உங்கள் நீரிழிவு நோய்க்கு காலனியாதிக்கமே காரணம்
தெற்காசியர்கள் மரபு ரீதியாகவே நீரிழிவு நோய்க்கு ஆளாகிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய பஞ்சங்களே இதற்குக் காரணம் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. - காவ்யா ஸ்ரீகாந்த்
"உங்களுக்கு நீரிழிவு இருந்தால், நீங்கள் எப்போதும் அதனுடனே வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் முன்னெப்போதும் அதை பற்றி விழிப்புணர்வு கொண்டதில்லை,” என்று லண்டனைச் சேர்ந்த 35 வயதான தொழிற்சங்க அமைப்பாளர் அருண் தேவசியா கூறினார். தேவாசியா இன்சுலின் ஊசிகளை கையிலேயே வைத்திருப்பதோடு சாப்பிடுவதற்கு 10 முதல் 30 நிமிடங்களுக்கு முன் கவனமாக செலுத்துகிறார். இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன என்று அவர் விளக்கினார். "நான் தவறுதலாக அதிக இன்சுலின் எடுத்ததால் ஆம்புலன்சில் வர நேர்ந்தது", மறுபுறம், “குறைவாக எடுத்துக் கொண்டால், உணவு முறையினால் நம்பமுடியாத அளவிற்கு நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு, குளுக்கோஸ் உயிரணுக்களால் உறிஞ்சப்படுவதற்குப் பதிலாக இரத்த ஓட்டத்தில் தங்குகிறது, இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது மற்றும் காலப்போக்கில் முக்கிய உறுப்புகளுக்கு (இதயம் போன்றவை) சேதத்தை ஏற்படுத்தும். தெற்காசிய மக்கள், குறைந்த உடல் எடையில் இருந்தாலும், அதிக விகிதத்தில் நீரிழிவு நோயைக் கொண்டுள்ளனர். உண்மையில், தெற்காசியர்கள் மற்ற பழங்குடிக் குழுக்களை விட வகை-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம். 45 வயதிற்கு மேற்பட்ட தெற்காசிய மக்களில் நீரிழிவு நோயின் தாக்கம் ஆண்களில் 26% சதவிகிதமாகவும் பெண்களில் 32% சதவிகிதமாகவும் உள்ளது. இது பிரிட்டிஷ் ஆண்கள் மற்றும் பெண்களை விட முறையே மூன்று மற்றும் ஐந்து மடங்கு அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
நீரிழிவு நோய்க்கான மூல காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் அறியவில்லை. அதிக சர்க்கரை நுகர்வு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற உடல்நல கோளாறுகள் (comorbidities) மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றை காரணங்களாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர். சிலர் மரபு ரீதியாகவே இது தெற்காசியர்களை இந்த நிலைக்குத் தள்ளுகிறது என்கின்றனர். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி, இதற்கு அடிப்படை காரணம் மரபியல் கூறு அல்ல – காலனியாதிக்கத்தின் நீண்ட கால பஞ்சங்கள் மற்றும் உணவு பற்றாக்குறையே என்கிறது.
- வெண்பா
(தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.thejuggernaut.com/south-asian-diabetes-incidence