அமெரிக்கா ஐரோப்பிய - சீன உறவுகளை பிளவுபடுத்த முயன்றாலும் பல்துருவ உலகமே நீடித்து நிற்கும் - ஜெர்மனி

தமிழில் : சேரன்

அமெரிக்கா ஐரோப்பிய - சீன உறவுகளை  பிளவுபடுத்த முயன்றாலும் பல்துருவ உலகமே நீடித்து நிற்கும் - ஜெர்மனி

இச்செய்தி சீனாவின் பல்துருவம் அமைதிக்கானது என்ற தவறான பார்வையை வைத்தாலும் சீனா - ரசியாவிடம் இருந்து ஐரோப்பாவை துண்டிக்கும் அமெரிக்காவின் நோக்கம் வெல்லாது எனும் ஜெர்மனியின் பார்வையையும் அமெரிக்காவுடனான தன் முரண்பாடுகள் கூர்மையடைவதை பேசுவதாலும் இத்தளத்தில் வெளியிடுகிறோம்.

- செந்தளம் செய்திப் பிரிவு

 

சிறிது நாட்களுக்கு முன்பாக, சடோஜே சைடுங் நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த மன்றம்   ஒன்றில் பொருளாதார மூலயுத்தி பற்றி சொற்பொழிவாற்றிய ஜெர்மன் அதிபர் ஓலாப் சோஸ், ஜெர்மனியானது  அதிகரித்து வரும் " பன்முனை துருவ உலகை" நோக்கி தன்னை  ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கான  தயாரிப்பினை செய்து கொள்ள இதுவே சரியான நேரம் என்று அதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஐரோப்பாவும் வட  அமெரிக்காவும் கோவிட்-19 மற்றும் உக்ரைன் நெருக்கடி ஆகியவற்றை தொடர்ந்து  மிக எளிதாக நம்பகமானதொரு பொருளாதார வளர்ச்சிக்கு திரும்பிவிடமுடியும் என்ற  கூற்றுக்கு எதிராக பேசிய அவர், ”வளர்ச்சி பெற்று வரும் ஆசியாவின் வலிமையானது சர்வதேச நிலவமைப்பின் அடிப்படையை மாற்றிவிட்டது. இதிலிருந்து வட அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் கடந்த நாட்களில் அனுபவித்து வந்த நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர் வேலைவாய்ப்பு விகிதங்களுக்கு இனி திரும்பிச் செல்ல போவதில்லை” என்றார். 

இவற்றுக்கிடையில் மேற்குலகின் செல்வமானது கணிசமான அளவு வளரும் நாடுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்பட்டதிலிருந்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பது  மேற்கின் மறைமுக ஒப்புதலேயாகும்.  "அந்த பழைய நல்ல நாட்கள்" எல்லாம் வட அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் பணக்காரர்களாகவும் ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, லத்தின் அமெரிக்கா கரீபியன் நாடுகள் ஏழ்மையிலும் அடிமைப்பட்டும் கிடந்தபொழுது இருந்ததாகும்.

அந்த "பழைய  நல்ல நாட்களின்" பொருளாதாய அடித்தளமாக இருந்தது எது? அவ்வாறு இருந்தவைகள் காலனியாதிக்கம், அட்லாண்டிக் கடற்கடந்த அடிமைகள் வர்த்தகம், அமெரிக்க பூர்வகுடி மக்களை இனஅழிப்பு செய்தது, ஆப்பிரிக்காவின் மிகக் கொடூரமான வளர்ச்சி தடுப்பு, அபினிப் போர்கள் மற்றும் இன்னும் பல! 16ஆம், 17ஆம்,18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் விரிவாதிக்கமும் முறைப்படுத்தப்பட்ட கொள்ளையும் ஒர் கையடக்க அளவுள்ள மேற்கத்திய முதலாளித்துவ சக்திகள் செலுத்திய ஆதிக்கம் மோசமான சமனிலையற்ற உலகை உருவாக்கியது. 

இந்த வசதியான ஏற்பாடுதான் அக்டோபர் புரட்சியால் தடங்கல் செய்யப்பட்டது. அதுதான், புதிய  உலக வரலாற்று சகாப்தத்தின் துவக்கதிற்கு குறியீடாக இருந்தது. சோவியத் ஒன்றியம், சீனா, கொரியா, வியட்நாம், கிழக்கு ஐரோப்பா மற்றும் கியூபா ஆகியவற்றில் சோசலிசம் கட்டியமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான காலனியாதிக்கத்திற்கு எதிரான வலியமையானதோர் விடுதலை அலை போன்றவை உலக அரசியலில் ஆழமானதொரு மாறுதலை கொண்டுவந்தது.

ஆனால், எங்கெல்லாம் காலனியாட்சி துடைத்தெறியப்பட்டதோ அங்கெல்லாம் சோசலிசமுகாமை  வலிமையிழக்கச் செய்ய, புதியகாலனியாதிக்கத்தை  திணிக்க அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார்கள். இதுதான் பனிப்போருக்கான கொரிய போர், வியட்நாம் போர்; இந்தோனேசியாவிலிருந்து கிரினாடா, சிலி வரை; தென்னாபிரிக்கா, ஜிம்பாபவே உள்ளிட்ட இன்னும் வேறு எங்கெல்லாமும் இனவெறி அரசுக்கான ஆதரவுகள்  யாவும் மேற்கண்ட சூழ்நிலைகளிலிருந்துதான் எழுந்ததாகும்.

பலகட்டங்கள் கொண்ட  நேட்டோ விரிவாக்கத்துடனான யுகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா போர்கள் யாவும் சோவியத் சகாப்தத்திற்கு பிந்தைய அமெரிக்காவின் மேலாதிக்கத்தை விரிவாக்கம் செய்ய, ஒன்றுதிரட்டும் அமெரிக்காவின் முன்னதாக இருந்த, " புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான " திட்டத் தயாரிப்பேயாகும். ஆனால், சீனா மற்றும் இதர நாடுகள் குறிப்பாக தெற்கில் ஐக்கிய நாடுகள் சாசனங்களின் கோட்பாடுகளின்  அடிப்படையில் பன்முனைத்துருவ பலதரப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றை அடையும் பொருட்டு  பன்முனை பாதைகளின் வழியே நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த மூலயுக்தியானது நீடித்த அமைதிக்கும் உலகெங்கும் இறையாண்மையின் மேம்பாட்டை நோக்கி செல்லும்படியாக செய்தது. அதன் அறிகுறிகள் உண்மையில் போதுமான அளவு தெளிவானதாகும். இராணுவ செலவினங்களில் இராணுவ தளங்கள், ஆக்கிரமிப்பு போர்கள், ஆட்சி மாற்ற நடவடிக்கைகள், ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகள், பொருளாதார ரீதியான மிரட்டல் ஆகியவற்றால் மிக நீண்ட காலமாக தலைமை பாத்திரத்தை அமெரிக்கா கொண்டிருக்கும்வேளையில், சீனா இருதரப்புக்கும் பலன் தரக்கூடிய வர்த்தகம் உள் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆகியவற்றில் உலகளவில் தலைமை பாத்திரம் வகிக்கிறது.

அதிகரித்துவரும் பன்முகத்தன்மையை  துண்டிப்பதும் அமெரிக்கா தலைமையேற்று நடத்தும் புதிய பனிப்போரை தனிப்பதும் உலகை இரண்டாக பிரித்து போட்டியிடும் இரண்டு தொகுதிகளாக ஆக்குவதே பைடன் நிர்வாகத்தின் பதில் வினையாக இருக்கிறது. பைடன் இதனை ஜனநாயகத்திற்கும் எதேச்சதிகாரத்திற்கும் இடையேயான பிளவாக காட்ட முயற்சிக்கிறார். உண்மையில் அவர் உருவாக்க முயற்சிக்கும் குழுவானது, " நீங்கள் ஒன்று எங்களுடன் இருக்க வேண்டும் அல்லது நீங்களும் எங்களுக்கு எதிரானவர்," என்ற ஜார்ஜ் புஷ்ஷின் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது. 

சீனாவை இராணுவ ரீதியாக சுற்றி வளைக்கும் பொருட்டு அமெரிக்கா ஆக்கஸ் இராணுவ கூட்டமைப்பை கடந்தாண்டு உருவாக்கியது. இக்கூட்டமைப்பு அமெரிக்காவின் இராணுவ நலன்களை பாதுகாப்பதற்காக உறுதியேற்றுக்கொண்ட நாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்கா நேட்டோவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உக்ரைனில் இருக்கும் நெருக்கடியை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அச்சிக்கலை நீடிக்க செய்வதன் மூலம் ரஷ்யாவை பலவீனப்படுத்த முயற்சித்தது. (இந்த மூலயுத்தியானது 1980களில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பாத்திரத்திற்கு நிச்சயம் இணையானது ஆகும்)

சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து ஆட்சி கவிழ்ப்பு செய்ய தொடர்ந்து ஐரோப்பிய சக்திகள் பெருமளவு அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். எனினும் அத்தகைய ஆட்சி கவிழ்ப்புகள் ஐரோப்பிய மக்களின் நலன்களுக்கு சேவை ஆற்றவில்லை. எனவேதான் இந்த சுதந்திர உறுதிப்பாடுதான் முதன்முதலில் பெருந்தொற்று துவங்கியதிலிருந்து நவம்பருக்கு முன்னதாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய காங்கிரஸ் முடிந்த சில நாட்களிலேயே பீஜிங்கிற்கு பயணம் செய்த  சோஸ் மேற்கத்திய அரசு ஒன்றின் தலைவராக இருக்கும் ஒருவர் சீனாவிற்கு சென்றடைந்த முதல்  அரசுத் தலைவராவார்.

ஜெர்மனியினரின் சில கசப்பான விமர்சனங்களையும் எல்லாம் கடந்துதான் இந்த சுற்றுப்பயணம் நிகழ்ந்தது. இங்கு அமெரிக்காவின் கர்ஜனையுடன் கூடிய நிராகரிப்பை பற்றி சொல்லத் தேவையில்லை. ஆனால் " ஒற்றைத் துருவம் மற்றும் மேலாதிக்க நாட்கள் எல்லாம் முடிந்துவிட்டது" என்ற தனக்கு முன்பிருந்த ஏஞ்சலா மெட்கல் உரைத்ததை சோஸ் நன்கு உணர்ந்திருப்பதாக தெரிகிறது. 

பீஜிங்கிற்கு புறப்படுவதற்கு முன்பாக அவர் வெளிப்படையாக கூறியது, " சீனா இப்போதும் ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவின் முக்கிய வியாபார மற்றும் வர்த்தக கூட்டாளி அதிலிருந்து நாங்கள் துண்டித்து கொள்ள விரும்பவில்லை" என்பதாகும். அட்லாண்டிக் கடற்கடந்த இந்த உடன்படிக்கைகளில் ஏற்பட்டிருக்கின்ற அத்தகையதோர் முறிவு மிகவும் வரவேற்க வேண்டியதாகும். ஐரோப்பிய மக்களும் உலகமும் புதிய பனிப்போரையும் துண்டிப்பையும்  மட்டுமே இழக்கப் போகிறார்கள். உலகத்தின் எதிர்காலமானது பன்முனை துருவமும் அமைதியுமே ஆகும். 

கார்லோஸ் மார்டின்

- சேரன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.globaltimes.cn/page/202212/1280891.shtml