தொற்று நோய் போல பரவும் உலகளாவிய வங்கித் துறையின் வீழ்ச்சி

ஜீ நியூஸ்

தொற்று நோய் போல பரவும்  உலகளாவிய வங்கித் துறையின் வீழ்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி 24.04.2023 அன்று உள்நாட்டு வரன்முறையின் கீழ் மூடப்பட்டதோடு, டெபாசிட்டர்களைப் பாதுகாக்க சிக்கலில் உள்ள வங்கியின் அனைத்து வைப்புகளையும் சொத்துக்களையும் வாங்குவதற்கும் பெறுவதற்கும் ஜேபி மோர்கன் சேஸ் வங்கியுடன் ஒப்பந்தம் செய்தது.

"டெபாசிட்டரைப் பாதுகாக்க, ஓகையோ மாகாணம் கொலம்பசில் உள்ள ஜேபி மோர்கன் சேஸ் வங்கி, நேஷனல் அசோசியேஷன், உடன் கூட்டாக ஒப்பந்தம் செய்து, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் அனைத்து வைப்புகளையும் கணிசமான அனைத்து சொத்துக்களையும் கைப்பற்ற உள்ளோம்" என அமெரிக்காவின் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

ஜேபி மோர்கன் சேஸ் வங்கி, நேஷனல் அசோசியேஷன் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் டெபாசிட்கள் அனைத்திற்கும் ஏலத்தை சமர்ப்பித்தது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் எட்டு மாகாணங்களில் உள்ள ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் 84 அலுவலகங்கள் ஜேபி மோர்கன் சேஸ் வங்கி, நேஷனல் அசோசியேஷனின் கிளைகளாக திறக்கப்பட்டது. 

ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் அனைத்து டெபாசிட்டர்களும் ஜேபி மோர்கன் சேஸ் வங்கி, நேஷனல் அசோசியேஷன் ஆகியவற்றின் டெபாசிட்டர்களாக மாறுவார்கள், மேலும் அவர்களின் அனைத்து வைப்புத்தொகைகளுக்கும் முழு அணுகலைப் பெறுவார்கள்.

"டெபாசிட்கள் FDIC ஆல் தொடர்ந்து காப்பீடு செய்யப்படுவதோடு வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத்தொகை காப்பீட்டுத் தொகையை பொருந்தக்கூடிய வரம்புகள் வரை தக்கவைத்துக்கொள்வதற்காக தங்கள் வங்கி உறவை மாற்ற வேண்டியதில்லை.

ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் வாடிக்கையாளர்கள், ஜேபி மோர்கன் சேஸ் வங்கி, நேஷனல் அசோசியேஷனிடம் இருந்து அறிவிப்பைப் பெறும் வரை, மற்ற ஜேபி மோர்கன் சேஸ் வங்கி, நேஷனல் அசோசியேஷன், கிளைகள் தங்கள் கணக்குகளைச் செயல்படுத்த அனுமதிக்கும் வகையில் - கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்துவிட்டதாக அறிவிக்கும் வரை, தங்களுடைய தற்போதைய கிளையைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்" என்று FDIC கூறியுள்ளது.

ஏப்ரல் 13, 2023 நிலவரப்படி, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் மொத்த சொத்துக்கள் தோராயமாக 229.1 பில்லியன் டாலர்கள் மற்றும் மொத்த வைப்புத் தொகைய 103.9 பில்லியன் டாலர்கள். அனைத்து வைப்புத் தொகைகளையும் ஏற்றுக் கொள்வதுடன், ஜேபி மோர்கன் சேஸ் வங்கி ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் "கணிசமான" அனைத்து சொத்துக்களையும் வாங்க ஒப்புக்கொண்டது.

உலகின் தொழில்நுட்ப - ஸ்டார்ட்அப்களுக்கு கடன் வழங்குபவர்களில் மிக முக்கியமான சிலிக்கான் வேலி வங்கி, சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் மார்ச் 10 அன்று வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் வெளியேறிய பிறகு வீழ்ந்தது. அது தொற்றைப் போல ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி உட்பட பிற வங்கிகளுக்கும் பரவி அவையும் இழுத்து மூடப்பட்டன.

இது உலகளாவிய வங்கித் துறையின் வீழ்ச்சிக்கும் பொருளாதார அச்சுறுத்தலுக்கும் வித்திட்டுள்ளது.

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை : https://zeenews.india.com/international-business/another-us-bank-closed-jp-morgan-to-acquire-assets-of-first-republic-bank-2601453.html