தத்துவமும் எதிர்காலமும்

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா

தத்துவமும் எதிர்காலமும்

மார்க்சிய தத்துவ அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவும் நவீன அறிவியலும்...!

1918-ல் பிறந்து 1993-ல் மறைந்தவர் அறிஞர் தேவிபிரசாத்சட்டோபாத்யாயா. அவர் பிறந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது.

கருத்துமுதல்வாதத்தின் பல்வேறு போக்குகளுக்கு எதிராக அவர் தொடங்கி வைத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. கருத்துமுதல்வாதத்திற்கு எதிராக அவர் நடத்திய துல்லிய தாக்குதல்களுக்கு எந்த புருடா மனிதரும் தமிழகத்தில் பதில் சொல்லியதில்லை.

அத்வைத்தை துவம்சம் செய்தவர் தேவிபிரசாத். அதே போல இயற்பியல் கருத்துமுதல்வாதிகளுக்கு எதிராகவும் கடும் போராட்டங்களை நடத்தியவர்.

அதற்காக......

(1) Science and Society in Ancient India-1977.

(2)Lenin,the Philosopher-1979.

(3)History of Science and Technology in Ancient India Volume 1:The Beginnings-1986.

(4)History of Science and Technology in Ancient India Volume 2:Formation of the Theoretical Fundamentals of Natural Science-1991.

(5) History of Science and Technology in Ancient India Volume 3:Astronomy,Science and Society-1996.

ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

சமீப காலங்களில் தமிழகத்தில் நவீன அறிவியலை, இயற்பியலை இயக்கவியல் பொருள்முதல்வாதத்தால் எதிர் கொள்ள முடியாது என்கிற அபஸ்வரம் ஒலிப்பதைக் கேட்கிறோம்.

சமீபத்தில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட இரண்டு நூல்களில் ஒன்று தத்துவமும்_எதிர்காலமும் என்ற நூல் மூலம் சார்பியல் தத்துவத்தை உருவாக்கிய இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டீனிடம் இருந்த மாஹிய கருத்துமுதல்வாதத்தை லெனின் வழிகாட்டியபடி, ஜப்பானிய இயற்பியல் அறிஞர் S.Sakata (Supplement of the Progress of Theoretical Physics) உதவியோடு அம்பலப்படுத்தி உள்ளார்.

அதேபோல் குவாண்டம் இயற்பியல் கோட்பாட்டை உருவாக்கிய பிளாங்க் போன்றோர் கூட தொடக்கத்தில் எப்படி கருத்துமுதல்வாதிகளாக இருந்தனர் என அம்பலப்படுத்தி உள்ளார்.

ஆகவே எந்த காலத்திலும் இயற்பியலை, நவீன அறிவியலை இயக்கவியல் பொருள்முதல்வாதத்தால் எதிர்கொள்ள முடியும் என தனது நூல்களின் மூலம் நிறுவியுள்ளார் தேவிபிரசாத்சட்டோபாத்யாயா. அவரின் தத்துவமும் எதிர்காலமும் என்ற நூலை அவசியம் இளந்தோழர்கள்  படிக்க வேண்டும்.

- திருமேனி 

நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்

விலை : ரூ.165

நூலாசிரியர்: தேவிபிரசாத் சட்டோபாத்யாயா - தமிழில் இரா. சிசுபாலன்

வெளியீட்டாளர்: பாரதி புத்தகாலயம்

பதிப்பு : 2019

தொடர்புக்கு:

செந்தளம் பதிப்பகம்

+91 96003 49295