ஃக்ருப்ஸ்கயா: "காதல் சமூக மாற்றத்தின் ஒருபகுதியாக இருக்கவேண்டும்" என்ற லெனின் கூற்றுக்கு இலக்கணம் படைத்தவர்
செந்தளம் செய்திப்பிரிவு
கம்யூனிஸ்ட்கள் ஒழுக்கநெறிகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும், அதில் ஏற்படும் "காதல் சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்றும் "காமம் உணவு, உடை போன்ற அத்தியாவசியமான ஒன்று அல்ல" என்றும் மனிதகுலத்தின் மேன்மையை எடுத்துரைத்தார் லெனின். லெனினின் புரட்சி வாழ்க்கையில் துணைநின்று அவரின் காதலுக்கான விளக்கத்திற்கு இலக்கணம் படைத்தார் தோழர் ஃக்ருப்ஸ்கயா.
ஃக்ருப்ஸ்கயா ரஷ்ய பேரரசு, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சாதாரண பிரபுத்துவ குடும்பத்தில் 26 பிப்ரவரி, 1869 பிறந்தார். அவரது தந்தை, கான்ஸ்டான்டின் இக்னாடிவிச் க்ருப்ஸ்கி (1838-1883), ஒரு ரஷ்ய இராணுவ அதிகாரி மற்றும் ரஷ்யப் பேரரசின் பிரபு ஆவார். ஆனால், ஃக்ருப்ஸ்கயா ஏற்ற தாழ்வான முதலாளித்துவ சமூக அமைப்பை பற்றியும் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது பற்றியும் ஒரு தெளிவான கருத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு மார்க்சியத்தை கற்க தொடங்கினார். அதற்காக பல மார்க்சிய கூட்டங்களில் கலந்து கொண்டார். 1894இல் மார்க்சிஸ்ட் கலந்துரையாடல் குழுவில் லெனினை சந்தித்தார். ஒரு மார்க்சிய புரட்சிகர போராட்டத்தில் ஈடுபட்டத்திற்காக 1896 இல் கைது செய்யப்பட்டனர் பின்னர், லெனின் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டார்.
அக்டோபர் 1896 இல், லெனின் கைது செய்யப்பட்ட பல மாதங்களுக்குப் பிறகு, க்ருப்ஸ்கயாவும் கைது செய்யப்பட்டு பீட்டர் மற்றும் பால் கோட்டையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுதலை செய்யப்பட்டு, யுஃபாவிற்கு மூன்று ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டார். ஃக்ருப்ஸ்கயா நாடு கடத்தப்படுவதற்கு முன், லெனினிடமிருந்து ஒரு "ரகசியக் குறிப்பை" தனது தாயின் மூலமாகப் பெற்றாள். அக்காதல் கடிதம் இருவருக்குமான "நிச்யதார்த்த பத்திரமாக” அமைந்தது, நாடுகடத்தப்பட்ட ஒரு கிராமத்தில் லெனினுடன் சேர அனுமதிக்கப்படலாம் என்று பரிந்துரைத்த கடிதம் அது. சைபீரியாவின் மினுசின்ஸ்க் பகுதியில் ஃக்ருப்ஸ்கயா லெனினுடைய வருங்கால மனைவி என்று மக்களிடம் பேசப்பட்டது. ஆம், ஃக்ருப்ஸ்கயா லெனினுடன் செல்ல அனுமதிக்கப்பட்டார், மே 1898ல் ஃக்ருப்ஸ்கயா லெனினைத் திருமணம் செய்து கொள்ளும் நிபந்தனையின் பேரில் இருவரும் ஒன்று சேர்ந்தனர். 1905 முதல் இரசியா புரட்சி தோல்வியுற்ற பின், ரஷ்யாவுக்குத் திரும்புவதற்கு முன், இருவரும் நாடுகடத்தப்பட்ட பிறகு முனிச்சிலும் பின்னர் லண்டனிலும் குடியேறினர்.
1917 புரட்சியைத் தொடர்ந்து, ஃக்ருப்ஸ்கயா அரசியல் கட்சியில் முன்னணியில் இருந்தார், அவர் 1920ல் கல்விக் குழுவின் தலைவரானார். 1924ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் உறுப்பினரானார். 1927ல் அதன் கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினராகவும், 1931ல் உச்ச சோவியத்தின் உறுப்பினராகவும், 1931ல் கௌரவக் குடிமகனாகவும் இருந்தார். அவர் 1929 முதல் 1939 வரை துணைக் கல்வி ஆணையராக இருந்தார், மேலும் சோவியத் கல்வி முறையின் மீது வலுவான செல்வாக்கு ஏற்பட காரணமாக இருந்தார். கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் "பொதுக் கல்வியின் ஒவ்வொரு கூறுகளும் அவரது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக இருந்தன, மேலும் நிறைவான வாழ்க்கையை உருவாக்குவதற்குத் தேவையான கல்வி மற்றும் நூலகங்களுக்கான அணுகூலங்கள் அனைத்து தனிநபர்களுக்கும் வழங்குகின்றன".
இடது, வலது திருத்தல்வாதத்தை எதிர்த்த ஃக்ருப்ஸ்கயா போராட்டம் :
1920ஆம் ஆண்டு முழுவதும் பின்னர் உருவாகும் பிரிவுகளில் ட்ராட்ஸ்கி தலைமையிலான திருத்தல்வாதத்தை ஸ்டாலினுடன் இணைந்தே எதிர்த்தார். 1922 முதல் 1925 வரை, ட்ராட்ஸ்கியின் இடதுப் போக்கை கடுமையாக விமர்சித்தார். 1925ல், ஃக்ருப்ஸ்கயா லியோனையும் தாக்கினார். ட்ராட்ஸ்கியின் “அக்டோபர் பாடங்கள்” என்ற கட்டுரைக்கு ட்ராட்ஸ்கி ஒரு சர்ச்சைக்குரியவர் என்று பதிலளித்தார். அதில், "மார்க்சிய பகுப்பாய்வு ஒருபோதும் தோழர் ட்ராட்ஸ்கியின் வலுவான புள்ளியாக இருந்ததில்லை" என்று அவர் குறிப்பிட்டார். ஒரு நாட்டில் சோசலிசம் கட்டியமைக்க ஸ்டாலினுடன் நின்றவர், நிரந்தரப் புரட்சிக்கு எதிராக கடுமையாக சாடினார். மற்றும் ட்ராட்ஸ்கி "விவசாயிகளின் பங்கைக் குறைத்து மதிப்பிடுகிறார்" என்றும் முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜெர்மனியின் புரட்சிகர நிலைமையை ட்ராட்ஸ்கி தவறாகப் புரிந்துகொண்டார் என்றும் விமர்சித்துள்ளார்.
ஃக்ருப்ஸ்கயா ஒரு உறுதியான மார்க்சிய-லெனினியவாதியாக தனது இறுதி காலம் வரை வாழ்ந்தார். 27 பிப்ரவரி 1939 மாஸ்கோ, ரஷ்ய சோவியத் யூனியனில் மறைந்தார். சோவியத் படைக்கவும் மனித குலத்தின் வளர்ச்சியில் காதலுக்கு புது இலக்கணத்தையும் படைத்த அவர்களின் நினைவைப் போற்றுவோம். லெனின் தலைமையில் படைத்த சோவியத் நாடுகளை உலகமெங்கும் படைக்க புரட்சிசெய்வோம்! வெற்றிக் கொள்வோம் !! வாருங்கள் ஓரணியாக !!!
- செந்தளம் செய்திப்பிரிவு