இயக்கவியல் பிரச்சனை பற்றி

லெனின்

இயக்கவியல் பிரச்சனை பற்றி

விலை : ரூ.165

நூலாசிரியர்: லெனின்

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2020

பக்கங்கள்: 206 

நூல் குறிப்பு:

"உலகம் என்பது முன்னரே தயாரிக்கப்பட்ட, முழுமையான பொருட்களின் தொகுதி என்றவாறில்லமால், நிகழ்வுபோக்குகளின் தொகுதி, இதில், நம்முடைய மூளைகளில் அவற்றின் பிம்பங்களுக்கு,கருத்தமைப்புகளுக்கு சிறிதும் குறையாத அளவில் வெளித்தோற்றத்தில் நிலையாகத் தோன்றுகின்ற பொருட்கள் தோற்றம், மறைதல் என்னும் இடையீடில்லாத மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்னும் மாபெரும் அடிப்படையான சிந்தனை... இந்த மாபெரும் அடிப்படையான சிந்தனை, சிறப்பாக ஹெகல் காலத்திலிருந்து பொது உணர்வில் முற்றிலும் ஊடுருவியிருந்தபடியால் அதன் பொதுத் தன்மையில் தற்பொழுது அதை ஒருவரும் மறுப்பதில்லை. ஆனால் இந்த அடிப்படையான சிந்தனையைச் சொல்லளவில் அங்கீகரிப்பதும் அதை ஆராய்ச்சியின் ஒவ்வொரு துறைக்கும் எதார்த்தத்தில் நுணுக்கமாகக் கடைப்பிடிப்பதும்  இரண்டு வெவ்வேறு விஷயங்களாகும்" என்று எங்கெல்ஸ்  எழுதுகிறார். இயக்கவியல் தத்துவஞானத்துக்கு முடிவானதாக, தனிமுதலானதாக, புனிதமானதாக ஒன்றும் இல்லை. அது ஒவ்வொரு பொருளின் மற்றும் ஒவ்வொன்றுக்குள்ளேயும் உள்ள மாறும் தன்மையை வெளிப்படுத்துகிறது; தோற்றம், மறைதல் என்னும் இடையீடில்லாத நிகழ்வுப் போக்கு, கீழ்நிலையிலிருந்து உயர்நிலைக்கு முடிவில்லாத முன்னேற்றம் ஆகியவற்றைத் தவிர வேறு எதுவுமே அதற்கு முன்பாக நிலைத்திருக்க முடியாது. இயக்கவியல் தத்துவஞானம் என்பது சிந்தனை செய்கின்ற  மூளையில் இந்த நிகழ்வுப் போக்கின் வெறும் பிரதிபலிப்பு  என்பதைக் காட்டிலும் அதிகமாக ஒன்றுமில்லை." ஆகவே இயக்கவியல் என்பது "வெளியிலுள்ள உலகம், மனித சிந்தனை ஆகிய இரண்டின் இயக்கத்தின் பொது விதிகளைப் பற்றிய விஞ்ஞானம்" என்று மார்க்ஸ் வரையறுத்துக் கூறுகிறார்.

தொடர்புக்கு: +91 96003 49295