பிரிக்ஸ் நாடுகள் மீதான தடைகளுக்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும் நிற்கும் - ட்ரம்பிற்கு புதின் பதில்!
விகடன் இணையதளம்

ட்ரம்ப் பிரிக்ஸ் மீது குற்றச்சாட்டு வைக்கும் நிலையில், ரஷ்யா-சீனா கூட்டணி பிரிக்ஸ் வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றுபட்டுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து அவரை உறுத்தும் விஷயங்களில் ஒன்று, 'பிரிக்ஸ்'.
பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக செயல்படும்... அமெரிக்க டாலருக்கு எதிராக, அவர்களது நாணயத்தை கொண்டு வருவார்கள் என்று ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
மேலும், இந்த நாடுகளின் மீது 10 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தி வருகிறார்.
புதின் என்ன சொல்கிறார்?
இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றிருக்கிறார். அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசியிருப்பதாவது...
"முக்கிய கட்டமைப்பு திட்டங்களுக்கான கூடுதல் வளங்களைத் திரட்ட ரஷ்யாவும், சீனாவும் தனி கவனம் செலுத்தி வருகின்றன.
மேலும், உலக அளவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் நிறைந்த சவால்களுக்கு எதிராக பிரிக்ஸை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒன்றுபட்டு நிற்கின்றது.
உலக அளவிலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மத்தியிலும் மேற்கொள்ளப்படும் சமூகப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் பாரபட்சமான தடைகளுக்கு எதிராக மாஸ்கோவும் பெய்ஜிங்கும் பொதுவான நிலைப்பாட்டை எடுக்கும்" என்று கூறியுள்ளார்.
விகடன் இணையதளம்
https://www.vikatan.com/government-and-politics/trump-vs-brics-putin-china-russia-2025
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு