அமெரிக்காவிற்கான காலியம், ஜெர்மேனியம், ஆன்டிமனி ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளது சீனா

வெண்பா (தமிழில்)

அமெரிக்காவிற்கான காலியம், ஜெர்மேனியம், ஆன்டிமனி ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளது சீனா

அமெரிக்காவிற்கு காலியம், ஜெர்மேனியம், ஆன்டிமனி மற்றும் அதி கடினமான பொருட்கள் போன்ற “இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களின்” (dual-use items) ஏற்றுமதிக்கான தடையை சீனா நீக்கியுள்ளது என்று வர்த்தக அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9, 2025) தெரிவித்தது.

இந்தத் தடை நீக்கம் ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பர் 27, 2026 வரை நடைமுறையில் இருக்கும் என்று அந்த அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் தடையை அமைச்சகம் டிசம்பர் 2024 இல் அறிவித்தது. இவற்றுடன் சேர்த்து தடை செய்யப்பட்ட, இரட்டைப் பயன்பாட்டு கிராஃபைட் (dual-use graphite) ஏற்றுமதியையும் அமைச்சகம் விடுவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 9 அன்று விதிக்கப்பட்ட பிற ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளையும்கூட விடுவிப்பதாகவும் சீனா வெள்ளிக்கிழமை (நவம்பர் 7, 2025) அறிவித்தது. இவற்றில், குறிப்பிட்ட அரிமண் பொருட்களும் (rare earth materials), லித்தியம் பேட்டரி பொருட்களும் அடங்கும்.

இதற்கு முன்னதாக, வரிகளைக் குறைக்கவும், பிற வர்த்தக நடவடிக்கைகளை ஓர் ஆண்டுக்கு நிறுத்தி வைக்கவும் ஜின்பிங்கும் டிரம்ப்பும் ஒப்புக்கொண்டனர்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/international/china-suspends-ban-on-exports-of-gallium-germanium-antimony-to-us/article70259295.ece

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு