வன்மத் தாக்குதலின் தொடர்ச்சி
தீக்கதிர்

நாடாளுமன்ற மக்களவையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற அலு வல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்துள்ளார். இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திரமோடி தலைமையிலான பாஜக கூட் டணி அரசு சிறுபான்மை இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. அதனொரு பகுதியாகவே, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்த மசோதா, அரசியல் சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எதிரானது; மாநி லங்களின் உரிமையை பறிக்கக் கூடியது; கூட் டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது; மக்களை மத ரீதியாக பிளவுபடுத்துவது என்று இந்தியா கூட்ட ணிக் கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை மக்களவையில் முன்வைத்துள்ளன.
மோடி அரசின் நோக்கம், வக்பு வாரியத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைவது அல்ல; மாறாக, இஸ்லாமிய மக்களுக்குச் சொந்தமான சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக அவர் களிடமிருந்து கைப்பற்றுவதே ஆகும். இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து இஸ்லாமிய அமைப்புகளிடமோ, மதத் தலைவர்களிடமோ, மாநில அரசுகளிடமோ எந்தவிதமான ஆலோ சனையும் மேற்கொள்ளாமல் தானடித்த மூப்பாக கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என்றும், கோவில் மற்றும் சொத்துக்களை இந்துக்களிடமே ஒப்ப டைக்க வேண்டும் என்றும் பாஜக கூப்பாடு போடு கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்ப தற்காகவே இவ்வாறு கோருகிறார்கள். கோவில் அறங்காவலர்களாக இந்துக்கள் மட்டுமே நிய மிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்புவாரிய சட்டத் திருத்தத் தின்படி முஸ்லிம் அல்லாதவர்களும் வக்புவாரி யத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
குஜராத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களைக் கொன்று குவித்தது பாஜக பரிவாரம். இப்போதும் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் சிறு பான்மையோர் புல்டோசர் அச்சத்திற்கு மத்தி யில்தான், வாழ வேண்டியுள்ளது. மறுபுறத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை துண்டு துண்டாக உடைத்தது, அர சியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்தது என இஸ்லாமியர்களின் குடியுரிமை, அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என அனைத்திலும் கைவைக்கிறது மோடி அரசு.
விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்பி மக்களிடையே பதற்றத்தை ஏற் படுத்துவதே மோடி அரசின் நோக்கமாக உள்ளது. மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் தொடர்ந்து இணைந்து போராடியாக வேண்டும்.
- தீக்கதிர்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு