தமிழ்நாட்டு ஊடகங்களில் பாசிச பூச்சாண்டி...

SivaPriyan Sempiyan

தமிழ்நாட்டு ஊடகங்களில்  பாசிச பூச்சாண்டி...

தமிழ்நாட்டு ஊடகங்களில் "பாசிச பாஜக... பாசிச பாஜக..." என்று எதற்கு எடுத்தாலும் பாசிச பூச்சாண்டியைக் காட்டி...

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை பேசி தமிழ்நாட்டில் நடந்த விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை மறைப்பது...

ம.பி.,யில் பெண்களின் பாதுகாப்பற்ற நிலை பேசி அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமையை மறைப்பது...

பாஜக இலாட்டரி டிக்கெட் மார்ட்டினிடம் வாங்கிய தேர்தல் பத்திர நிதியை பற்றி நீட்டி முழக்குவது திமுக வாங்கி 650+ கோடி நிதியைப் பற்றி மூச்சுவிட மறுப்பது...

மகாராஷ்டிராவில் மசூதிகளை திரை மூடி மறைத்ததைப் பற்றி பேசுவது இங்கே 

புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட புதுக்கோட்டை அம்மாப்பட்டினம் ரஹ்மத் நகர், காயிதே மில்லத் நகர் முஸ்லிம்கள் குறித்து ஒன்றுமே தெரியாதது போல நடிப்பது... 

உ.பி.,யில் அமைக்கப்பட்டுள்ள கோசாலைகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் கோசாலைகளை அமைத்த சேகர்பாபுவுக்கு கொடிப் பிடிப்பது...

அவருடைய ஆட்களை அடியாட்கள் போல தன்னுடைய சொந்த பஞ்சாயத்துகளுக்கு பயன்படுத்துவது... 

இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தும் இன அழிப்பு போரை நிறுத்த வலியுறுத்தி திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆகா ஓகோவென பாராட்டுவது, அங்கே மக்களை கொன்ற ஆயுதங்களில் சிலவற்றை தமிழ்நாடு Start Up திட்டத்தில் மானியமும் உதவியும் பெற்ற ஒரு நிறுவனம் தயாரித்து அளித்தது குறித்து பேசாமல் கடப்பது...

சாதியைக் கேட்பதும் தவறு, சாதியை சொல்வதும் தவறு. அதைவிட தவறு சாதியை சொல்லி பிழைப்பது. சென்னையில் ஒரு சாதி பெயரை சொல்லி பிழைப்பது, தென் தமிழ்நாட்டில் வேறொரு சாதி அடையாளத்தை காட்டி பிழைப்பது... இதை எல்லாம் சமூக நீதி கணக்கில் எழுத சொல்கிறார்.

தொடக்கத்தில் விசிக ஆதரவைப் பெற அண்ணன் தரும் என்றும் தாத்தா அம்பேத்கர் என்றும் பாபா சாகேப் அவர்களின் ஊடாக புகழ் வெளிச்சத்தை அடைய நினைத்தது, அவர்களின் மேடையில் பைத்தியக்காரத்தனமாக கோர்ட்டு சூட் போட்டு அரசியலற்ற பேச்சுகளை பேசி நடித்தது, விசிகவினர் மது ஒழிப்பு மாநாடு நடத்த முனைந்ததும் திமுகவின் காசுக்காக அப்படியே பல்ட்டி அடித்து விசிக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து தலைகீழாக மாறியது...

அரசுப் பணியாளர்களின் Transfersகளில் தொடங்கி டெண்டர்கள் வரை எங்கெல்லாம் பைசா பார்க்க முடியுமோ அங்கெல்லாம் பைசா பார்த்தது என...

கடைசியாக மூச்சுக்கு முந்நூறு முறை விஜயை கடித்தது, உதயநிதிக்கு ஜால்ரா அடிப்பது... இதன் மூலம் வெளிநாடு இன்பச்சுற்றுலா சென்றது என...

"நாயும் பிழைக்காது இந்த பிழைப்பு" என நாஞ்சில் சம்பத்தே ஏசும் பேசும் அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழ்ந்தது...

இந்நிலையில், கலெக்சனில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் முன்னணி நட்சத்திர ஊடகவியலாளர்களுக்கு வரும் 'கட்டிங்'கை கண்டு கடிப்பாகி வெறிகொண்டு வேதனையில் புலம்புகிறார்.

இந்த ஆளை எல்லாம் ஊடகவியலாளர் என நம்ப வைத்த பிரபல ஊடகமொன்று அண்மையில் தனது மக்கள் கருத்துக் கணிப்புக்கு வைத்த தலைப்பு தெரியுமா? 

தலைப்பு: தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியது 

திமுகவுக்கு இலாபமா? 

அதிமுகவுக்கு நட்டமா? 

இப்படியான ஊடகங்களுக்கு இங்கே அந்த நபர் பேசுவதுதான் ஊடக அறிவுஜீவித்தனமாக கருதப்படுகிறது.

அசல் பிரச்னைகளை மடைமாற்றி திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளை - கனிமவளக் கொள்கை - தொழிலாளர் விரோத போக்கு - வரிச்சுமையால் மக்கள் படும் பாதிப்புகள் - போதைப் பொருட்களின் கட்டற்ற பரவல் - அரசுத்துறைகள் தோறும் நடக்கும் இலஞ்ச இலாவண்யங்களை - சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு பற்றி பேசாமல் இலாவகமாக மறைத்து மக்களை ஏய்த்து ஆட்சியாளர்களிடம் பொறுக்கித்தின்ற இத்தகைய பயல்கள் ஊடகவியலாளர்களா?

SivaPriyan Sempiyan

https://www.facebook.com/100036407588956/posts/1615998839623687/?rdid=NtA0guJaNs0kLupR

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு