முடங்கியுள்ள ரூபாய் நோட்டுகள் பற்றி ரஷ்யா

பயன்படுத்தவியலாத பில்லியன் டாலர் கணக்கிலான இந்திய ரூபாய் நோட்டுகள் தங்களிடம் முடங்கியிருப்பதாக ரஷ்யா கூறுகிறது

முடங்கியுள்ள ரூபாய் நோட்டுகள் பற்றி ரஷ்யா

சுருக்கம்

2022-23 நிதியாண்டின் முதல் பதினொரு மாதங்களில் ரஷ்யாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி என்பது 11.6% என்றளவிற்கு குறைந்துள்ளது; அதாவது 2.8 பில்லியன் டாலர்கள் அளவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது; அதே சமயம் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு செய்யப்படும் இறக்குமதியின் அளவு ஐந்து மடங்கு அதிகரித்து 41.56 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது என்று இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளின் விளைவாக ரஷ்யாவின் எரிபொருள் வியாபாரம் தடைபட்டு போனதாகல் தள்ளுபடி விலையில் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு அதிகளவில் எரிபொருள்களை இறக்குமதி செய்ததே, இறக்குமதி பன்மடங்கு அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும்.

இந்திய ரூபாயை கொடுத்து அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இந்திய நாட்டின் ரூபாய் நோட்டுகள் பில்லியன் டாலர் கணக்கில் சேர்ந்துவிட்டதோடு அதை தங்களால் பிற பரிவர்த்தனைக்காக பயன்படுத்த இயலவில்லை என்று ரஷ்ய நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவுடன் நடந்த உபரி வர்த்தகத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். கோவா மாநிலத்தில் ஷாங்கய் கூட்டுறவுக்கான அமைப்பு சார்பாக நடந்த கூட்டமொன்றில் லால்ரோவ் அவர்கள் “இது ஒரு சிக்கலாக உருவெடுத்துள்ளது” என்று கூறியுள்ளார். நாங்கள் இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தியாக வேண்டும். “பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் நாணயமாக இந்த ரூபாய் நோட்டுகள் மாற்றப்படும் போது மட்டுமே தங்களால் பயன்படுத்த முடியும் என்று கூறியதோடு இது பற்றி விவாதமும் இப்போது நடத்த வேண்டும்” என்றும் கூறினார்.

2022-23 நிதியாண்டின் முதல் பதினொரு மாதங்களில் ரஷ்யாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி என்பது 11.6% என்றளவிற்கு குறைந்துள்ளது. அதாவது 2.8 பில்லியன் டாலர்கள் அளவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது; அதே சமயம் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு செய்யப்படும் இறக்குமதியின் அளவு ஐந்து மடங்கு அதிகரித்து 41.56 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது என்று இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக மேற்கத்தியி நாடுகள் விதித்த பொருளாதார தடைகளின் விளைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதும் நின்றுபோனதாகல் தள்ளுபடி விலையில் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு அதிகளவில் எரிபொருள்களை இறக்குமதி செய்ததே இறக்குமதி பன்மடங்கு அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும்.

எண்ணெய் சந்தை நிலவரங்கள் தொடர்பான புள்ளிவிரங்களை ஆராய்ந்து வெளியிடும் வொல்டெக்சா லிமிடட் நிறுவனத்தின் கூற்றுப்படி ஏப்ரல் 2022 ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த எரிபொருளின் அளவை விட ஏப்ரல் 2023 செய்துள்ள இறக்குமதி என்பது ஆறு மடங்கு அதிகமாகவுள்ளன. அதாவது நாளொன்றிற்கு 1.68 மில்லியன் பேரல்கள் அளவிலான எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது.

சர்வேதேச அளவில் வங்கிகளுக்கிடையிலான நிதிய தொலைத்தொடர்பு அமைப்பு முறையான SWIFT –முறையிலிருந்து ரஷ்யாவை நீக்கியதோடு, ரஷ்ய வங்கிகள் மீது விதித்த தடைகளின் காரணமாக இந்தியா ரூபாயில் வர்த்தகம் செய்வதை ரஷ்யா துவக்கத்தில் வரவேற்றது.

ஆனால், ரஷ்யாவின் ரூபிள் நாணயத்தையும், இந்திய நாணயத்தையும் பயன்படுத்தி மட்டுமே இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை தொடர்வது என்று தீர்மானிக்கப்பட்டிருந்த திட்டம் போர் துவங்கியதும் ரூபிளின் மதிப்பில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கியது முதலிருந்தே ரஷ்யாவுடனான உறவை குறைத்துக் கொள்ளும் படி அமெரிக்காவின் பக்கமிருந்து இந்தியாவிற்கு அழுத்தம் தரப்பட்டது. ஆனால் இந்தியா அவ்வாறு செய்ய முன்வரவில்லை.

‘முடங்கியுள்ள பணம்’

ரஷ்யாவின் பொருளாதார முன்னேற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனத்திள் இயக்குநர் அலெக்சான்டர் க்நோபல் என்பவர் இந்தியாவுடனா வர்த்தகத்தில் சமமற்ற நிலை தொடர்வதால் ‘பில்லியன் டாலர்கள் கணக்கிலான இந்தியா ரூபாய்கள் எவ்வித பயனுமின்றி வங்கியில் முடங்கியுள்ளன’ என்று கூறினார். “பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை விட இறக்குமதி செய்வதென்பதே இந்தியா கடந்த கால வரலாறாக இருக்கிறது. இது நிலைமையை மென்மேலும் மோசமாக்குவதோடு மூன்றாம் உலக நாடுகளுடனான நிலுவைத் தொகைகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் குறைத்துவிடுகிறது”.

இந்தியாவிற்கு தேவையான ஆயுதங்கள், இரணுவத் தளவாடங்களை அதிகமாக வாங்கும் நாடாக ரஷ்யா விளங்குகிறது. இருந்தபோதிலும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மீறாத வகையில் நாணயப் பரிவர்த்தனைக்கான ஒழுங்குமுறை உருவாக்கப்பட முடியாததால் தொடர்ச்சியாக ஆயுதங்களை இறக்குமதி செய்வதென்பது தடைபட்டுள்ளது. 

ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ள ஆயுதங்களுக்கு கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பாக்கி பணம் கடந்த ஓராண்டுகளாக செலுத்தப்பட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டாலர்களாக கொடுக்க முயன்றால் இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்பதே இதற்கு காரணம். அதே சமயத்தில் ரஷ்யாவும் இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்வதற்கு தயக்கம் காட்டி வருகிறது.

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்திய நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்ஹாம், ரூபிள் மற்றும் ரூபாய் நோட்டுகளை கொடுத்து நிலுவைத் தொகைகைளை சரிகட்ட முயன்று வருகிறார்கள். ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை 60 டாலருக்கும் குறைவாக எவர் வேண்டுமானாலும் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்துக் கொள்ளலாம் என்று ஜி7 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளும் விதித்துள்ள சர்வதேச தடைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஷெர்பாங்க் PJSC, VTB வங்கி PJSC உள்ளிட்ட ரஷ்ய வங்கிகளில் பிரத்யேகமாக தொலைதூர நாடுகளுடனான பரிவர்த்தனைகளை கையாளுவதற்காக உருவாக்கப்படும் ‘வோஷ்ட்ராக் கணக்குகள்’ இந்திய வங்கிகள் மூலமாக துவங்கப்பட்டு ரூபாயில் வர்த்தகம் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதற்கு வழியமைத்துத் தரப்படுகிறது. 

இந்தியாவில் இறக்குமதி செய்யுப்படும் பொருளுக்கான பணத்தை தங்கள் நாட்டிற்கு மீட்டெடுத்து வருவதில் ரஷ்ய நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களே நாணயத் தடை என்று ரஷ்யாவின் மத்திய வங்கியின் ஆளுநர் எல்விரா நபியுள்ளினா கடந்த ஏப்ரல் 28 அன்று விளக்கமளித்தார்.

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://m.economictimes.com/news/international/world-news/russia-says-it-has-billions-of-indian-rupees-that-it-cant-use/articleshow/100016953.cms