ரஷ்யாவுடன் இந்தியா Rare Earth ஒப்பந்தம்., சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விலக திட்டம்
லங்காஶ்ரீ

சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விலக இந்தியா ரஷ்யாவுடன் Rare Earth கனிமங்கள் தொடர்பில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரிய கனிமங்கள் (Rare Earths) மற்றும் காந்த (Magnet) உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தொடர்பாக, இந்தியா தற்போது ரஷ்யாவுடன் புதிய ஒத்துழைப்பை ஆராய்ந்து வருகிறது.
சீனா உலக Rare Earths கனிமங்கள் செயலாக்கத்தில் 90 சதவீத கட்டுப்பாட்டை வைத்திருப்பதால், அதன் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உலகளாவிய தொழில்துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, ஆட்டோமொபைல், எரிசக்தி மற்றும் நுகர்வோர் மின்னணு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், இந்திய அரசு ரஷ்யாவின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை ஆராய உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது.
ரஷ்யாவின் Nornickel மற்றும் Rosatom போன்ற அரசு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
Lohum மற்றும் Midwest போன்ற இந்திய நிறுவனங்கள், ரஷ்ய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த முயற்சியில், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வகங்கள், தன்பாத் இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் மற்றும் புவனேஸ்வரின் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.
மேலும், இந்தியா Rare Earth கனிமங்களை கையிருப்பில் வைத்திருக்க திட்டமிட்டு, ரூ.7,300 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
லோஹம் நிறுவனத்தின் நிறுவனர் ராஜத் வர்மா, “இந்தியாவின் மெக்னெட் உற்பத்தி திறனை மேம்படுத்த புதிய மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தொடர்ந்து ஆராய்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
2023-24ஆம் ஆண்டில், இந்தியா 2,270 டன் Rare Earth கனிமங்களை இறக்குமதி செய்துள்ளது. இதில் 65 சதவீதம் சீனாவிலிருந்து வந்துள்ளன.
இந்த புதிய ஒத்துழைப்பு, இந்தியாவை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- லங்காஶ்ரீ
https://news.lankasri.com/article/india-russia-rare-earth-pact-vs-chinas-grip-1760802498
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு