நாட்டை கடன்பொறிக்குள் சிக்க வைக்கும் மோடி அரசு

தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி குற்றச்சாட்டு

நாட்டை கடன்பொறிக்குள் சிக்க வைக்கும் மோடி அரசு

மோடி அரசின் 8 ஆண்டு காலத்தில் இந்தியா ரூ.80 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது: தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி (TRS)

2021ஆம் ஆண்டுக்குள் ஜிடிபியில் 61.6 சதவீதத்தை தொடும் கடன்கள் மூலம் பாஜக நாட்டை கடன் வலையில் தள்ளுவதாக தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி (TRS) சனிக்கிழமை குற்றம் சாட்டியது. TRSன் செயல் தலைவரும் அமைச்சருமான கே.டி.ராமராவ் உள்ளிட்ட அக்கட்சியினர், காவி கட்சி பெட்ரோல், டீசல் தொடர் விலையுயர்வு போன்றவற்றால் மக்களைத் திணறடிப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவர்கள் பின்வரும் குற்றச்சாட்டுகளை மோடி அரசின் மீது வைத்துள்ளனர்.

 

1. சுதந்திரத்திற்குப் பிறகு, 67 ஆண்டுகால பல்வேறு பிரதமர்களின் ஆட்சியில், நாடு ரூ.55.87 கோடியே கடன் வாங்கியுள்ளது. 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, மோடி மட்டும் இந்த எட்டு ஆண்டுகளில் வாங்கிய கடன் ரூ.80 லட்சம் கோடி.

2. 2014-15 ஆம் ஆண்டில் வட்டி செலுத்துதல் வருவாயில் 36.1 சதவீதமாக இருந்தது, அது 2021 இல் 43.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

3. மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் மிஷன் பகீரத எனும் குடிநீர் திட்டத்திற்கு 19,000 கோடி ரூபாய் நிதி ஆயோக் பரிந்துரை செய்த போதிலும், மோடி அரசு 19 பைசா கூட வழங்கவில்லை.

4. சௌட்டுப்பாலில் அமைக்கப்படவிருந்த ஃப்ளூரைடு மற்றும் புளோரோசிஸ் தணிப்பு மையம் (Fluoride and Fluorosis Mitigation Centre) வேறு மாநிலத்திற்கு விரட்டியடிக்கப்பட்டது.

5. கைத்தறி பொருட்களுக்கு ஜிஎஸ்டியை 5% லிருந்து 12% உயர்த்தி கைத்தறி துறையை அழிவு நெருக்கடிக்குள் தள்ளுகிறது.

6. விவசாய பம்ப் செட்டுகளுக்கு மீட்டர்களை அமைக்க வற்புறுத்தி கூடுதல் கடன் என்ற பெயரில் மாநிலங்களை மத்திய அரசு 'பிளாக்மெயில்' செய்கிறது.

7. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் எஸ்டி இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் தெலுங்கானாவில் உள்ள பழங்குடியினருக்கு அநீதி இழைத்துள்ளது.

- வெண்பா 

(தமிழில்)

மூலக்கட்டுரை : Times of India