ஐரோப்பிய விண்வெளி முகமையின் கட்டுப்பாட்டில் இந்திய விண்வெளித் துறை

விண்வெளி ஒத்துழைப்பு எனும் பெயரில் அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்திய முகாம்களின் புதியகாலனிய அடிமை ஒப்பந்தத்தில் 2021 ம் ஆண்டில் கையெழுத்திட்ட ISRO.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் கட்டுப்பாட்டில் இந்திய விண்வெளித் துறை

ESA வுடன்  எதிர்கால ஒத்துழைப்புக்கு உடன்பட்ட ISRO

  • ஐரோப்பிய விண்வெளி முகமையும் (European Space Agency - ESA)  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் (Indian Space Research Organisation - ISRO) தேர்வு செய்யப்பட்ட எதிர்கால விண்வெளி பயணத் திட்டங்களில் வழித்தடங்கள், செயல்பாடுகள் மற்றும் தரவுகளை கையாளுதல் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளும்.
  • ESAவின் இயக்குனர் ஜோசப் அஷ்பேச்சர் மற்றும் இஸ்ரோ தலைவர் கைலாசவடிவு சிவன் ஆகியோர் ஜூலை 30, 2021 அன்று புதிய இருதரப்பு ஒத்துழைப்பு திட்டத்தில் கையெழுத்திட்டதைக் கொண்டாடியதோடு, விண்வெளிப் பயண ஒருங்கிணைப்பை பற்றியும் பரந்தளவில் காணொளி மூலம் விவாதித்தனர்.
  • திட்டமிடப்பட்டுள்ள ISROவின் ஆள்தாங்கி விண்வெளிக் கப்பல், நிலா மற்றும் சூரிய ஆராய்ச்சி பணிகளில் புதிய ஏற்பாட்டின் கீழ் ஒத்துழைப்பு கொடுக்கப்படும்.

பல தசாப்தங்களாக, தேசிய மற்றும் சர்வதேச விண்வெளி ஏஜென்சிகள் நமது சூரிய குடும்பத்தை ஆராய்வதில் பரந்த அறிவு மற்றும் அனுபவத்தை உருவாக்கியுள்ளன. களத்தில் உள்ள பௌதீக கட்டமைப்பு, கடந்தகால வெற்றிகள் மற்றும் தோல்விகளில் இருந்து படிப்பினைகள், எதிர்காலத்திற்கான யோசனைகள் உள்ளிட்ட வளங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம்  நாம் மேலும் விண்வெளிக்கு நெருக்கமாக செல்வதோடு, அங்கிருந்து அதிகமானவற்றை பூமிக்கு கொண்டு வரவிருக்கிறோம்.

ESAவும் ISROவும் இருதரப்பு ஒத்துழைப்பு திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது இரு நிறுவனங்களும் தங்கள் விண்கலங்களுக்குத் தேவைப்படும்போது மற்றும் அவற்றின் தகவல்களைப் பெறுவதை உறுதி செய்யும் - குறிப்பாக முக்கியமான தருணங்களில் - ஏவப்படும் அல்லது தரையிறங்கும் தருணங்களில் -  நிபுணத்துவம் பெற்ற ஒத்துழைப்பு பேணப்படும்.

ESAவின் இயக்குனர் ஜோசப் அஷ்பேச்சர் மற்றும் இஸ்ரோ தலைவர் கைலாசவடிவு சிவன் ஆகியோர் ஜூலை 30, 2021 அன்று புதிய இருதரப்பு ஒத்துழைப்பு திட்டத்தில் கையெழுத்திட்டதைக் கொண்டாடியதோடு, ESA மற்றும் ISROக்கிடையே எதிர்கால விண்வெளிப் பயண ஒருங்கிணைப்பை பற்றியும் பரந்தளவில் காணொளி மூலம் விவாதித்தனர்.

திறன் மற்றும் அறிவியலை அதிகரிப்பது, அபாயங்கள் மற்றும் செலவுகளைக் குறைத்தல்

விண்கல நிறுவனங்கள் தங்கள் விண்கலத்துடன் தரவைப் பரிமாறிக்கொள்வதற்காக விண்வெளியில் நுட்பமான கண்காணிப்பு நிலையங்களை உருவாக்குகிறார்கள், பூமியிலிருந்து கலத்திற்கும் அதன் கருவிகளைக் கட்டுப்படுத்தவும்  கட்டளைகளை அனுப்புகிறார்கள். அதோடு மட்டுமில்லாது, விண்வெளியில் இருந்து மதிப்புமிக்க அறிவியல் மற்றும் விண்கல நிலைத் தரவைப் பெறுகிறார்கள்.

ஆனால் சில நேரங்களில், ஒரு நிறுவனம் அவர்களது விண்கலத்தை கண்காணிக்க அல்லது கட்டளையிட வேண்டிய சூழலில் அது அது அவர்களின் ஆண்டெனாக்களின் வரம்புக்கு வெளியே இருக்கும் போதோ அல்லது அவர்களது நிலையங்கள் அதிகபட்ச திறனை அடைந்தபின் புதிய விண்கலத்தை ஏவும் திட்டமிடலில் இருக்கும்போதோ இந்த ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. 

முக்கிய கண்காணிப்பு நிலையத்தில் கணினி கோளாறு முதல்  பூகம்பம் வரையிலான அவசர தருணங்களில், விண்கலத்துடன் தொடர்புகொள்வதற்கான துணை காப்பு ஆண்டெனாவை வைத்திருப்பதும் அவசியம்.

ஒவ்வொரு பணிக்கும் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய ராட்சத ஆண்டெனாக்கள் மற்றும் கண்காணிப்பு நிலையங்களை உருவாக்குவது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். கூட்டு நிறுவனங்களின் நிலையங்களிலிருந்து ஆதரவைப் பெறுவது செலவுகளைக் கணிசமாகக் குறைக்கிறது, சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கிறது மற்றும் இரு நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் பணி அனுபவம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்ளவும் பயனடையவும் ஏதுவாகிறது.

நுட்பமான விண்வெளி கண்காணிப்பு நிலையங்களின் உலகளாவிய வலையமைப்பிற்கு நன்றி. மேலும் ESA அதன் கூட்டு நிறுவனங்களுக்கு ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட்டில் உள்ள ஐரோப்பிய விண்வெளி செயல்பாட்டு மையம் (European Space Operation Centre - ESOC) வழியாக சூரிய குடும்பம் முழுவதிலும் விண்கலத்திலிருந்து கண்காணிக்கவும், கட்டளையிடவும் தரவை பெறவும் உதவுகிறது.

புதிய இருதரப்பு ஒத்துழைப்பு ஏற்பாட்டின் கீழ், இந்தியாவின் முதல் ஆள்தாங்கி விண்வெளிப் பயணத் திட்டம், ககன்யான், சந்திரயான்-3 (சந்திர லேண்டர்) மற்றும் ஆதித்யா-எல்1 சூரிய ஆராய்ச்சி பணி போன்ற வரவிருக்கும் ISRO பணிகளுக்கு ESA கண்காணிப்பு ஆதரவு வழங்கும். பதிலுக்கு, எதிர்கால ESA பணிகளுக்கு இஸ்ரோவின் கண்காணிப்பு நிலையங்களிலிருந்து இதே போன்ற ஆதரவைப் பெறும்.

வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.esa.int/Enabling_Support/Operations/ESA_Ground_Stations/ESA_and_Indian_space_agency_ISRO_agree_on_future_cooperation