தைவான் தேர்தல் மற்றும் அதன் பொருளாதாரம் பற்றி சுருக்கமான பார்வை

தமிழில் : மருதன்

தைவான் தேர்தல் மற்றும் அதன் பொருளாதாரம் பற்றி சுருக்கமான பார்வை

தைவானில் சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் இத்தேர்தலை அப்பகுதியின் புவிசார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உயர்த்தி காட்டியுள்ளன - காரணம், தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனநாயக முற்போக்குக் கட்சி (DPP) ஜனாதிபதி மற்றும் சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. தன் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல சீனாவில் இருந்து முறையான முழு சுதந்திரத்திற்கான கோரிக்கையை அக்கட்சி தொடர்ந்தால் - சீனா, அதாவது பெய்ஜிங்கால் தைவான் மீதான தீவிரமான அரசியல் தாக்குதல்கள், ஒருவேளை இராணுவ மோதலுக்கு வழிவகுக்கும்.

ஆனால், ஏகாதிபத்திய சக்திகளை கவலையடையச் செய்யும் அமெரிக்க-சீனா புவிசார் அரசியல் மோதலின் மீதான இந்த ஆவேசம், இந்தத் தேர்தலில் தைவான் வாக்காளர்களுக்கு முக்கியப் பிரச்சினை அல்ல: சாமானிய தைவான் வாசிகளுக்கோ வாழ்க்கைத் தரம் மற்றும் 

தைவான் பொருளாதாரத்தின் தொடர் மந்த நிலை ஆகியவையே முக்கிய பிரச்சனையாக உள்ளது.

தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும், ஒரு கட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும் என்றும் சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அமெரிக்காவும் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளும் சீனாவும் தைவானும் இரண்டு அரசமைப்புகளை கொண்ட ஒரேநாடு எ ன்று வாய்வார்த்தையாக கூறிவருகிறது. ஆனால் உண்மையில், பெய்ஜிங்கை வலுவிழக்கச் செய்வதற்கும், மேற்கு நாடுகளுக்கு செமி-கண்டக்டர்கள் மற்றும் ஹைடெக் கூறுகளை வழங்குவதில் தைவானின் முக்கிய பங்கை நிலைநிறுத்துவதற்கும், தைவானுக்கு இராணுவ மற்றும் நிதி ஆதாரங்களை அமெரிக்கா தொடர்ந்து உறுதிசெய்கிறது.

டிபிபி கட்சி தற்போது 63 இடங்களுடன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. 23 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையில் 19.5 மில்லியன் தைவான் குடிமக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் 20 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1949 புரட்சிக்குப் பிறகு நிலப்பரப்பை விட்டு வெளியேறி, பழங்குடி மக்களிடமிருந்து தீவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியவர்களைக் கொண்ட தேசியவாத சீனக் கட்சியான கோமின்டாங் அல்லது KMT கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று DPP மீண்டும் வெற்றி பெறும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. KMT கட்சி பெய்ஜிங்குடன் இணைந்து பணியாற்றவும், தற்போதைய சீன-தைவான் உறவுகளை உள்ளபடியே தொடர விரும்புவதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் அதன் அதிபர் வேட்பாளர் இந்த வாரம் அமெரிக்கா தைவானின் நட்பு நாடு என்றும், தைவான் ஜலசந்தியில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கூறினார். 

தீவின் மக்கள்தொகை பெருமளவில் தன் அடையாளத்தை சீனாவின் பிரதான நிலப்பகுதியுடன் பார்க்காமல் தைவானியர்களாகவே பார்க்கிறது என்பது உண்மைதான், ஆனால் பெரும்பான்மையானவர்கள் பெய்ஜிங்கை வெளிப்படையான ஆத்திரமூட்டுவதற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. பெரும்பாலான விஷயங்கள் அரசியல் ரீதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பெரும்பாலான தைவானியர்களின் பிரதான கவலை, தைவானின் தற்போதிய பொருளாதார நிலையை பற்றித்தான். அளவில் சிறியதாயினும் ஆசியப் புலிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட தைவான், 1980-களில் சீனா தன் சர்வதேச அளவில் தன் பொருளாதார வளர்ச்சியில் விண்ணை எட்டத் தொடங்கிய அதே காலத்தில் தைவானும் தன் வளர்ச்சியை முடுக்கியது.

தைவானின் வளர்ச்சியானது அமெரிக்காவின் பெரும் உள்நோக்கிய முதலீட்டை அடிப்படையாகக் கொண்டது, பல தசாப்தங்களாக KMT இன் கீழ் இராணுவ ஆட்சியால் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மலிவான உழைப்பைப் பயன்படுத்திக்கொண்டது அமெரிக்கா  (இராணுவச் சட்டம் 1987 வரை முடிவுக்கு வரவில்லை மற்றும் 1996 வரை தேர்தல்கள் நடைபெறவில்லை); சீனாவைச் சுற்றிய போர்த் தந்திரத்தின்வே ஒரு பகுதியாக தைவானின் இராணுவ சக்தியை அமெரிக்கா கட்டியெழுப்பியது.

1949 இல் வறுமையால் பாதிக்கப்பட்ட, வளம் இல்லாத, தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நாடாகத் தொடங்கிய தைவான், இப்போது உலகப் பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் முக்கியத்துவத்துடன் பல உயர் தொழில்நுட்பத் தொழில்களில் உலகளாவிய உற்பத்தி வலையமைப்பின் மையமாக மாறியுள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் $33,000 என்பது சீன நிலப்பரப்பில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகமாகும். தைவானின் மொத்த ஏற்றுமதியில் 70% அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% செமிகண்டக்டர் மற்றும் பிற மின்னணு பொருட்கள்.

ரஷ்யா எரிசக்தி மற்றும் கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதைப் போல, தொழில்நுட்ப பொருட்கள் ஏற்றுமதி எனும் அடிப்படையில் தைவான் 'ஒரு வித்தை மந்திரவாதி' ஆக மாறியுள்ளது. தைவானின் செமி-கண்டக்டர் ஏற்றுமதியில் தனது உட்ச நிலை இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மிகச்சிறந்த போட்டித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத் துறை இருந்தபோதிலும், மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி ஏணியில் தைவானின் முன்னேற்றம் தடைபடுகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜவுளிகள், அடிப்படை உலோகங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் போன்ற குறைந்த மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் தைவானின் தொழில்துறை உற்பத்தியில் பாதியை கொண்டிருக்கும் நிலை மாறவில்லை.

மார்க்சை மேற்கோள் காட்டுவதெனில் "மனித உழைப்பைக் காட்டிலும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூறுகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த முதலீடானது மொத்த மூலதனத்தின் லாபத்தில் நீண்ட கால வீழ்ச்சிக்கு வழிவகுத்தது". 

நகைச்சுவை என்னவென்றால் தற்போது அமெரிக்க மேலாதிக்கம் என்பது உள்நாட்டில் அதிக முதலீடு குறித்த பிரச்சனை என்பது மாறி, தைவானின் முக்கிய நிறுவனங்கள் சீனாவின் கைகளுக்கு போவதை தடுப்பதற்கு அவை தங்கள் நாட்டிற்கோ அல்லது தங்கள் பிடியில் செல்வாக்கில் இருக்கும் வேறு இடத்திற்கோ இடம்பெயர வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனையாக மாறியுள்ளது. தைவான் செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் கார்ப் (TSMC) என்பது உலகின் மிகப்பெரிய கணினி சில்லுகளை உற்பத்தி செய்வதோடு, 90% க்கும் அதிகமான முன்னணி தொழில்நுட்பம் கொண்ட சில்லுகளை வழங்குகிறது. இந்நிறுவனம் இன்னும் சீனாவில் நான்ஜிங் மற்றும் சாங்ஜியாங்கில் இரண்டு ஆலைகளை இயக்குகிறது, சற்றே பிந்தங்கிய தொழில் நுட்பம் கொண்ட கணினி சில்லுகளை இவ்வாலைகளில் உருவாக்குகிறது. ஆனால் முன்னணி செமிகண்டக்டர்களுக்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் ஏற்றுமதியை கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் பிற வர்த்தக பங்காளிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கியே தனது உற்பத்தியை மேற்கொள்ளுகிறது. மேலும் உற்பத்தியை ஜப்பான், ஜெர்மனி மற்றும் அரிசோனாவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆனால் இம்மாதிரியான உற்பத்தை வலையம் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கணிசமாக பலவீனப்படுத்த அச்சுறுத்துகிறது. அதே நேரத்தில், தைவானின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீனாவிற்கும் தைவானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு பெருமளவு சரிவை சந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

மேலும், தைவானின் தொழில்நுட்பத் துறையின் வெற்றியானது பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளிலோ அல்லது அதன் தொழில்நுட்பம் அல்லாத தொழிலாளர் சக்தியிலோ பிரதிபலிக்கவில்லை. தொழில்நுட்பத் துறைக்கு வெளியே, உற்பத்தித்திறன் வளர்ச்சி மந்தமாக உள்ளது மற்றும் 'ஆசியப் புலி'யின் வளர்ச்சி சீராக கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

ஆண்டு உண்மையான GDP (Real GDP) வளர்ச்சி

தொழில்நுட்பம் அல்லாத உற்பத்தி மற்றும் சேவை வேலைகளின் உண்மையான ஊதியம் (Real Wages) 2000 களின் முற்பகுதியில் இருந்து அரிதாகவே அதிகரித்துள்ளது. 

TSMC ஊழியர்களின் சராசரி ஆண்டு ஊதியம் $56,264 ஆகும், ஆனால் மற்ற துறைகளில் அந்தத் துறைகளில் உள்ள தொழிலாளர்களின் சராசரி ஆண்டு சம்பளம் $12,000க்கும் குறைவாக உள்ளது. மேலும் இந்தத் துறைகளில் ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளன, அதே நேரத்தில் இளைஞர்களின் வேலையின்மை எல்லா நேரத்திலும் இல்லாத அளவிற்கு உள்ளது.

இளைஞர் வேலை வாய்ப்பின்மை விகிதம்%

பெரும்பாலான முதலாளித்துவப் பொருளாதாரங்களைப் போலவே வருமானம் மற்றும் தனிப்பட்ட செல்வத்தின் சமத்துவமின்மை அதிகமாகவே உள்ளது. அதிக வருமானம் ஈட்டும் 20% ஊழியர்கள் குறைந்த வருமானம் கொண்ட 20% ஊழியர்களின் வருமானத்தைவிட ஆறு மடங்கு அதிகமாக பெறுகின்றனர். முதல் 1% செல்வம் வைத்திருப்பவர்கள் தைவானின் மொத்த செல்வத்திலும் 25% த்தையும் மற்றும் வருமானம் பெறுபவர்களில் முதல் 1% தைவானின் மொத்த ஊழியர்களின் வருமானத்தில் 20%-த்தை பெறுகின்றனர்.

ரியல் எஸ்டேட் துறையில் பெரும் ஊக முதலீடுகள் கடந்த ஐந்தாண்டுகளில் வீட்டு விலைகளை 50% அளவிற்கு உயர்த்தி, வேகமடைவதற்கு வழிவகுத்தது, இளம் தைவானியர்களின் வீட்டுமனை கனவுகளை எட்டாக்கணியாக்கியது.வீட்டுமனை விலைக் குறியீடு

பல நாடுகளைப் போலவே தைவானையும் கடுமையாகத் தாக்கிய தொற்றுநோயின் முடிவில் இருந்து, பொருளாதார மீட்பு பலவீனமாக உள்ளது. 2009 பெரும் மந்தநிலையின் முடிவில் இருந்ததைக் காட்டிலும் உண்மையில், 2023 ஆம் ஆண்டில், பொருளாதாரம் பல காலாண்டுகளுக்கு தொடர்ந்து சந்தித்து வரும் மந்த நிலையானது, தைவானின் மோசமான செயல்திறன் மற்றும் சீனப் பொருளாதாரத்தின் மீதான அதன் சார்பு பெருமளவு அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் உண்மையான வருமானம் 2016ல் இருந்து மிகப்பெரிய அளவில் சரிந்தது. DPP அரசாங்கம் முழு ‘சுதந்திரம்’த்திற்க்காக நிற்கலாம், ஆனால் அதன் வாக்காளர்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் அது உறுதிப்படுத்தப் போவதில்லை.

- மருதன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thenextrecession.wordpress.com/2024/01/12/taiwan-the-technology-trade-turn/

Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு