ஊழல் விசாரனை மூலம் அதானியை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்கா

ப்ளூம்பர்க் அறிக்கை

ஊழல் விசாரனை மூலம் அதானியை கட்டுப்படுத்த முயலும்  அமெரிக்கா

அமெரிக்கா, அதானி கண்டிப்பாக கொடுத்திருக்கக் கூடிய லஞ்சம் பற்றி விசாரிக்கிறது. 

நிறுவனம் புளுகு என கூக்குரலிடுகிறது.

அமெரிக்க வழக்குரைஞர்கள், அதானி குழுமத்தின் மேலான, கண்டிப்பாக நடந்திருக்கக் கூடிய லஞ்ச பரிமாற்றத்தையும், அதன் நிறுவனர் கெளதம் அதானியையும் மையப் படுத்தி ஒரு விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். இதைப் பற்றிய தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் இது தெரிய வருவதாக ப்ளூம்பர்க் அறிவித்துள்ளது.

நியூ யார்க் கிழக்கு வட்டார அமெரிக்க அரசு வழக்குறைஞர் அலுவலகத்தாலும், வாஷிங்டன் நீதித் துறையின் ஊழல் பிரிவாலும் மேற்கொள்ளப் பட்டுள்ள இந்த விசாரணை, ஏதாவது அதானி அமைப்போ, அல்லது அதன் தொடர்புள்ள தனி நபர்களோ, இந்தியாவில் அதிகாரிகளுக்கு ஒரு ஆற்றல் சக்தி நிறுவனத்த்தின் வணிகத் திட்டத்துக்கு உடந்தையாவதற்காக பணம் கொடுத்துள்ளனரா என ஆய்வு செய்கின்றன. "இந்த விசாரணையானது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனமான அஸூர் பவர் க்ளோபல் லிமிடெட்., வரையும் நீண்டுள்ளது." என அந்த அறிக்கை கூறுகிறது.

ஒரு அறிக்கையில், அதானி குழுமம், "எங்கள் சேர்மனைப் பற்றி அப்படிப் பட்ட விசாரணை நடப்பது பற்றி எதுவும் தெரியாது. மிக உன்னதமான நிர்வாகத் தரத்தோடு செயல்படும் வணிகக் குழுமம் என்ற வகையில், நாங்கள் அனைத்து இந்திய, அந்நிய ஊழல்-ஒழிப்பு, லஞ்ச-ஒழிப்பு விதிகளுக்கும் முழுமையாக கட்டுப்பட்டு செயல்படுபவர்கள்." என சாதிக்க முற்படுகின்றனர் என ப்ளூம்பர்க் குறிப்பிடுகிறது.

ப்ரூக்லின், வாஷிங்டன் நீதித் துறையின் பிரதிநிதிகள், இதைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். அஸூர் நிறுவனமும், கருத்தைக் கேட்டதற்கு, பதிலிறுக்கவில்லை.

இந்த விசாரணை, ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் (Hindenburg Research), கடந்த ஆண்டு, அதானி கூட்டுக்குழுமம், பங்கு விலைகளை தூண்டிவிட்டு, கணக்கீட்டு குற்றங்களை செய்ததாக குற்றம் சாட்டியதன் விளைவாக தொடர்வதாகும். "அதானி குழுமம், இக் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்தது; அதன் பங்கு விலைகள், துவங்கிய வீழ்ச்சியிலிருந்து பெரும்பாலும் மீண்டுவிட்டன." எனவும் அந்த அறிக்கை சொல்கிறது.

இந்த பரிசோதனைக்குப் பின்னரும், அமெரிக்க அரசு, அதானி அமைப்புகளுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த அறிக்கையின் படி, அமெரிக்காவின் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்பரேஷன், சீனாவின் செல்வாக்கை தடுக்கும் ஒரு முயற்சியாக, ஒரு அதானி நிறுவனத்துக்கு, ஶ்ரீலங்காவின் தலை நகரின் துறைமுக முனையத்தை நிறுவ 55.3 கோடி டாலர் பண உதவி செய்துள்ளது.

இந்த அதானி விசாரணை, இப்போது, முழுமையடையும் நிலையில் உள்ளது. அதுமட்டுமல்ல, நீதித் துறை, தொடர்புடையவர்களுக்கு எந்த முன்னறிவிப்பையும் தராமலே தனது விசாரணைகளை தொடர முடியும். கவுதம் அதானியும், அவரது நிறுவனமான அஸூரும், தவறேதும் செய்ததாக நீதித் துறை குற்றம் சாட்டவில்லை; எல்லா விசாரணகளுமே புகாரில் முடிவதில்லை எனவும் அறிக்கை கூறுகிறது.

அந்நிய ஊழல் நடவடிக்கைகள் சட்டம் (FCPA- Foreign Corrupt Practices Act ), அமெரிக்க அரசு வழக்குறைஞர்களுக்கு --அமெரிக்க முதலீட்டாளர்களுக்கும், அமெரிக்க வணிகத்துக்கும் தொடர்பு இருக்கும் பட்சத்தில்,-- அந்நிய ஊழல்களை விசாரிக்க அதிகாரம் அளிக்கிறது. அதானி அமெரிக்காவில் வணிகம் செய்வதில்லை, ஆனால் அதற்கு அமெரிக்க முதலீட்டாளர்கள் உள்ளனர்.

இந்த விசாரணை விரிகையில், அது அதானி குழுமத்தை சூழ்ந்துள்ள புவிசார் அரசியல் தாக்கங்களையும், அது இந்திய பொருளாதாரத்துடன் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளதயும் தெளிவாக்குகிறது. இந்தியா, சீனாவுக்கு எதிரான நிச்சய சக்தியானது என்பதால்,அது வெள்ளை மாளிகையால் கூர்ந்து நோக்கப் பட்டு வருகிறது, எனவும் அறிக்கை மேலும் கூறுகிறது. 

(ப்ளூம்பர்க் கொடுத்துள்ள தகவல்களின் படி)

- வைகறை நேசன்
(தமிழில்)