டாலர் vs யுவான்

உலகளாவிய டாலரின் மேலாதிக்கத்திற்கு சவால் செய்ய தீவிர முயற்சியில் ஈடுபடும் சீனா

டாலர் vs யுவான்

BRICS நாடுகள் தங்கள் நாணயங்களின் பின்னலாக - தனக்கான புதியதொரு சர்வதேச இருப்பு நாணயத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார். மறுபுறம், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட 5 நாடுகளின் தலா 2.2 பில்லியன் டாலர் பங்களிப்புடன் புதிய யுவான் இருப்பை உருவாக்கும் என்கிறது சீனா .

BRICS நாடுகளின் இந்த முயற்சிகள் பெரிதும் பலனளிக்கவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்:

1. இன்றும் சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனைகளுக்கு ஏற்ற நாணயமாக அமெரிக்க டாலரே பல நாடுகளால் கருதப்படுகிறது. 

2. SDR எனப்படும் உலக வங்கி(IMF)யின் சர்வதேச இருப்பு சொத்தில் டாலரின் பங்கு 40% சதமாகவும் அதே சமயம் யுவானின் பங்கு 12% மட்டுமே இருப்பதால் டாலரை மட்டுமே மற்ற தேசிய பணங்களுக்கு எளிதில் மாற்ற முடியும் எனும் நிலை நீடிக்கிறது. 

3  இந்தியாவின் RBI போன்ற அனைத்து நாட்டு மத்திய வங்கிகளும் டாலரையே வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான சிறந்த  ஊடகமாக கருதுகின்றன.

4. சில நாடுகளின் மத்திய வங்கிகள் ஆஸ்திரேலிய டாலர், ஸ்வீடிஷ் க்ரோனா, தென் கொரிய வோன் போன்ற புதிய இருப்பு நாணயங்களை வைக்க முன்வந்துள்ளன. ஆனால் யுவான் உலகளாவிய கையிருப்பில் வெறும் 2.9% மட்டுமே உள்ளது.    

5. யுவானின் வளர்ச்சி விகிதம் ஏமாற்றத்தை அளிக்கிறது.

மறுபுறம் டாலரின் ஆதிக்கமும் கேள்விக்குள்ளாகி வருகிறது. 

1. கடந்த இரண்டு தசாப்தங்களாக தொடர்ந்து சரிந்து வரும் டாலரின் பங்கு அந்நிய செலாவணி கையிருப்பில் 59%க்கும் கீழே சரிந்திருக்கிறது என்ற IMFன் கூற்று குறிப்பிடத்தக்க ஒன்று.

2.“டாலர் தற்போது அதிக ஆதிக்கம் செலுத்தவில்லை அது தனது முந்தைய ஆண்டுகளின் ஆதிக்கத்தை கூட தொடர முடியவில்லை”  

3. சந்தையில் புதிய சிறிய நாணயங்களின் நெகிழ்வான வளர்ச்சி, புதிய நிதியியல் தொழில்நுட்பங்களினால் சிறிய பொருளாதாரங்களின் நாணயங்களின் வர்த்தகம் மலிவாக இருப்பது, அமெரிக்க பத்திரங்களை விட லாபம் தரும் பத்திரங்களை சில நாடுகளின் மத்திய வங்கிகள் நாடுவது போன்ற காரணங்களும் டாலரின் ஆதிக்கத்திற்கு தடையாக மாறி வருகின்றன. 

என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.     

-  செந்தளம் செய்திப் பிரிவு