வெனிசுலாவிற்கு சொந்தமான இயற்கை வளங்களை சூறையாடத் துடிக்கும் அமெரிக்கா

தீக்கதிர்

வெனிசுலாவிற்கு சொந்தமான இயற்கை வளங்களை சூறையாடத் துடிக்கும் அமெரிக்கா

வெனிசுலா - கயானாவிற்கு இடையேயான சர்ச்சைக்குரிய எஸ்சேகுய்போ (Essequibo) என்ற  பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் கனிமவளங்களை அமெரிக்கா, எக்ஸான்மொ பில் என்ற எண்ணெய் கார்ப்பரேட் நிறுவனம் மூலம் சூறையாட திட்டமிட்டு வருகிறது.

1,60,000 ச.கிமீ பரப்பளவு கொண்ட எஸ்சேகுய்போ என்ற பகுதி வெனிசுலாவுடன் இணைந்து ஸ்பெயினின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது.2015 ஆம் ஆண்டு இந்த பகுதியில் அதிகளவிலான எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் இருப்பதை எக்ஸான்மொபில் என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் கண்டறிந்தது. அதன் பிறகு இந்த பகுதியில் உள்ள மொத்த இயற்கை வளத்தையும் கொள்ளையடிக்க முயற்சித்து வருகிறது.அதற்காக மற்றொரு தென்னமெரிக்க நாடான கயானா, அமெரிக்கா மற்றும் அமெரிக்க  தெற்கு படைப்பிரிவு ஆகி யவற்றுடன் இணைந்து  முனைந்து வருகிறது.

இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான பகுதியில் உள்ள இயற்கை வளங்களை பயன் படுத்தும் வகையில் சட்ட நடைமுறைகளை வெனிசுலா தீவிரமாக்கி வருகிறது.அதற்கான மசோதாவையும் வெனிசுலா  ஜனாதி பதி நிக்கோலஸ் மதுரோ தாக்கல் செய்துள் ளார்.  புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் கனிமங்களை ஆராய்வதற்காக அந்த  பிரதே சத்திற்குள் “உடனடியாக” நுழைய தயாராகு மாறு வெனிசுலா நிறுவனங்களுக்கு வழிகாட்டி யுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள கயானா நாட்டின் நிறுவனங்களை 3 மாதத்திற்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் எக்ஸான்மொபில் நிறுவனமும் இணைந்து கயானா ஜனாதிபதி இர்பான் அலி மூலம் அந்த பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இந்த வழக்கை ஐ .நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்வதாக கயானா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஐ .நா பாதுகாப்பு கவுன்சில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தில் இருப்பதால் தங்களுக்கு  சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என அவர் கருது வதாக கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தங்களது பகுதிக்கு உரிமை கோரி வரும் வெனிசுலாவிற்கு, கயானா வை பகடைக்காயாக பயன்படுத்தி அமெரிக்கா  முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலை யில் எக்ஸான்மொபில்  நிறுவனம்  தென் அமெ ரிக்க நாடுகளுக்குள் மோதலைத் தூண்டிவிட்டு நமது வளத்தை கொள்ளையடிக்க நினைக் கிறது; எனவே நேரடியான பேச்சுவார்த்தை நடத்தலாம் என கயானாவிற்கு மதுரோ அழைப்பு விடுத்துள்ளார்.

- தீக்கதிர்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு