களைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பேசப்பட்டுள்ளது. குடியிருப்புப் பிரச்சினை என்கிற இந்த நூலில், எங்கெல்ஸ் முதலாளித்துவ சோஷலிசத்தைப் பற்றி மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறியுள்ளார்.
"இன்றையசமூகத்திலுள்ளஎல்லாத்தீமைகளின்அடிப்படையையும்அப்படியேவைத்திருக்கவிரும்புவதும்அதேநேரத்தில்அந்தத்தீமைகளைஒழிப்பதற்குவிரும்புவதும்முதலாளிவர்க்கசோஷலிசத்தின்சாராம்சம்ஆகும். முதலாளிவர்க்கசோஷலிஸ்டுகள் "முதலாளித்துவசமூகம்தொடர்ந்துநிலவும்படிஉறுதிசெய்துகொள்ளும்பொருட்டுசமூகக்குறைபாடுகளைஅகற்ற" விரும்புகிறார்கள்; அவர்கள் "பாட்டாளிவர்க்கம்இல்லாமல்முதலாளிவர்க்கத்தை" விரும்புகிறார்கள்என்பதைக்கம்யூனிஸ்டுக்கட்சிஅறிக்கைஏற்கெனவேசுட்டிக்காட்டியிருக்கிறது."
இந்த முதலாளித்துச சமூக உற்பத்தியில் காணப்படும் தீமைகளை அப்படியே வைத்திருக்க விரும்பிக் கொண்டு, அதே நேரத்தில் அந்தத் தீமைகளை ஒழிப்பதற்கு விரும்புவது முதலாளித்துவ சோஷலிசம் என்கிறார் எங்கெல்ஸ். அதாவது உள்ளடக்கத்தை அப்படியே வைத்துக் கொண்டு வடிவத்தை மட்டும் எதிர்த்து போராடுவது முதலாளித்துவ சோஷலிசம்.
முதலாளித்துவ சமூகம் தொடர்ந்து இருப்பதற்கு உறுதிப்படுத்துவதற்கே, முதலாளித்துவ சமூகத்தில் காணப்படும் சிக்கல்களை தீர்க்க முனைகிறது முதலாளித்துவ சோஷலிசம். இதற்கு மாறாக தொழிலாளர்களின் சோஷலிசமான விஞ்ஞானக் கம்யூனிசம் என்பது முதலாளித்துவ சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவ உற்பத்தி முறையே காரணம் என்பதை அறிந்து, முதலாளித்துவ அமைப்பு முறையையே தூக்கி எறியப் போராடுகிறது. தொழிலாளர்களின் ஒவ்வொரு போராட்டமும் இதனை நோக்கிய நடைபெறுகிறது.
-1872-1873ஆம் ஆண்டுகளில் எங்கெல்ஸ் ஒரு சிறு கட்டுரை எழுதியுள்ளார், அதன் தலைப்பு அதிகாரத்தைப் பற்றி (On Authority).
இந்த சிறு கட்டுரையில், அனைத்து அதிகாரத்தையும் மறுதலிக்கிற பக்கூனின்வாதிகளுடைய கருத்துக்களை எங்கெல்ஸ் விமர்சிக்கிறார். அரசு நிலவுவதற்கான புறநிலையைக் கணக்கில் கொள்ளாது, அரசை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று கூறிகிற அராஜகவாதக் கண்ணோட்டத்தையும் அவர்களின் குழுங்குழுவாதத்தையும் இந்தக் கட்டுரையில் கடுமையாக விமர்சிக்கிறார்.
சமூகப் பிரச்சினைகளுக்கு அப்போது காணப்படும் உற்பத்தி முறையே காரணம் என்பதற்கு மாறாக, குட்டி முதலாளித்துவ சிந்தனையைக் கொண்ட அராஜகவாதிகள் அரசே அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம் என்று கருதி அதனை உடனே ஒழிக்க முயற்சிக்கின்றனர். அதே நேரத்தில் அரசின் சர்வாதிகாரப் போக்கை மனதில் கொண்டு அதிகாரம் என்றாலேயே அதனை அராஜகவாதிகள் எதிர்க்கின்றனர்.
அதிகாரத்தை ஒழிப்பதே சமூகப் புரட்சியின் முதல் நடவடிக்கையாக அராஜகவாதிகள் கருதுகின்றனர். இவர்களின் அதிகார வெறுப்பு, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசையும் தேவையற்றதாக கருதும் அளவுக்கு இருக்கிறது.
புரட்சி என்பதே ஒர் அதிகாரத் தோரணையானது என்று இவர்களுக்குஎங்கெல்ஸ் பதிலளிக்கிறார். புரட்சி என்பதே பழைய அதிகாரத்தை தூக்கி எறிந்து புதிய அதிகாரத்தைப் படைப்பதுதான் என்பதைக்கூட அராஜகவாதிகள் அறியாமல் இருக்கிறார்கள்
அதிகாரத்தைப் பற்றி என்கிற கட்டுரையை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு நூலை சோவியத் நாட்டில் செயல்பட்ட முன்னேற்றப்பதிப்பகம் வெளியிட்டது. அதன் தலைப்பு அராஜகவாதமும் அராஜக சிண்டிகலிசமும். இந்த தொகுப்பில் குட்டி முதலாளித்துவ அராஜகவாதிகளின் கருத்தை விமர்சிக்கிற மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் எழுத்துகள் இடம் பெற்றுள்ளது. இந்த நூலை கண்டிப்பாக முழுமையாக நாம் படிக்க வேண்டும்.
-1877ஆம் ஆண்டு எங்கெல்ஸ், டூரிங்குக்கு எதிர்ப்பு என்கிற நூலை எழுதினார். தொடக்க கால தமிழ் நூல்களில் டூரிங்குக்கு எதிர்ப்பு என்றே இருந்தது, பின்னால் வந்த நூல்களிலும், தமிழ் மொழியாக்கத்திலும் டூரிங்குக்கு மறுப்பு என்பதாகவே மொழியாக்கம் செய்ப்பட்டது. எங்கெல்ஸ் இந்த நூலில் டூரிங்கை மறுப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை, அவரை எதிர்க்கவும் செய்துள்ளார், அதனால் டூரிங்குக்கு எதிர்ப்பு என்கிற சொல்லே சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
1875ஆம் ஆண்டு பெர்லின் பல்கலைக்கழகத்தின் பகுதிநேர விரிவுரையாளரான டூரிங், திடீரென்று ஆர்ப்பாட்டத்தோடு தாம் சோஷலிசத்தைத் தழுவுவதாக அறிவிக்கிறார். அவர் சோஷலிச தத்துவம் ஒன்றை ஜெர்மன் மக்கள் முன் வைக்கிறார். சமூகத்தை திருத்தி அமைப்பதற்கான முழு அளவிலான ஒரு நடைமுறைத் திட்டமாக அது இருந்தது. டூரிங் தமக்கு முற்பட்டவர்களை எதிர்த்து விமர்சிக்கிறார், குறிப்பாக மார்க்சின் கருத்தை முழு ஆத்திரத்தோடு விமர்சித்துள்ளார்.
மார்க்சின் கருத்தை விமர்சித்துள்ளார் என்பதற்காக மட்டும், டூரிங்கை எதிர்த்து எங்கெல்ஸ் இந்த நூல் எழுதவில்லை, அதைவிட முதன்மையானக் காரணம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அன்றைய ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் மார்க்சியத்துக்கு எதிரான டூரிங்கின் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் மட்டுமல்லாது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடத்திலும் டூரிங்கின் குட்டிமுதலாளித்துவ சோஷலிசக் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தின.
டூரிங்கின் கருத்துக்கள் பாட்டாளி வர்க்க கட்சிக்கு அச்சுறுத்தலாகவும் அபாயகரமானதாகவும் மாறிவிட்டதை லீப்னெட் அறிந்துகொண்டார். கட்சியில் செல்வாக்கு செலுத்தும் டூரிங்கின் கருத்தில் இருந்து விடுபடுவதற்கு, டூரிங்கை எதிர்த்து எழுதுமாறு எங்கெல்சிடம் கேட்டார். எங்கெல்ஸ் இதனை உடனே ஒப்புக் கொள்ளவில்லை, லீப்னெட் ஓராண்டு காலம் பெரும் முயற்சி செய்த பிறகே எங்கெல்ஸ் எழுத ஒப்புக் கொண்டார்.
பொதுவாக மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மார்க்சிய அரசியலை எதிர்த்தும் மறுத்தும் வந்தனர். ஆனால் டூரிங், தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மார்க்சியத்தின் முதன்மையான மூன்று பிரிவின் உள்ளடக்கத்தை கடுமையாக விமர்சித்தார்.
டூரிங்குக்கு எதிராக எழுதிய விளக்கங்களை மார்க்ஸ் அறியாமல் வெளியிடக் கூடாது என்ற சுய இணக்கம் எங்கெல்சுக்கும் மார்க்சுக்கும் இடையே இருந்தது. இந்நூல் கையெழுத்துப் படியாக இருக்கும் போதே எங்கெல்ஸ் அதனை மார்க்சுக்கு படித்துக் காட்டினார். பாகம் இரண்டில் உள்ள பத்தாவது இயல் மார்க்சால் எழுதப்பட்டது. எனவே, மார்க்சிய முதலாசிரியர்களான இருவரின் கைவண்ணமும் இப்படைப்பில் இடம்பெற்றுள்ளது.
டூரிங்குக்கு விமர்சனம் என்ற எங்கெல்சின் படைப்பு டூரிங்குக்கு மறுப்பாகவும், எதிர்ப்பாகவும், மார்க்சியம் பற்றிய விளக்கமாகவும் அமைந்துவிட்டது. இதனைப் பற்றி எங்கெல்ஸ் கூறுகிறார்.
"அவர் (டூரிங்) சென்ற விடமெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து செல்லவும் அவரது கருத்தோட்டங்களுக்கு எதிராக எனது கருத்தோட்டங்களை முன்வைக்கவும் நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். இதன் விளைவாக எனது எதிர்மறை விமர்சனம் நேர்மறை விமர்சனமாயிற்று, இந்த வாதம் மார்க்சும் நானும் ஆதரித்துப் போராடிவருகிற இயக்கவியல் முறை மற்றும் கம்யூனிஸ்ட் உலகக் கண்ணோட்டம் பற்றிய ஏறத்தாழ ஒரு தொடர் விளக்கமாக மாற்றப்பட்டது-ஓரளவு விரிவான கல்வித் துறைகளைத் தழுவிய ஒரு விளக்கமாக இருந்தது."
மார்க்சிய இலக்கியத் தொகுப்பிலுள்ள தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் பற்றிய அடிப்படை விவரங்கள் "டூரிங்குக்கு எதிர்ப்பு"என்ற இந்நூல் ஒருங்கிணைந்த வடிவில் தொகுப்பாய் நமக்கு தருகிறது.
மார்க்சியத்தை தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்று பிரித்தது லெனின் மற்றும் சோவியத் அறிஞர்கள். மார்க்சோ எங்கெல்சோ இவ்வாறு பிரிக்கவில்லை என்கிற கருத்து ஐரோப்பாவில் காணப்படுகிறது, இந்த கருத்துடையவர்கள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள். இன்று நாம் பேசுவதையே சோவியத் மார்க்சியம் என்று கூறுபவர்களும் உண்டு. இது எந்த வகையிலும் உண்மையில்லை.
டூரிங்குக்கு எதிர்ப்பு என்கிற நூலில் எங்கெல்ஸ் மார்க்சியத்தை இந்த மூன்று வகையில்தான் பிரித்துக் காட்டியுள்ளார். இப்படிப் பிரிக்கப்பட்ட இந்த நூலை அச்சுக்கு செல்வதற்கு முன்பே மார்க்ஸ் அறிந்திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது இத்தகையவர்களின் கூற்றில் உண்மை எதுவும் இல்லை என்று தெரிகிறது.
எங்கெல்ஸ் எழுதிய இந்த டூரிங்குக்கு எதிர்ப்பு என்கிற ஒரே நூலில் மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கக்கூறுகளை நாம் படித்தறிய முடிகிறது. மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிவதற்கு மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் எப்படி அவசியமோ, அதே அளவுக்கு மார்க்சிய அடிப்படைகளை அறிவதற்கு டூரிங்குக்கு எதிர்ப்பு என்கிற நூலைப் படிப்பது அவசியமாகும்.
டூரிங்கக்கு எதிர்ப்பு என்கிற நூல் டூரிங்கை விமர்சிக்கும் போது மார்க்சிய அடிப்படைகள் கூறப்படுகிறது என்பதால் இதனை, புதியதாகப் படிப்பவர்கள் சற்று சிரமத்துக்கு ஆளாவார்கள் என்பது உண்மையே. அப்படிப்பட்டவர்கள் இந்த நூலைப் படிப்பதற்கு முன், கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞானக் சோஷலிசமும் என்கிற நூலை படிக்கலாம்.
-கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞானக் சோஷலிசமும் என்கிற நூல் 1880ஆம் ஆண்டு எங்கெல்சால் வெளியிடப்பட்டது. இந்த நூல் டூரிங்குக்கு எதிர்ப்பு என்கிற நூலின் சில பகுதிகளாகும். கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞானக் சோஷலிசமும் என்கிற இந்த நூலை முதலில் படித்துவிட்டு டூரிங்குக்கு எதிர்ப்பு நூலைப் படிக்கச் செல்லாம் என்பது எனது படிப்பு அனுபவம்.
-இங்கிலாந்து தொழிற்சங்கத்தின் (The Labour Standard) “தொழிலாளர் தரநிலை” என்ற பத்திரிகையின் தலையங்கமாக எங்கெல்ஸ் 1881 மே முதல் 1881 ஆகஸ்ட் வரை தொடராக எழுதினார். அதைத் தொகுத்து “கூலி அமைப்புமுறை” (The Wages System) என்ற தலைப்பில் நூலாக வெளி வந்துள்ளது.
மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை முதன்முறையாகப் படிக்கத் தொடங்குபவர்கள் இந்த நூலில் இருந்து தொடங்கலாம் என்று நான் கருதுகிறேன். இந்த நூலைப் படித்தால் அரசியல் பொருளாதாரம் எந்தளவுக்கு அவசியம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. கூலி அமைப்பு முறையைப் பற்றியும், தொழிற் சங்கங்கள் பற்றியும் அறிந்து கொள்ளவதற்கு இந்த நூல் அவசியம் படிக்க வேண்டும்.
-1883 ஆண்டு வாக்கில் எங்கெல்ஸ் எழுதிய முதன்மையான நூல் என்றால் அது, இயற்கையின் இயக்கவியல், இந்த நூலை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. மார்க்சின் மறைவுக்குப் பிறகு மூலதனம் இரண்டாம், மூன்றாம் தொகுதிக்கான வேலையில் எங்கெல்ஸ் ஈடுபட்டதால் இந்த நூலை முழுமையாக முடிக்காமல் போய்விட்டது. இருந்தாலும் எழுதியதுவரை கிடைப்பது நமக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நூல் தமிழில் கிடைக்கிறது என்பதே ஒரு சிறப்பாகும்.
மனிதக்குரங்கில்இருந்துமனிதனாகமாறியஇடைநிலைப்படியில்உழைப்பின்பாத்திரம் என்கிற சிறு நூலை நாம் கேள்விப்பட்டிருப்போம், அந்தப் பகுதி இந்த இயற்கையின் இயக்கவியல் என்கிற நூலில்தான் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த நூலில், ஆவியுலகில்இயற்கைஅறிவியல், இயக்கவியல், இயக்கத்தின்அடிப்படைவடிவங்கள, கணிதவியல், இயந்திரவிலும்வானவியலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற தலைப்புகளில் எங்கெல்ஸ் எழுதி இருக்கிறார். அறிவியல் புரிதல் உள்ள தோழர்கள் இந்த நூலைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளை எவ்வாறு மார்க்சிய வழியில் எழுதுவது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும்.
-1884ஆம் ஆண்டு எங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்கிற நூலை எழுதினார்.
இந்த நூல் ஏடறியா காலத்தில் உள்ள மனித சமூகத்தைப் பற்றியதில் இருந்து தொடங்குகிறது. அதாவது காட்டுமிராண்டி நிலையில் இருந்து நாகரிகம் அடைந்தது வரையிலான மனித வரலாற்றை ஆய்வு செய்கிறது.
அரசு பற்றிய மார்க்சியப் பார்வையினை அறிந்து கொள்வதற்கு இந்த நூலை நாம் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். லெனின் தாம் எழுதிய அரசும் புரட்சியும் என்கிற நூலில், எங்கெல்சின் இந்த நூலில் இருந்து நிறைய மேற்கோள்களைக் கொடுத்துள்ளார்.
மனித சமூகத்தில் குடும்பம் என்பது எவ்வாறு படிநிலையாக வளர்ச்சி அடைந்தது என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த நூலைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இன்றும் கல்வி புலத்தில் இந்த நூல் பார்வை நூலாகப் படிக்கப்படுகிறது.
-1886ஆம் ஆண்டு எங்கெல்ஸ் ஒரு முதன்மையான தத்துவ நூலை எழுதினார். அதன் தலைப்பு, லுத்விக் ஃபாயர்பாக்கும்செவ்வியல்ஜெர்மன்தத்துவஞானத்தின்முடிவும். இந்த நூலை எங்கெல்ஸ் எழுதாது போயிருந்தால் மார்க்சியத் தத்துவத்தை நாம் அறிந்து கொள்வதற்கு அதிகம் சிரமத்தை சந்திப்போம் என்பது ஓர் உண்மையாகும். ஏன் இப்படி கூறுகிறேன் என்றால், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றி மூலதனம் என்கிற ஒரு தனிநூலைப் போன்று மார்க்சியத் தத்துவத்தை தனி நூலாக மார்க்ஸ் எழுதவில்லை, பல நூல்களுக்கு இடையிலும் முன்னுரையாகவும், கடிதங்கள் வாயிலாகவும்மார்க்சியத் தத்துவத்தை எழுதியுள்ளார், ஆனால் எங்கெல்சின் லுத்விக் ஃபாயர்பாக்கும்செவ்வியல்ஜெர்மன்தத்துவஞானத்தின்முடிவும்என்கிற நூல் மார்க்சியத் தத்துவம் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை தெளிவாகக் கூறியுள்ளது.
இந்த நூல் நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, இந்த அத்தியாயங்களுக்கு எங்கெல்ஸ் தலைப்புக் கொடுக்கவில்லை, பின்னால் வந்த பதிப்பாசிரியர்கள் தலைப்பு கொடுத்தனர், இந்த தலைப்பு இந்த அத்தியாயத்தைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
அத்தியாயம்-1
ஹெகலின்கோட்பாடுகள்பற்றியவிமர்சனம்
அத்தியாயம்-2
பொருள்முதல்வாதக்கோட்பாடுபற்றியவிளக்கம்
அத்தியாயம்-3
ஃபாயர்பாக்கின்கோட்பாடுகள்பற்றியவிமர்சனம்
அத்தியாயம்-4
மார்க்சியத்தின்அடிப்படைகள்குறித்தவிளக்கம்
முதல் அத்தியாயத்தில் ஹெகலின் தத்துவத்தை எங்கெல்ஸ் விமர்சிக்கிறார், இரண்டாம் அத்தியாயத்தில் பொருள்முதல்வாதத் தத்துவத்தை விளக்குகிறார். மூன்றாம் அத்தியாயத்தில், மார்க்சும் எங்கெல்சும் ஹெகலிய தத்துவத்தில் இருந்து மார்க்சியத் தத்துவத்துக்கு மாறுவதற்கு இடைக் கண்ணியாக இருந்த ஃபாயர்பாக் தத்துவத்தை விளக்குவதுடன் அதனை விமர்சிக்கவும் செய்கிறார். நான்காவது அத்தியாயத்தில் மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகளை எங்கெல்ஸ் விளக்குகிறார்.
இந்த நூலை விளக்கமாக இந்தக் கூட்டத்தில் நாம் பார்க்க முடியாது, காலம் கருதி அறிமுகத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
எந்தளவுக்கு எங்கெல்ஸ் எழுதிய சிறு கட்டுரைகளும் நூல்களும் முக்கியமானதோ அதே அளவுக்கு அவர் எழுதிய இறுதிக்கால கடிதங்களும் முக்கியமானதாகும்.
மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்திலேயே மார்க்சியத்தை திருத்தி பேசுகின்ற போக்கு தொடங்கிவிட்டது. குறிப்பாக வரலாற்றியல் பொருள்முதல்வாததை அன்றும் இன்றும் திருத்தல்வாதிகள் குழப்பி வருகின்றனர். வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அதுவும் குறிப்பாக அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்கெல்சின் இறுதிக்காலக் கடிதங்களைக் கண்டிப்பாக படிக்க வேண்டும்.
இந்தக் கடிதங்களில் அடித்தளமே மேற்கட்டமைப்பை தீர்மானிக்கின்றன-நிர்ணயிக்கின்றன, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதை எங்கெல்ஸ் தெளிவாக நமக்குப் புரிய வைக்கிறார்.
இந்தக் கடிதங்களைப் போன்றே, எங்கெல்ஸ் இறுதிக் காலத்தில் தமது நூல்களையும் மார்க்சின் நூல்களையும் மறுபதிப்பு செய்தார், அவ்வாறு செய்யும் போது அதற்கு ஆய்வுமுன்னுரையை எழுதினார். அந்த முன்னுரைகளும் எங்கெல்சின் முதன்மையான எழுத்துக்களாக இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மார்க்சின் கூலியுழைப்பும் மூலதனமும் என்கிற நூலுக்கு எழுதிய முன்னுரையைச் சொல்ல வேண்டும், இதில் உபரி மதிப்பை ஒரு நாடகப் பாணியில் நமக்குப் புரிய வைக்கிறார்.
எப்போதும் நான் வகுப்பில் கூறியதை இங்கேயும் கூறுகிறேன், மார்க்ஸ் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்றால் முதலில் எங்கெல்ஸ் எழுத்துக்களைப் படிக்க வேண்டும். எங்கெல்ஸ் எழுத்துக்களை நன்றாகப் படித்தோம் என்றால், மார்க்ஸ் நூல்களைப் படிப்பது எளிதாக இருக்கும்.
மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு இந்த எங்கெல்சின் முதன்மையான எழுத்துக்கள் மட்டுமல்ல, அவரின் அனைத்து எழுத்துக்களையும் படிக்க வேண்டும்.
எங்கெல்சின் நினைவுகளோடு அவரது எழுத்துக்களைப் படிப்போம் சமூகத்தை மார்க்சிய வழியில் மாற்றுவோம் என்று கூறி எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.
- அ.கா. ஈஸ்வரன்