ராகுல்காந்தியின் பாரத்ஜோடோ யாத்திரையில் பங்கெடுத்த சொரோஸின் அறக்கட்டளை

செந்தளம் செய்திப்பிரிவு

ராகுல்காந்தியின் பாரத்ஜோடோ யாத்திரையில் பங்கெடுத்த சொரோஸின் அறக்கட்டளை

இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ‘நீதிபதி வணிகப் பள்ளியில்’ (Judge Business School) பிப்ரவரி இறுதியில் விரிவுரை ஆற்றப் போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார்.

அதேசமயம் “கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு ராகுல் காந்தியை மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பற்றி விரிவுரை செய்வார். ஸ்ருதி கபிலாவுடன் பிக் டேட்டா, ஜனநாயகம் மற்றும் இந்திய- சீன உறவுகள் குறித்தான விரிவுரைகளை கொடுப்பார்” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது.

மேலும், ஹங்கேரிய - அமெரிக்க கோடீஸ்வரரான ஜார்ஜ் சொரோஸின் ஓபன் சொசைட்டி அறக்கட்டளை 2013ம் ஆண்டு முதல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பயனாளிகளின் கில்டில் உறுப்பினராக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜார்ஜ் சொரோஸ், ஏற்கனவே பல நாடுகளில் ஆட்சி மாற்ற சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, தான் அதன் மூலம் லாபமடைபவர் என குற்றம் சாட்டப்பட்டவர். இங்கிலாந்திலும் கூட பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியவர் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஜனவரி 2020ல், ஜார்ஜ் சோரஸ், காலநிலை மாற்றத்திற்கு எதிராக வினையாற்றுவதற்காக உலகளாவிய பல்கலைக் கழகத்தைத் தொடங்க 1பில்லியன் டாலர் நிதியுதவி செய்வதாக உறுதியளித்தார்.

இவருடைய ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் துணைத் தலைவர் சலில் ஷெட்டியும் ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கெடுத்தார்.

அதானி குழும சர்ச்சையை காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எழுப்பி வந்தன. அதானி விவகாரத்தில் மோடி மீது ஜார்ஜ் சோரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நேரத்தில்தான் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாற்றினார்.

- செந்தளம் செய்திப்பிரிவு