விவசாயிகள் மீதான அடக்குமுறையை நிறுத்தாவிடில் நாடு முழுவதும் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும்

தீக்கதிர்

விவசாயிகள் மீதான அடக்குமுறையை நிறுத்தாவிடில் நாடு முழுவதும் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும்

விவசாயிகள் மீதான அடக்குறையை நிறுத்தா விடில் நாடு முழுவதும்  பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என பிரதமர் மோடிக்கு சம் யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய  கூட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் 6, 2024  அன்று சம்பு எல்லையில் விவசாயி கள் போராட்டத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையை சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) வன்மையாக கண்டித்  தது. காவல்துறையின் தாக்குதலில்  15 விவசாயிகள் காயமடைந்த னர். ஜனநாயக முறையில் விவசாயி களிடம் கலந்தாலோசனை மற்றும்  விவாதங்களை மேற்கொள்வதற்கு பதிலாக, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா  விவசாயிகள் போராட்டத்தை அடக்க எப்போதும் காவல்துறை பலத்தை பயன்படுத்துவதையே விரும்புகின்றனர். இது வன்மை யாக கண்டித்தக்கது.

போராட்டத்திற்கு தயாராக வேண்டும்

அனைத்து பயிர்களுக்கும் சி2 (C2)+50% என்ற அடிப்படையில் சட்டப்பூர்வ உத்தரவாதத்துடன் கூடிய குறைந்தபட்ச ஆதார விலை  (எம்எஸ்பி), விரிவான கடன் தள்ளு படி, மின்சாரத்தை தனியார்மய மாக்காமல் இருப்பது மற்றும் லார்  (LARR) சட்டம் 2023-ஐ அமல்படுத்து தல் உள்ளிட்ட அனைத்து நியாய மான கோரிக்கைகள் நிறைவேறும் வரை 2025-ஆம் ஆண்டில் நாடு  தழுவிய தொடர் மற்றும் பேரளவி லான போராட்டத்திற்கு தயாராகு மாறு எஸ்கேஎம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை அழைக்கி றது. ஐக்கிய தொழிலாளர் இயக்  கத்துடன் கைகோர்த்து ஐக்கிய விவ சாயிகள் இயக்கம் கடுமையான  விவசாய நெருக்கடி, வேலையின்மை  மற்றும் விவசாயிகள் மற்றும் தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் குறைந்தபட்ச  ஊதியம் மறுப்பு ஆகியவற்றை ஏற்  படுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி - 3 அரசின் கார்ப்பரேட் கொள்கைகளை மாற்ற கட்டாயப் படுத்தும்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி?

கிரேட்டர் நொய்டாவில் விவ சாயிகள் மகாபஞ்சாயத்தில் கலந்து கொள்வதை தடுக்க எஸ்கேஎம் விவ சாய சங்கத் தலைவர்கள் ராகேஷ்  டிகாயத் மற்றும் தஜிந்தர் சிங்  விர்க் ஆகியோரை உத்தரப்பிர தேச காவல்துறை பலவந்தமாக தடுத்து வைத்துள்ளது. அதே போல  சிறையில் உள்ள விவசாயிகளை சந்திக்க எம்எல்ஏக்களுக்கும் அனு மதி மறுக்கப்படுகிறது. உத்தரப்பிர தேசத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவு வதை உறுதிசெய்ய குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை எஸ்கேஎம் வலியுறுத்துகிறது.

விவசாயிகள் தீவிரவாதிகளா?

விவசாயிகளை குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளாக நடத்து வதை உத்தரப்பிரதேச பாஜக அரசு  நிறுத்த வேண்டும். சட்டவிரோத மாக சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து விவசாயிகளையும் விடுவிக்க வேண்டும். சட்டத்தை மீறும் காவல் அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  இல்லையெனில், உத்தரப்பிர தேசத்தில் எந்தவொரு அரசு அடக்குமுறையையும் முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய விவசாயிகள் இயக்கம் உறுதி பூண்டுள்ளது.

பலன்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்

2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு  மாற்றப்படாத நிலத்தின் வட்டார  விலையை மாநிலம் முழுவதும்  தொடர்ந்து மாற்றி அமைக்க வேண்  டும். மேலும் திட்டங்களால் பாதிக்  கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு 10% மேம்பாடு செய்யப்பட்ட நில த்தை திரும்ப வழங்க வேண்டும்,  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நீதிமன்ற உத்தரவு களை உரிய நேரத்தில் அமல்படுத்த  வேண்டும். நில கையகப்படுத்த லால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் லார் சட்டம் 2013-இன் பலன்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். அனை த்து குடிமக்களின் போராட்ட உரி மையை பாதுகாக்க வேண்டும் என  உத்தரப்பிரதேச பாஜக அரசு உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு எச்சரிக்கை

விவசாய இயக்கத்தை பிளவு படுத்த பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்  டணி மற்றும் கார்ப்பரேட் மற்றும்  மத வெறி சக்திகளின் தீய நோக் கம் மற்றும் தொடர் முயற்சிகள் குறி த்து விழிப்புடன் இருக்க வேண்டும்  என எஸ்கேஎம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறது. 

விரைவில் ஆய்வு

நொய்டா-கிரேட்டர் மற்றும் நொய்டாவில் சட்டவிரோத நில  கையகப்படுத்தலால் பாதிக்கப் பட்ட கிராமங்களுக்கு அகில இந்  திய மற்றும் உத்தரப்பிரதேச மாநில  விவசாய சங்கத் தலைவர்கள் அடங்  கிய எஸ்கேஎம் குழு விரைவில் ஆய்வு செய்யும். நொய்டா மற்றும்  கிரேட்டர் நொய்டாவின் வீர விவ சாயிகளின் போராட்டத்திற்கு ஆதர வும் ஒற்றுமையும் தெரிவிக்குமாறு இந்தியா முழுவதும் உள்ள தொழி லாளர்கள் மற்றும் அனைத்து பிரி வினரையும் எஸ்கேஎம் அழைக்கி றது” என அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

- தீக்கதிர்

https://theekkathir.in/News/india/new-delhi/a-massive-protest-will-be-held-across-the-country-if-the-oppression-of-farmers-is-not-stopped

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு