போரும் இயற்கை எரிவாயுக்களும்

காஸா கடற்கரைக்கு அருகாமையில் காணப்படும் எரிவாயுக் கிடங்குகளை கைப்பற்றுவதற்கான இஸ்ரேலின் படையெடுப்பு

போரும் இயற்கை எரிவாயுக்களும்

Disclaimer: செந்தளம் வலைதள அரசியல் நிலைப்பாட்டில் இருந்து விமர்சனத்துடன் வாசிக்குமாறு கோருகிறோம்

டிசம்பர் 2008 இல், இஸ்ரேல் காசாவை "காஸ்ட் லீட்" என்ற இராணுவ நடவடிக்கை மூலம் தாக்கியது. இந்த நடவடிக்கை மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 

ஆசிரியர் குறிப்பும் புதியச் சேர்க்கையும்

சனிக்கிழமை, அக்டோபர் 7, 2023 அன்று, ஹமாஸ் "அல்-அக்ஸா ஸ்டார்ம்" என்ற புதிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த தாக்குதல் நடவடிக்கையின் தலைவராக ஹமாஸின் இராணுவப் பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப் வழிநடத்தினார். அதே நாளில், இஸ்ரேல் போருக்கு தயாராக இருப்பதாக நெதன்யாகு கூறினார்.

"ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம்" என்பது ஹமாஸின் உண்மையான தாக்குதல் அல்ல, மாறாக இஸ்ரேலால் திட்டமிடப்பட்ட போலியான தாக்குதலாகும். உளவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய டாக்டர் பிலிப் ஜிரால்டி கூறியது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. காசாவில் என்ன நடக்கிறது என்பதை இஸ்ரேல் முன்கூட்டியே அறிந்திருக்க கூடும், ஏனென்றால் அவர்களிடம் உளவாளிகளும் ஒட்டுக் கேட்கும் சாதனங்களும் நிரம்ப இருக்கின்றன. பதில் தாக்குதல் நடவடிக்கை எனும் பெயரில் காசாவை அழிக்க ஹமாஸ் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் விரும்பியதாகவும் அவர் கூறுகிறார். (பிலிப் ஜிரால்டி, அக்டோபர் 8, 2023)

நெதன்யாகு ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து நிதியுதவி செய்ததற்கான ஆதாரம்:

ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரித்து நிதியுதவி செய்ததை நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார். பாலஸ்தீனியர்கள் தங்களுக்கென்று சொந்த நாட்டை உருவாக்குவதைத் தடுப்பதற்காகவே அவர் இதைச் செய்தார். காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை தனித்தனியாக பிரிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. (பெஞ்சமின் நெதன்யாகு, மார்ச் 2019, ஹாரெட்ஸ், அக்டோபர் 9, 2023 இல் அவரது கட்சியின் கூட்டத்தில் பேசியது)

இஸ்ரேல் ஹமாஸை ஒரு கூட்டாளியாகக் கருதியதால் பாலஸ்தீனிய அதிகார சபையை புறக்கணித்தது. இஸ்ரேல் எகிப்து அரசின் மூலமாக ஹமாஸிடம் பேச்சு வார்த்தை நடத்தி கத்தார் நாட்டிடமிருந்து கூட நிதி பெறுவதற்கு அனுமதித்துள்ளது. பாலஸ்தீனிய அதிகார சபையை பலவீனப்படுத்தவும், பாலஸ்தீனியர்கள் தங்களுக்கென்று ஒரு அரசை உருவாக்குவதைத் தடுப்பதற்காகவே இஸ்ரேல் இதைச் செய்தது.

2023 அக்டோபர் 7 அன்று நெதன்யாகு காசா மீது சட்டவிரோதமாக அறிவித்துள்ள போர் பிரகடனம் என்பது 2008-2009 இல் காசா மீது இஸ்ரேல் நடத்திய "காஸ்ட் லீட்" தாக்குதலின் ஒரு தொடர்ச்சியாகும். இஸ்ரேல் இராணுவத்துடன் காஸாவைக் கைப்பற்றுவதும், பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவதுமே இந்தத் காஸ்ட் லீட் தாக்குதலின் முக்கிய நோக்கமாக இருந்தது.

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இன அழிப்பு நடவடிக்கையில் மூலம் கொன்றொழிப்பதற்கு இஸ்ரேலிலுள்ள சில நிதியாதிக்க சக்திகள் விரும்புகிறார்கள் என்பதை நான் கூறியாக வேண்டும். காசா அருகே கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய் மற்றம் எரிவாயு வளங்களை கொள்ளையடிப்பதே இந்த நிதி மூலதன கும்பல்களின் நோக்கமாக உள்ளது. இந்த எரிவாயு வளங்களின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள் மதிப்புடையது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. (டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், அக்டோபர் 8, 2023)

அகண்ட இஸ்ரேல் என்ற பெயரில் மிதமிஞ்சிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கைப்பற்றுவதற்கான இஸ்ரேலின் திட்டமும் அமெரிக்காவின் அகண்ட மத்திய கிழக்கு திட்டமும் ஒரு புள்ளியில் இணைகிறது. எகிப்தின் எல்லை முதல் லெபனான் வரை உள்ள அனைத்து பிரதேசங்களையும் குறிப்பாக அதில் உள்ள கடற்கரையை ஒட்டிய எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதே அகண்ட இஸ்ரேல் திட்டத்தின் அஜெண்டாவாக உள்ளது. 

பின்னோட்டம்: காஸ்ட் லீட் நடவடிக்கை(2008-2009)

2008ல் காஸ்ட் லீட் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் காஸாவை இஸ்ரேல் தாக்கியது. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு காஸா அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி  இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்திற்கு சொந்தமான எரிவாயு வயல்களை இஸ்ரேல் கைப்பற்றுவதே இந்த தாக்குதலின் உண்மையான நோக்கமாகும்.

2010 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு அருகில் உள்ள மத்தியத்தரைக் கடற்பகுதியில் ஒரு பெரிய எரிவாயு வயலை இஸ்ரேல் கண்டுபிடித்தது. எரிவாயு வயல் மிகவும் பெரியதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்தோடு அதிகம் ஆராயப்படாத கடல் பகுதியில் இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கடலின் இந்த பகுதி லெவன்ட் பேசின் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது மத்தியதரைக் கடலின் கிழக்கில் சுமார் 83,000 சதுர கிலோமீட்டர் அளவு கொண்டதாக உள்ளது. 

லெவியதன் எரிவாயு வயல் இருக்கும் அதே இடத்தில்தான் டாமர் எரிவாயு வயலும் உள்ளது. இது 2009 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்ரேலும் சில அமெரிக்க நிறுவனங்களும் இந்த எரிவாயு வயல்களில் இருந்து பெருமளவில் எரிசக்தியையும், கொள்ளை இலாபத்தையும் பெற முடியும் என அனுமானிக்கப்பட்டது. (பார்க்க Felicity Arbuthnot, Israel: Gas, Oil and Trouble in the Levant, Global Research, December 30, 2013).

 காஸாவிலுள்ள எரிவாயு வயல்களெல்லாம் அதிகளவிலான எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை கொண்ட இந்த பெரிய வயலின் ஒரு அங்கமாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதி Levant மதிப்பீட்டு பகுதி என்று அழைக்கப்படுகிறது.

பாலஸ்தீனத்திற்கு சொந்தமானவை உட்பட அடுத்தடுத்து இருக்கும் எரிவாயு வயல்களை இஸ்ரேல் கையகப்படுத்த முயல்கிறது. இஸ்ரேல் இந்த பகுதியில் அனைத்து எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர முனைகிறது.

எகிப்து முதல் சிரியா வரையிலான கடலின் கரையோரத்தில் எரிவாயு மற்றும் எண்ணெய் வயல்கள் அதிகம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

(மைக்கேல் சோசுடோவ்ஸ்கி, குளோபல் ரிசர்ச், அக்டோபர் 8, 2023, அக்டோபர் 21, 2023.)

போரும் இயற்கை எரிவாயுக்களும்: காஸா கடற்கரைக்கு அருகாமையில் காணப்படும் எரிவாயுக் கிடங்குகளை கைப்பற்றுவதற்கான இஸ்ரேலின் படையெடுப்பு

காசா அருகே உள்ள கடலுக்கு அடியில் காணப்படும் எரிவாயு வளங்களை கைப்பற்றும் நோக்கத்துடன்தான் 2008ல் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

மத்தியத் தரைக்கடலுக்கு அடியில் எரிவாயு வளங்கள் அதிகமாக இருப்பதால் இஸ்ரேல் காஸாவைக் கைப்பற்ற விரும்புகிறது. இஸ்ரேல் இதை  2000 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்திருந்தது.

பாலஸ்தீனத்திற்கு அருகில் உள்ள கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்கும் உரிமையை BG Group என்ற பிரிட்டிஷ் கேஸ் நிறுவனமும் CCC என்ற கிரீஸ் நாட்டு நிறுவனமும் பெற்றன. அவை 1999 இல் பாலஸ்தீனிய அதிகார சபையுடன் ஒரு ஒப்பந்தமும் செய்திருந்தன. இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு தொடரும் வரை போடப்பட்டிருந்தது.

பாலஸ்தீன கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள எரிவாயு வயலகளை மூன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் கைபற்றி வைத்துள்ளனர். பிரித்தானிய நிறுவனமான பிஜி குழுமம் இதில் பெரும்பகுதியை (60%) கைப்பற்றியுள்ளது. கிரீஸ் நாட்டு நிறுவனமான CCC (30%) குறைவாக எரிவாயு கிடங்கில் உரிமை பெற்றிருந்தது. பாலஸ்தீனிய அதிகாரசபையோ அதில் மிகக்குறைந்த பகுதியை (10%) தனது உரிமையின்கீழ் வைத்திருந்தது. (ஹாரெட்ஸ், அக்டோபர் 21, 2007)

பாலஸ்தீனிய அதிகார சபை, பிரிட்டிஷ் நிறுவனமான பிஜி குரூப் மற்றும் கிரீஸ் நாட்டு நிறுவனமான சிசிசி ஆகியவை எரிவாயு வயலை மேம்படுத்துவதற்கும் எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கு குழாய் அமைப்பதற்கும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்திருந்தன. (மிடில் ஈஸ்ட் எகனாமிக் டைஜஸ்ட், ஜனவரி 5, 2001)

பிரிட்டிஷ் நிறுவனமான பிஜி குரூப் 2000-ம் ஆண்டு  வாக்கில் மத்தியத் தரைக் கடலில் இரண்டு எண்ணெய் கிணறுகளை தோண்டியிருந்தது. அப்போதே அங்கு நிறைய எரிவாயு இருப்பதாக கண்டுபிடித்தனர். எரிவாயு வளத்தின் மதிப்பு சுமார் 4 பில்லியன் டாலர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். எனினும், அவர்கள் சொன்னதை விட மேலதிகமான அளவிற்கு எரிவாயு இருப்பதற்கே வாய்ப்புள்ளது.

                  வரைபடம் 1                                  வரைபடம் 2

எரிவாயு வயல்கள் யாருக்குச் சொந்தம்

காஸாவிற்கு அருகில் உள்ள கடலில் காணப்படும் எரிவாயு யாருக்கு சொந்தமானது என்பது மிகவும் முக்கியமான பிரிச்சனையாகும். சட்டப்படி பார்த்தால் எரிவாயு பாலஸ்தீனத்திற்கே சொந்தமானதாக இருக்க முடியும்.

பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத்தின் மரணம், ஹமாஸ் கட்சி அதிகார சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுதல், பாலஸ்தீன அதிகார சபையின் சரிவு போன்றவற்றை இஸ்ரேல் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி காஸா அருகே மத்தியத் தரைக் கடலில் இருந்த எரிவாயு கிடங்கை இஸ்ரேல் கையகப்படுத்தியது.

காசா அதிகார சபையை வழிநடத்தும் ஹமாஸ் கட்சியை புறக்கணித்துவிட்டு பிரிட்டிஷ் நிறுவனமான பிஜி குரூப், இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையை தொடங்கியிருந்தது. இந்த எரிவாயு ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் அரசாங்கத்தின் எந்த கருத்தையும் கேட்பது மட்டுமல்லாது அவர்களின் எந்த நலன்களையும் ஏற்கவும் தயாராகயில்லை.

2001ல் இஸ்ரேலிய தலைவர் ஏரியல் ஷரோன் பிரதமரானார்.இது எல்லாவற்றையும் மாற்றியது. காசா அருகே, மத்தியத் தரை கடலில் உள்ள எரிவாயு வளங்களின் மீதான பாலஸ்தீனத்தின் உரிமையை இஸ்ரேல் கைபற்றத் துடித்தது. அவர்கள் இஸ்ரேலின் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றனர். பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் அரசு எரிவாயு உரிமையை காசு கொடுத்து வாங்கப்போவதில்லை என்று ஷரோன் தெளிவாக கூறினார். அவ்வகையில் அங்குள்ள எரிவாயு வளங்கள் இஸ்ரேலுக்கு மட்டுமே உரிமையுடையது என்பதே இதன் அர்த்தமாகும்.

இஸ்ரேலுக்குத் தேவையான எரிவாயுவை உற்பத்தி செய்து விற்பதற்கு பிரிட்டிஷ் நிறுவனமான BG குழுமத்தை அனுமதிக்கும் வகையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை 2003 இல் இஸ்ரேலிய தலைவர் ஏரியல் ஷரோன் இரத்து செய்தார். (தி இன்டிபென்டன்ட், ஆகஸ்ட் 19, 2003)

2006 தேர்தலில் ஹமாஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாலஸ்தீன அதிகாரச் சபையின் வீழ்ச்சிக்கு பாதையைமைத்தாற் போல அமைந்துவிட்டது. பாலஸ்தீன அதிகார சபை மேற்கு கரையை மட்டுமே கட்டுப்படுத்தியது, காசாவை அல்ல. முகமது அப்பாஸ் பாலஸ்தீனிய அதிகார சபையின் தலைவராக இருந்தார், ஆனால் அவரால் உண்மையில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

பிரித்தானிய நிறுவனமான பிஜி குரூப் 2006ல் காசாவிற்கு அருகில் உள்ள மத்தியத் தரைக் கடலில் இருந்து எகிப்து வரை எரிவாயு உற்பத்தியை துவங்குவதற்கான திட்டத்தை அறிவித்தது. ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் அதை செய்ய விடாமல் தடுத்தார். எகிப்து நாடு எரிவாயு பெறுவதை விரும்பாத இஸ்ரேலுக்கு உதவுவதற்காகவே அவர் இதைச் செய்தார். (டைம்ஸ், மே 23, 2007)

2007ல் பாலஸ்தீன அதிகாரசபையிடம் இருந்து எரிவாயுவை வாங்குவதற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தம் $4 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. இதன் மூலம் பாலஸ்தீனியர்கள் $1 பில்லியன் டாலர்கள் பெறுவார்கள் என்றும் மீதமுள்ள லாபம் இஸ்ரேலுக்குச் செல்லும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் இந்த யோசனையை முன்வைத்தார்.

“எரிவாயுவில் இருந்து கிடைக்கும் பணத்தை பாலஸ்தீனத்துடன் பகிர்ந்து கொள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் விரும்பவில்லை. பிரிட்டிஷ் நிறுவனமான பிஜி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்ய இஸ்ரேல் ஒரு குழுவை உருவாக்கியது. அவர்கள் ஹமாஸ் கட்சியுடனோ அல்லது பாலஸ்தீன அதிகார அமைப்புடனோ கலந்து பேசவில்லை. பாலஸ்தீனியர்களுக்கு சரக்குளும் சேவைகளும் மட்டுமே கிடைக்கும், பணம் தரப்போவதில்லை என்று அவர்கள் கூறினார்கள். ஹமாஸ் அரசுக்கு எந்தப் பணமும் செல்லாது என்றும் அவர்கள் உறுதியாக கூறினர்.” (டைம்ஸ், மே 23, 2007)

1999 ஆம் ஆண்டு BG குழுமத்திற்கும் யாசர் அராபத்தின் கீழிருந்த பாலஸ்தீனிய அதிகாரசபைக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை ரத்து செய்வதே இதன் நோக்கமாக இருந்தது.

2007 ஆம் ஆண்டு காசாவிற்கு அருகில் உள்ள கடலில் இருந்து எரிவாயுவை இஸ்ரேலுக்கு விற்க பிரிட்டிஷ் நிறுவனமான பிஜி குரூப் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அவர்கள் கடலுக்கு அடியில் உள்ள குழாயைப் பயன்படுத்தி இஸ்ரேலிய துறைமுகமான அஷ்கெலோனுக்கு எரிவாயுவை அனுப்ப திட்டமிட்டிருந்தனர். இதன் பொருள் எரிவாயு வளங்களை மட்டுமல்லாது அதன் விலையையும் இஸ்ரேலே கட்டுப்படுத்தும் என்பதாகும்.

ஒப்பந்தம் முடக்கப்பட்டது. பேச்சு வார்த்தைகள் முழுமையாக நிறைவடையாமல் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டது:

கிலாட் எர்டான் என்ற பாராளுமன்ற உறுப்பினர் 2006 இல் இவ்வாறு கூறினார்: “மொசாத் உளவு அமைப்பின் தலைவராக மீர் தாகன் என்பவர் பாலஸ்தீனியர்களிடம் எரிவாயுவை வாங்கக்கூடாது. நாம் கொடுக்கும் பணத்தை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்கள் பயன்படுத்தக்கூடும். அப்போது துணை பிரதமராக இருந்த எஹுட் ஓல்மெர்ட்  என்பவர் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முனைந்தார். (எர்டான் பாராளுமன்றத்தில் "ஹமாஸிடம் பணம் கொடுத்து எரிவாயு பெறுவதற்கான ஓல்மெர்ட்டின் திட்டம்" பற்றி பேசினார், மார்ச் 1, 2006. காசாவிற்கு அருகில் உள்ள மத்தியத் தரைக் கடல் பகுதியிலிருந்து எடுக்கப்படும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் எரிவாயுவை வாங்குவது எவ்வாறு இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஒரு ஓய்வுபெற்ற முன்னாள் ஜெனரல் மோஷே யாலோன் எழுதிய கட்டுரையில் இருந்து இந்த மேற்கோள் தரப்பட்டுள்ளது. அக்டோபர் 2007 இல் பொது விவகாரங்களுக்கான ஜெருசலேம் ஆய்வு மையத்தால் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது)

பாலஸ்தீனியர்கள் காஸாவிலிருந்து எரிவாயு மூலம் பணம் சம்பாதிப்பதை இஸ்ரேல் விரும்பவில்லை. இங்கிலாந்து நிறுவனமான பிஜி குழுமத்திடமிருந்து நேரடியாக வாங்க முயன்றனர். ஆனால் பிஜி குரூப் நிறுவனம் 2007ல் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு 2008ல் அவர்களது அலுவலகத்தை மூடிவிட்டே சென்றுவிட்டனர்.

பாலஸ்தீனத்தை தாக்குவதற்கான திட்டம் திரைமறைவில் தயாராகிக் கொண்டிருந்தது

ராணுவத்தில் உள்ள சிலர் கூறியதாவது: 2008ம் ஆண்டு ஜூன் மாதம் காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம் தீட்டத் தொடங்கியது. அதை "ஆபரேஷன் காஸ்ட் லீட்" என்று அழைத்தனர்.

