ஆச்சாரியார் மற்றும் பிராமணர்களின் துணையோடு திராவிட நாட்டை வெல்வோம்: ஈ.வெ.ரா.
நடவரசன் அமிர்தம்


எனது நண்பரும், தோழருமான ஆச்சார்யா இராஜகோபலாச்சாரி மற்றும் அனைத்து பிராமணர்களின் துணையோடு திராவிடநாடு விடுதலையை பெற போகிறோம்- பெரியார். 23-7-1947 சேலம்
பெரியார்- இராஜாஜி- மற்றும் திராவிடநாடு கோரிக்கை.
திராவிடநாடு அமைக்க என்னென்ன முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன் என்று
1947 ஜூன் 23 ஆம் நாளில், சேலத்தில் நடந்த கூட்டத்தில் பெரியார் கூறிய செய்தி.
"நான் நமது திராவிட தோழர்களை மாத்திரம் நம்பி தனி தமிழ்நாடு கேட்கவில்லை.
பலருக்கு நான் சொல்லப்போகும் செய்தி பிடிக்காமல் போகலாம்.
ஆனால் நான் எனது இருதயத்தில் இருந்து கூறுகிறேன்.
எனது நண்பனும் , தோழருமான ஆச்சார்யா இராஜகோபலாச்சாரியின் ஆதரவை திராவிடநாடு விடுதலைக்கு பெற போகிறோம்.
இராஜாஜியிடம் மாத்திரம் அல்ல எல்லா பிராமணர்களும் நமது தனி திராவிடநாடு கோரிக்கையை ஆதரிக்க போகிறார்கள்.
நமது தோழர்கள் சிலர்
இராஜாஜியின் வார்த்தையை நம்பலாமா என்றும்,
சிலர் அவர் சந்தேகத்திற்கு உரிய நபர் என்றும் கூறுகின்றனர்.
ஆனால், அவர் இன்று வரை அவர் எனக்கு அளித்த வாக்கை காப்பாற்றியவர்.
நானும் தோழர் ஆச்சார்யா இராஜாஜியும் சந்தித்து பொழுது " நாம் சுயராஜ்யம் அடைகிறோமோ இல்லையோ , வட இந்தியரின் பிடியில் இருந்து விடுபடுவோம்" என்று கூறினார்.
இந்த மேற்குறிப்பிட்ட தேதியில் வந்த பெரியாரின் பேச்சுக்கள் , பெரியார் பற்றி வந்த எந்த புத்தகத்திலும் இல்லை.
இனையத்தில் தான் உள்ளது.
சில நன்பர்கள் இனைய செய்தி என்றால் கோபப்படுகிறார்கள்.
இதே போல் தான் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ,
கீழ் வெண்மணி படுகொலைக்கு பெரியாரின் எதிர்வினை என்ன என்று நன்பர் கதிர்நிலவனும், நானும் சேர்ந்து பல புத்தகங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடைசியாக இனையத்தில் தான் தேடி எடுத்தோம்.
சரி அது இருக்கட்டும்.
பெரியார் அவர்கள் ஏன் இந்த உறுதிமொழியை சேலம் கூட்டத்தில் கொடுத்தார் என்றால்.
1946ல், இராஜாஜி அவர்கள் பாகிஸ்தான் தனிநாடு குறித்து சி.ஆர் திட்டம் என்ற ஒன்றை தயாரித்து காங்கிரஸிடம் கொடுத்தார்.
காங்கிரஸ் திரு.ஜின்னாவிடம் கொடுத்தது, ஜின்னா இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி விட்டார்.
அது என்ன சி.ஆர்(சி.இராஜாஜி) திட்டம்.
பாகிஸ்தான் விடுதலை கோரும் பகுதியில், இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் முடிவு எடுத்து கொள்ளலாம் என்பதே , சி.ஆர் திட்டம்.
திரு.ஜின்னா, தனிநாடு கோரிக்கையை தவிர எதையும், ஏற்க மாட்டேன் என்று உறுதியாக இருந்து , பாகிஸ்தான் விடுதலையை பெற்று விட்டார்.
இங்கு வருவோம் பாகிஸ்தானுக்காக காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்ட சி.ஆர் திட்டத்தை, திராவிட நாடு கோரிக்கைக்காக காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதா என்றால்,
இல்லை.
அப்படி ஒரு திட்டத்தை காங்கிரஸுடம் இவர்கள் கேட்கவும் இல்லை, அவர்கள் தரவும் இல்லை.
பிரிட்டிஷிடமும் கேட்கவும் இல்லை,
அவர்கள் உறுதிமொழியை தரவும் இல்லை.
பின் எப்படி இந்த உறுதிமொழியை சேலத்தில் பெரியார் தந்தார் என்றும் தெரியவில்லை.
ஆனால் இராஜாஜியும், மற்றும் பிராமணர்களைம் எந்த அடிப்படையில் பெரியார்
திராவிட நாடு கோரிக்கைக்காக நம்பினார் என்றும் தெரியவில்லை.
திராவிட கழகம் என்று பெயர் வைத்தால் பார்ப்பனர்கள் வரமாட்டார்கள், என்று கூறியவர்கள்,
கடைசியில் குல்லுக பட்டர் இராஜாஜி மற்றும் பார்ப்பனர்கள் துணை கொண்டு திராவிட நாடு அமைக்க போகிறோம் என்றது விந்தையே.
(பதிவு: விசுவநாதன் கரிகாலன்)
நடவரசன் அமிர்தம்
https://www.facebook.com/100002825282036/posts/24166528783024628/?rdid=ZmxUZaGLF11vKfyt
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு