ரிசர்வ் வங்கி பணத்தை கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கும் பாஜக அரசு

கனகு கனகராஜ்

ரிசர்வ் வங்கி பணத்தை கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கும் பாஜக அரசு

2019 செப்டம்பரில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் அதற்கு கிழக்குப் பகுதியிலுள்ள நாடுகளுக்கு #7000ம்_கோடி_நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார்.


ரிசர்வ் வங்கிப் பணத்தை வாங்கி இந்திய பொருளாதாரத்தை உயர்த்தாமல் இப்படி நடப்பது தேவையா என்ற விவாதங்கள் எழுந்தன. இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் மோடியரசு கடன் கொடுப்பதற்கு காரணம் அந்த நாட்டிலெல்லாம் அம்பானியும், அதானியும் தொழில் தொடங்கியிருப்பதும்-அந்தத் தொழில்களின் வளர்ச்சியை ஒட்டியே கடன் தரப்படுவதாக #NATIONAL_HERALD பத்திரிக்கை ஆதாரபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

*ரஷ்யாவில் 2018 ஜூலையில் #ரிலையன்ஸ்_டிபன்ஸ் நிறுவனம் ஆயுத தயாரிப்பு சம்பந்தமாக ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது மோடி 7000 கோடி கடன் அறிவித்துள்ளார்.

*2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் #அதானிக்கு SBI வங்கி 1பில்லியன் டாலர் கடனுதவி செய்ததும் மோடியுடன் அதானியும் ஆஸ்திரேலியா சென்றதும் ஊரறிந்த ரகசியம்

*இந்தியாவிடமிருந்து அதிக கடன் பெறும் நாடு #பங்களாதேஷ். 2016ம் ஆண்டு அந்த நாட்டிற்கு 2பில்லியன் டாலர் கடனுதவி கொடுக்கப்பட்டது, அதற்கு முந்தைய வருடம் #அதானியின்_பவர்_நிறுவனம் பங்களாதேஷ் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2017ல் 4.5 பில்லியன் டாலர் கடன் கொடுக்கப்பட்டது, அந்த வருடத்திற்கு முந்தைய வருடம் #ரிலையன்ஸ்_பவர்_நிறுவனம் 1 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தத்தை பங்களாதேஷுடன் போட்டுள்ளது.

*2016ம் வருடம் #மொசாம்பிக் நாட்டிடமிருந்து அந்த நாட்டு விவசாயிகளைக் காப்பதற்காக என்று கூறி #தானிய_இறக்குமதிக்கு மோடியரசு ஒப்பந்தம் செய்தது. அந்த இறக்குமதி செய்யும் தானியங்களைக் கையாளும் இந்திய இறக்குமதித் துறையுடன் அந்த தானியங்களை துறைமுகத்திலிருந்து குடோன்களுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்தத்தை #அதானி_நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

*2017ம் வருடம் #மியான்மருக்கு 500 மில்லியன் கடனுதவி செய்யப்பட்டது, 2015ம் வருடம் மியான்மர் அரசுடன் #ரிலையன்ஸ்_ஆயில்_மற்றும்_கேஸ் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

* #இலங்கைக்கு மூன்று தவணைகளில் உள்நாட்டுக் கட்டமைப்பு, போக்குவரத்து ரயில்வே மேம்பாடு போன்றவற்றிற்காக 1684 மில்லியன் டாலர் கடனுதவி 2018ல் வழங்கப்பட்டது, அந்த நாட்டுடன் 2017ல் #அதானி_மற்றும்_அம்பானி நிறுவனங்கள் மேற்கண்ட மூன்று துறை சார்ந்தும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன

தேசபக்தி குறித்து வகுப்பெடுக்கும் பாஜக உண்மையில் தேசத்திற்கு விசுவாசமாக இல்லை, பெரும் முதலாளிகளுக்கு விசுவாசி என்பதே.

கனகு கனகராஜ்

https://www.facebook.com/share/p/1KsJ8uBgrD/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு