உலகம் முழுவதும் நடப்பிலுள்ள அவதூறு சட்டங்கள் யாவை?

டைம்ஸ் ஆப் இந்தியா

உலகம் முழுவதும் நடப்பிலுள்ள அவதூறு சட்டங்கள் யாவை?

உலகம் முழுவதும் வேகமாக அமல்படுத்தப்பட்டு வந்த அவதூறு குற்றமாக்கல் நடவடிக்கைகள் தற்போது பின்னடைவை சந்தித்து வருகின்றன. இருப்பினும் 160 நாடுகள் அவதூறுகளை இன்றும்  குற்றமாக்கி சமீபகாலங்களில் மிகவும் கடுமையான விதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

சில குறிப்பிட்ட நாடுகளில் உள்ள நிலையைப் பாருங்கள்:

எங்கே அவதூறு குற்றமாக்கப்பட்டது... இங்கிலாந்து (UK)

2009ல் தொடர்புடைய குற்றங்களின் பெரும்பாலான பிரிவுகளுக்கு அவதூறுக்கான கிரிமினல் வழக்கு நீக்கப்பட்டது. ஒரு வலைதள செய்தி கூறுவதாவது, "இங்கிலாந்தின் அரதபழசான குற்றத்தண்டனைச் சட்டமான அவதூறுசட்டத்தை வெளிநாடுகளின் கருத்துரிமையை பறிக்க அது நியாயப்படுத்தி வருகிறது..."

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து

ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தில் அவதூறு செய்வது கிரிமினல் குற்றம் அல்ல, மாறாக சிவில் குற்றமாகும்.

நியூசிலாந்தில், குற்றவியல் அவதூறு 1993ல் ஒழிக்கப்பட்டது. அவதூறு வழக்குகள் காவல்துறையின் ஈடுபாடு இல்லாமல் நீதிமன்றங்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன, மேலும் குற்றவாளிகள் சிறைத் தண்டனையை பெறுவதில்லை, ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு மற்றும் நீதிமன்றச் செலவுகளைச் செலுத்த வேண்டும். நியூசிலாந்தில், சில வகைகள் மட்டுமே அவதூறு - வாக்காளர்களை பாதிக்கும் வகையில் தவறான தகவல்களை தெரிந்தே வெளியிடுவது அல்லது ஆன்லைனில்  மூலம் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவது போன்றவை மீது மட்டுமே இந்தப் பிரிவில் கிரிமினல் குற்றங்களாக வழக்குத் தொடரலாம்.

அவதூறு ஒரு கிரிமினல்/சிவில் குற்றமாக இருக்கும் இடத்தில்... அமெரிக்கா (US)

ஃபெடரல் மட்டத்தில் அவதூறு ஒரு கிரிமினல் குற்றம் இல்லை என்றாலும், 24 மாநிலங்கள் இன்னும் குற்றவியல் அவதூறு விதிகளை கையாளுகின்றன என்று அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் குறிப்பிடுகிறது.

எவ்வாறாயினும், புகார்தாரர் பொது நபராக இருக்கும் வழக்குகளில் "உண்மையான பாதிப்பு" நிரூபிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் அத்தகைய சட்டங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தியுள்ளது. பேசியதில் உண்மையிருப்பின் குற்றவியல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பல மாநிலங்களில், அத்தகைய சட்டங்கள் குற்றவியல் சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் அவை ஒருபோதும் செயல்படுத்தப்படுவதில்லை.

ஐரோப்பா

சர்வதேச உரிமை அமைப்புகளின் பரிந்துரைகள் இருந்தபோதிலும், நான்கில் மூன்று பங்கு உறுப்பு நாடுகளில் அவதூறுக்கு எதிராக குற்றவியல் சட்டங்கள் உள்ளன என்று ஐரோப்பாவிலுள்ள பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு 2017ல் கூறியது.

தெற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவை மட்டும் "பிரச்சினைக்குரிய பகுதிகள்" என்று அழைக்கப்பட்டாலும், "பாதிக்கப்பட்டவர் ஒரு பொது அதிகாரியாக இருந்தால், சர்வதேச விதிகளை மீறினால், அவ்வகை அவதூறுக்கு மிகவும் கடுமையான தண்டனையை" மேற்கு ஐரோப்பாவிலுள்ள ஒன்பது நாடுகளும் கூட அங்கீகரிக்கின்றன.

ஜப்பான்

ஜப்பானின் சட்டங்கள் அவதூறு வழக்குகளில் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் இரண்டையும் அனுமதிக்கின்றன. 2022 ஆம் ஆண்டில் ஒரு பிரபலமான மல்யுத்த வீரர் ஆன்லைன் மூலம் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, கிரிமினல் அவதூறுக்கான தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டன.

குற்றவாளிகள் ஒரு வருடம் சிறைத்தண்டனையையும் 3,00,000 யென்கள் அபராதமும் வழங்கப்பட்டனர்; இதற்கு முன்னதாக குறுகிய கால காவல் மற்றும் 10,000 யென்களுக்கும் குறைவான அபராதம் என்ற அளவில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது. சிவில் வழக்குகளை விட கிரிமினல் அவதூறு வழக்குகள் பரவலாகியுள்ளன. ஏனெனில் தண்டனைகள் அதிகமாக இருக்கும்.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்

பாகிஸ்தான் அவதூறு சிவில் அல்லது கிரிமினல் வழக்குகளை அனுமதிக்கும் அதேவேளையில், பங்களாதேஷில் அது கிரிமினல் குற்றமாகும்.

இரு நாடுகளிலும் கிரிமினல் அவதூறுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படலாம். பாகிஸ்தான் சமீபத்தில் ஒரு மசோதாவை முன்மொழிந்தது, இராணுவம் அல்லது நீதித்துறையை எந்த ஊடகத்தின் மூலமாகவும் "ஏளனம் செய்வது" அல்லது "அவதூறு" செய்வது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 1 லட்சம் பாகிஸ்தான் ரூபாய்  வரை அபராதம் விதிக்கப்படலாம்.

 

பங்களாதேஷின் ஐடி (IT) சட்டத்தின் கீழ், சில வகையான ஆன்லைன் அவதூறுகளுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், இது அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் அதனுடன் அதிகபட்சமாக 1 கோடி டாக்கா வரை அபராதம் விதிக்கப்படலாம்.

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை : https://m.timesofindia.com/india/what-are-the-defamation-laws-around-the-world/articleshow/98951867.cms