டிசம்பர் 27, 2008 அன்று ஒரு கட்டுரை கூறியது இதுதான்: இராணுவத் தலைவரான எஹுட் பராக், காசா மீதான தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு [ஜூன் அல்லது ஜூன் மாதத்திற்கு முன்] இராணுவத்தை தயார்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில்தான் ஹமாஸுடனான சமாதானப் பேச்சுவார்த்தையையும் இஸ்ரேல் துவங்கியிருந்தது. ஹமாஸ் காஸாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். (கட்டுரை ஹாரெட்ஸில் பராக் ரவிட் எழுதியது)

அதே மாதத்தில், காசாவின் இயற்கை எரிவாயுவை வாங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், இஸ்ரேலிய அதிகாரிகள் பிரிட்டிஷ் எரிவாயு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர்:

நிதி அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் யாரோம் அரியவ் மற்றும் தேசிய உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் ஹெஸி குக்லர் இருவரும் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்குவதற்கான இஸ்ரேலின் விருப்பத்தை BG குழுமத்திற்கு தெரிவிக்க ஒப்புக்கொண்டனர்.

இஸ்ரேலின் கோரிக்கைக்கு BG இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை, ஆனால் நிறுவன நிர்வாகிகள் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சில வாரங்களில் இஸ்ரேலுக்கு வருவார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. (Globes online- இஸ்ரேலின் வணிக அரங்கம் பகுதியில், ஜூன் 23, 2008)

பிரிட்டிஷ் காஸ் (பிஜி குரூப்) உடனான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கான முடிவு, காலவரிசைப்படி, ஜூன் மாதம் தொடங்கப்பட்ட காசா மீதான படையெடுப்பின் திட்டமிடலுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. படையெடுப்பிற்கு முன்னதாகவே BG குழுமத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு இஸ்ரேல் வேகமாக செயல்படுவதாகத் தோன்றியது, இதுவும் ஏற்கனவே பேசியபடி திட்டத்தில் உள்ளவைதான்.

மேலும், ஒரு இராணுவப் படையெடுப்பு திரைமறைவில் நிகழ்ந்து வருவதை தெரிந்தேதான் பிரிட்டிஷ் காஸ்(BG) உடனான இந்த பேச்சுவார்த்தைகள் எஹுட் ஓல்மெர்ட் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. "போருக்குப் பிறகு" அரசியல் ரீதியாகவும்,பிராந்திய அளவிலும் காசா பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் புதிய எல்லைப் பிரிவினை உருவாக்குவதை பற்றியும்கூட எல்லாக் கோணங்களிலும் இஸ்ரேல் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டது.

உண்மையில், டிசம்பர் 27 அன்று குண்டுவெடிப்புகள் தொடங்குவதற்கு 2-3 மாதங்களுக்கு முன்பு, பிரிட்டிஷ் எரிவாயு நிறுவனத்திற்கும், இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் அக்டோபர் 2008 வாக்கிலேயே நடந்து கொண்டிருந்தன.

நவம்பர் 2008 இல், இஸ்ரேலிய நிதி அமைச்சகம் மற்றும் தேசிய உள்கட்டமைப்பு அமைச்சகம், காசாவில் உள்ள BG நிறுவனத்திடமிருந்து இயற்கை எரிவாயுவை வாங்குவது குறித்து பிரிட்டிஷ் எரிவாயு நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் (IEC) க்கு அறிவுறுத்தியது. (குளோப்ஸ், நவம்பர் 13, 2008)

நிதி அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் யாரோம் அரியவ் மற்றும் தேசிய உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் ஹெஸி குக்லர் ஆகியோர் சமீபத்தில் IEC நிறுவனத்தின் CEO அமோஸ் லாஸ்கருக்கு கடிதம் எழுதி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்த ஒப்பந்த நெறிமுறைகள் தொடர்பான முன்மொழிவுக்கு ஏற்ப பேச்சுவார்த்தைகளை ஒப்புக்கொண்டபடி செயல்படுத்த அனுமதியளித்திருக்கும் அரசாங்கத்தின் முடிவை அவருக்குத் தெரிவித்தனர்.

தலைவர் மோதி ப்ரைட்மேன் தலைமையிலான IEC குழு, சில வாரங்களுக்கு முன்பு ஒப்பந்த நெறிமுறைகள் தொடர்பான முன்மொழிகளுக்கு ஒப்புதல் அளித்தது. ஒரு டெண்டரில் இருந்து விலக்கு அளிக்க குழு ஒப்புதல் அளித்தவுடன் பிஜி குழுமத்துடனான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. (குளோப்ஸ் நவம்பர் 13, 2008)

காசாவும்,  எரிசக்தியை மையமாகக் கொண்டு நிகழும் புவிசார் அரசியலும்

சர்வதேச சட்டத்தை மீறி எரிவாயு வயல்கள் மீதான சர்வ அதிகாரங்களும் இஸ்ரேலுக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டே காசாவின் இராணுவ ஆக்கிரமிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

படையெடுப்பிற்கு பிறகு நடக்கப்போவது என்ன?

பாலஸ்தீனத்தினத்திற்கு சொந்தமான இயற்கை எரிவாயுவை வைத்து இஸ்ரேல் என்ன செய்யவிருக்கிறது?

இஸ்ரேலிய "அமைதிப் படைகளை" போருக்கு பிறகு காசாவில் நிலைநிறுத்துவதன் மூலம் ஒரு புதிய எல்லைக் கோடுகளை உருவாக்கப்படுமா?

இஸ்ரேலுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காசா கடற்கரை முழுவதையும் இராணுவமயமாக்குவதற்கா?

பாலஸ்தீனிய எரிவாயு வயல்களை அப்பட்டமாக பறிமுதல் செய்வதோடு, காசாவின் கடல் பகுதிகளில் இஸ்ரேலின் இறையாண்மையை ஒருதலைப்பட்சமாக பிரகடனம் செய்வதற்கா?

மேற்சொன்னதெல்லாம் நடந்தால், காசா எரிவாயு வயல்களையும், இஸ்ரேலின் எரிவாயு வயல்களையும் ஒருங்கிணைத்துவிட முடியும். (மேலே வரைபடம் 1ஐப் பார்க்கவும்)

இஸ்ரேல் பல்வேறு நிலைகளில் கடல்சார் கட்டமைப்பு வசதிகளின் வலையமைப்பைக் கொண்டுள்ளதோடு அவற்றை தனது எரிசக்தி போக்குவரத்து வழித்தடத்துடனும் இணைத்துள்ளது. இது செங்கடலில் உள்ள ஈலாட் துறைமுகத்தில் உள்ள எண்ணெய் குழாய் முனையத்திலிருந்து அஷ்கெலோனில் உள்ள துறைமுகம் மற்றும் குழாய் முனையத்திற்கும், பின்னர் வடக்கே ஹைஃபாவிற்கும் செல்வதோடு இறுதியாக திட்ட நிலையில் உள்ள இஸ்ரேலிய-துருக்கிய பைப்லைனுடன் இணைக்கப்பட்டு துருக்கிய துறைமுகமான செயானை அடையும். 

 

வரைபடம் 3

“காஸ்பியன் கடலில் இருந்து அஜர்பைஜான், ஜார்ஜியா மற்றும் துருக்கி வழியாக செயான் துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டு செல்லும் BTC பைப்லைனையும், செங்கடலில் உள்ள ஈலாட் துறைமுகத்திலிருந்து மத்தியதரைக் கடலில் உள்ள அஷ்கெலோன் துறைமுகத்திற்கு செல்லும் டிரான்ஸ்-இஸ்ரேல் பைப்லைனையும் இணைப்பது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.”  (பார்க்க Michel Chossudovsky, The War on Lebanon and the Battle for Oil, Global Research, July 23, 2006)

(மைக்கேல் சோசுடோவ்ஸ்)

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.globalresearch.ca/war-and-natural-gas-the-israeli-invasion-and-gaza-s-offshore-gas-fields/11680